பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 10 ஜூன், 2013


பரங்கிப்பேட்டை: மாவீரர் சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி நினைவு கால்ப்பந்தாட்ட போட்டிகளை பரங்கிப்பேட்டை நகரில் முதன் நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் அதனை ஏற்பாடு செய்தவர்கள். . பரங்கிப்பேட்டை இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தம் வகையிலும் இளம் கால்ப்பந்து விளையாட்டாளர்களின் கால்ப்பந்து திறனை அறிந்துக் கொள்ளும் வகையிலும் இப்போட்டிகள் ஒரு நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.

பரங்கிப்பேட்டை அணி நான்காவது இடத்தை பெற்றாலும் பரங்கிப்பேட்டை அணிக்கு இது முதல் அனுபவம் என்பதால் அனுபவமிக்க அணிகளுடன் ஈடுக்கொடுத்து திறமையாக விளையாடி அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.. பரங்கிப்பேட்டையின் இந்த  இளம் வீரர்களுக்கு விளையாட்டு பயிற்ச்சி மற்றும் உடற்ப்பயிற்ச்சியை முறையாக வழங்கினால் அவர்கள் மாநில அளவில் விளையாட தகுதிப்பெறுவார்கள் என்கிற ஒத்த கருத்து எழுந்துள்ளது.

கால்பந்து விளையாட்டு என்பதற்கு மட்டும் இல்லாமல் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கும் பரங்கிப்பேட்டை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவது வாத்தியர்ப்பள்ளி திடலைத்தான். இதை பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளாராக வந்திருந்த H.M ஹனிபா இதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்  "தக்க வைத்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு வரியில் கூறினார். அந்த வகையில், அனைத்து விளையாட்டிற்க்கும் உகந்த திடலாக இருக்கும் இத்திடலை குறைந்த பட்சம் கம்பி வேளிகலாவது அமைத்து பாதுகாக்கவில்லையெனில் ஆக்கிரமிப்புகளை தவிர்க்க இயலாது என்கிற கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.

பரங்கிப்பேட்டைக்கு பெயர் தேடித்தந்த பூப்பந்தாட்டம், டென்னிஸ் விளையாட்டு வரிசையில் இன்று கால்பந்து விளையாட்டு மிக நன்றாகவே கால் பதித்துள்ளது.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234