
புதன், 30 செப்டம்பர், 2009
திங்கள், 28 செப்டம்பர், 2009
ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
இறப்பு செய்தி
இன்ஷா அல்லாஹ் இன்று (27.09.2009 - ஞாயிறு) மாலை 6 மணிக்கு நல்லடக்கம் கிலுர் நபி பள்ளியில்.
சனி, 26 செப்டம்பர், 2009
வியாழன், 24 செப்டம்பர், 2009
புதன், 23 செப்டம்பர், 2009
செவ்வாய், 22 செப்டம்பர், 2009
திங்கள், 21 செப்டம்பர், 2009
ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
சிங்கை பரங்கியர்களின் பெருநாள் தொழுகை சந்திப்பு


இன்று (20.09.2009) காலை 8.30 மணிக்கு சிங்கபூர், மஸ்ஜித் அப்துல் கபூர், மஸ்ஜித் பென்கூலன், மற்றும் மஸ்ஜித் சூலியா பள்ளி வாயில்களில் நோன்பு பெருநாள் தொழகை வெகு சிறப்பாக நடை பெற்றது.
தொழுகைக்கு பிறகு நமதூர் சகோதரர்கள் அனைவரும் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
மேலும், சிங்கை வாழ் பரங்கியர்களின் சார்பாக, உலகெங்கும் வாழும் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
தகவல்: தாரிக், சிங்கபூர்.
வியாழன், 17 செப்டம்பர், 2009
புதன், 16 செப்டம்பர், 2009
வேலை தேடி சென்ற பரங்கிப்பேட்டை வாலிபர் சென்னையில் மரணம்


பரங்கிப்பேட்டை பண்டக சாலையை சேர்ந்தவர் சமீம் அஹமது (த.பெ.: மர்ஹூம் மாலிக் அஹமது) வயது சுமார் 38.
இவர் கடந்த 15 நாட்களாக சென்னையில் வேலை தேடி திரிந்த நிலையில் கடந்த வெள்ளி கிழமை அன்று அதிகாலையில் ஃபஜர் தொழுகை நேரத்தில் மண்ணடி, செம்புதாஸ் தெரு பள்ளிவாசல் வெளியில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.
பி.காம் பட்டதாரியான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டில் வேலை பார்த்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட பழக்கத்தில் இலங்கையை சார்ந்த ஒரு பெண்ணை இங்கு அழைத்து வந்து திருமணம் செய்து நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில் இவருடைய தாயார் இறப்பிற்கு பிறகு மன-உளைச்சல் ஏற்பட்டு அதனை தொடர்ந்து வாத நோயால் பாதிக்கப்பட்டு முழு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இருந்தும் மன-உளைச்சல் காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட கசப்புணர்வு சந்தேகமாக மாறியதால் தனது இரு பிள்ளைகளுடன் இவரது மனைவி இலங்கைக்கு திரும்பி விட்டார்.
இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்ட இவர் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது உறவினர் மூலம் தனது மனைவி-பிள்ளைகளை மீண்டும் என்னிடம் திரும்பி வந்துவிடச் சொல்லுங்கள், வேலைக்கு சென்று ஒழுங்காக கவனித்து கொள்கிறேன் என்று முறையிட்டுள்ளார். ஆனால் யாரும் சரியான முயற்சி எடுக்காத நிலையில் சென்னைக்கு வேலை தேடி சென்றுள்ளார்.
மண்ணடி செம்புதாஸ் தெருவில் பள்ளிவாசலுக்கு வெளியில் பிளாட்பாரம் போன்ற ஒரு இடத்தில் தங்கி வந்திருக்கிறார். கடந்த வாரம் வியாழன் மாலை சற்று பலவீனமாக இருந்துள்ளதை அஸர் தொழுகையில் சிலர் பார்த்துள்ளனர். அன்று நோன்பு பிடித்திருந்ததாகவும் சிலர் கூறினர்.
இந்நிலையில் மறுநாள் காலை வெள்ளி பஜர் தொழுகை சமயத்தில் உட்கார்ந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார். தொழுகைக்கு வந்தவர்கள் இதனை பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவித்து பரிசோதத்தில் இவருடைய பாஸ்போர்ட் காப்பி மற்று சான்றிதழ்கள் வைத்து இவர் பரங்கிப்பேட்டையை சார்ந்தவர் என்று அறிந்து, உடன் மண்ணடி பகுதியில் தங்கியிருந்த பரங்கிப்பேட்டை சகோதரர்களை தொடர்பு கொண்டு முறையாக உறுதி செய்யப்பட்டது.
அடையாளம் காட்டிய இந்த ஒரு சில சகோதரர்கள் இவரது உறவினருக்கு தெரிவித்ததுடன் ஜமாஅத் தலைவருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் பள்ளியில் குளுப்பாட்டி-சுத்தம் செய்து கபன் ஆடை அணிவித்து மருத்துவ சான்றிதழ் பெற்று அவசர ஊர்தியில் எடுத்து பரங்கிப்பேட்டை அண்ணா நகரில் வசிக்கும் இவரது மூத்த சகோதரர் நிசார் மற்றும் மைத்துனர் இல்யாஸ் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.
பின்பு ஒரு சில மணிநேரத்திற்கு பின், மீராப்பள்ளியில் மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
செவ்வாய், 15 செப்டம்பர், 2009
திங்கள், 14 செப்டம்பர், 2009
ஞாயிறு, 13 செப்டம்பர், 2009
சனி, 12 செப்டம்பர், 2009
சீர்பெறும் நீர்நிலை - செய்தியும் கோணமும்

ரெட் கிராஸ் மருத்துவ முகாம்


இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை, கெனடியன் ரெட்க்ராஸ் உறுதுணையுடன் நடத்திய மருத்துவ முகாம் இன்று காலை ஒரு மணி வரை சலங்குகாரத்தெரு டாடா கம்யுனிட்டி ஹாலில் நடைபெற்றது. இதனை கடலூர் மாவட்ட ஐ.ஆர். சி. எஸ் கிளை ஒருங்கிணைத்து நடத்தியது. பொதுமக்கள் பலர் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. ரெட் கிராஸ் உள்ளூர் ஒருங்கிணப்பாளர் சுபாஷ் அவர்கள் நம்மிடம் ரெட் கிராஸ் செய்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து பகிர்ந்து கொண்டார். தற்போது தாய் செய் நலப்பணிகளை பிரதான நோக்கமாக கொண்டு ஒரு ப்ராஜக்ட் ஒன்றை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.