காலியாக உள்ள 1291 அரசுப் பணியாளர்களை நியமிக்க எழுத்து தேர்வு -
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தலைமை செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் (124), கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் (100), உள்ளாட்சி நிதி தணிக்கை மற்றும் உள்தணிக்கைத் துறையில் உதவி ஆய்வாளர் (151), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (128), மாவட்ட வருவாய்த் துறை உதவியாளர் (637) என்று 16 பிரிவுகளில் 1,291 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 1,213 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு உண்டு. மற்ற பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வில் பங்கேற்க ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிசம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்குள், சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் 22ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும். தமிழகத்தில் 236 அஞ்சலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அதற்கான கட்டணம் ரூ.30. தேர்வு கட்டணம் ரூ.100. விண்ணப்பம் கிடைக்கும் அஞ்சலகங்கள் மற்றும் தேர்வு பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணைய தளத்தில் அறியலாம்.
தகவலுக்கு நன்றி : இறைநேசன்
பரங்கிப்பேட்டை.