திங்கள், 18 மே, 2009
கோடைக்கால தீனியாத் போட்டிகள்
பல வயது பிள்ளைகளை வகுப்பு வாரியாக பிரித்து அவர்தம் திறமைகளை சிறப்பாக செம்மை படுத்தி அவர்களை மேடையில் சிறப்பாக வெளிப்படுத்த தயார்படுத்துவது எனும் மாபெரும் பணியை இத்தனை சிறப்பாக செம்மையாக புரிந்திருக்கும் ஜமாத்துல் உலமா பேரவையினருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.
ஏராளமான பிள்ளைகளும் தாய்மார்களும் பெரியவர்களுமாக கலந்து கொண்டனர். மண்டபம் போன்ற அடைந்த இடத்தில் அல்லாமல் திறந்த வெளியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது சிறப்பு.
மேடை மிக எளிமையான முறையில் இருந்தது ஆனால் அதில் அமர்ந்து இருந்தவர்களும் சரி அதில் ஏறி கிராத் ஒதினவர்களும், பாங்கு சொன்னவர்களும், பேசி அசத்திய வருங்கால ஆலிம்களும் தங்களது வெளிப்பாடுகளால் மிகவும் நம்பிக்கை ஊட்டினார்கள்.
இதற்க்கு முன் நடைபெற்ற போட்டிகளிலும் மேடையிலும் பல சிறப்புகள் இருந்தன.
ஒரு வாண்டு, இரண்டு செண்டி மீட்டர் உயரத்தில் கைலி சட்டை போட்டு தொப்பி கொண்டு அட்சர சுத்தமாக தஜ்வீதுடன் இறை வார்த்தைகளை ராகமாக இசைத்ததை காணும் எந்த உள்ளமும் உருகாமல் இருக்க முடியாது.
சிறுவர்கள் முழங்கிய பாங்கொலியும், சிறுமிகள் சிந்திய மழலை பேச்சுக்களும் அனைவரின் மனதையும் உணர்வால் அசைத்துப்பார்த்தன.
ஆறாம் வகுப்பு (தான் படிப்பார்கள் என்று நினைக்கிறேன்) ரஜினா பேகம் மற்றும் உம்முள் ஹபீபா நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும் மாண்பையும் பற்றி தெள்ளத்தெளிவாக பாடமெடுத்ததை கேட்க்கும் போது நாளைய இஸ்லாமிய சமுதாயத்தினை பற்றி நம்பிக்கை துளிர்த்தது.
எந்த ஒரு சமகால பேச்சாளர்களுக்கும் சளைத்தவனில்லை நான் என்பது போல் முழங்கிய பாரிஸ் அஹமது எனும் நல்முத்தை பேச்சு முடிந்தவுடன் நாம் நம்மோடு அணைத்து வாழ்த்து சொல்ல நேர்ந்தது. இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் அவர் பேசிய மேடை பேச்சில் அத்தனை தெளிவு, தீர்க்கம் முக பாவனை மாறுதல்கள், கையசைவுகள் அத்தனையும் பிரமாதம். கவனிக்கப்பட வேண்டிய ஓர் வருங்கால பேச்சாளர் பாரிஸ் அஹமது.
முத்தாய்ப்பாக அமைந்தது ஹவுஸ் பள்ளி தெருவை சேர்ந்த ஜக்கரியா நானா அவர்களின் உரை. இத்தனை காலம் இவர்களை யார் எங்கே ஒளித்து வைத்தார்கள் என்று ஏங்க வைக்கும் உரை. கம்பீரமான வார்த்தைகளால் கல்விக்கு இஸ்லாம், நபி (ஸல்), தந்திருக்கும் முக்கியத்துவத்தை பற்றியும் முஸ்லிம்கள் கல்வியை ஆண்ட வரையில் எப்படி இருந்தார்கள் என்றும் வரலாற்று குறிப்புக்களையும் நவீன மாற்றங்களையும் அழகிய கலவையாக கலந்து அவர் தந்த அந்த பேருரை அவர்தம் ஞானத்தின் பரிமாணங்களை வெளிக்கொண்டு காட்டியது. இது போன்ற தெளிவான உரையை பரங்கிப்பேட்டையில் கேட்டு ரொம்ப நாட்க்களாகி விட்டன. ஜக்கிரியா நானா அவர்களை இந்த சமுதாயம் சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை எனும் ஆதங்கம் தோன்றியது.
கடைசியாக பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.
கற்றவர்கள் கற்றவர்கள் தான் என்பதை பரங்கிப்பேட்டை நகர ஜமாத்துல் உலமா பேரவை இந்த அற்புத நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நிரூபித்து உள்ளது. வாழ்த்துக்கள்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் சுற்றி வளைப்பு கடலூரில் தீவிர கண்காணிப்பு!
கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
வெளிநாடுகளில் உயர் கல்வி படிக்க வாய்ப்பு

ஆஸ்திரேலியா:
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு ஆஸ்திரேலியா செல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்குச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கின்றன.
மேலும் விவரங்கள் கிடைக்குமிடம்:
Australian Education International,
Australian High Commission,
1/50-G, Shantipath, Chanakayapuri,
New Delhi-110021. Tel. 011 26888223 ext 172.
E-mail: anu.jain@dfat.gov.au
ஜெர்மனி:
ஜெர்மனி பல்கலைக்கழகங்களில் படித்த என்ஜினியர்களுக்கு எல்லா நாடுகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
ஏப்ரல் மற்றும் அக்டோபரில் வெளிநாட்டு மாணவர்கள் ஜெர்மனியில் சேர்க்கப்படுகின்றனர்.
ஜெர்மனியில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் வசூலிப்பதில்லை.
கீழ்க்காணும் முகவரியில் மேலும் தகவல் பெறலாம்:
Max Muller Bhavan,
13, Khader Nawaz Khan Road, Chennai-600006.
phone- 91-44-2 833 1442/50 Fax 91-44-28331450.
E-Mail: daadch@vsnl.in - Internet: www.daad.de/ibz/chennai.
ஜப்பான்:
ஜப்பானில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. 6 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
இப்படிப்புகளுக்கு ஜப்பான் அரசின் ஸ்காலர்ஷிப்பும், சில தனியார் நிறுவனங்களின் ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்படுகிறது.
சென்னையில் உள்ள ஜப்பான் கான்சுலேட் ஜெனரல் அலுவலகத்தில் மேலும் விவரங்களைப் பெறலாம்.
முகவரி:
12/1 Cenatoph Road, 1st Street, Teynampet,
Chennai - 600018. India. Tel. 044-24323860.
Fax- 044-24323859, Email-cgjpchen@eth.net
ரஷியாவில் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க், வோல்கோகிராட் உள்பட சில பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்க வாய்ப்புள்ளது.இங்கு படிக்கும் மாணவர்கள் பல நாடுகளிலும் மதிக்கப்படுகின்றனர்.
ஹையர் செகன்டரி படிப்பில் 40 சதவீத மதிப்பெண் எடுத்தவர்கள் பி.இ. படிப்பில் சேரலாம். இது 4 ஆண்டு படிப்பாகும். அதற்கு முன்பாக ஓராண்டுக்கு ரஷிய மொழியைப் படிக்க வேண்டும்.
படிப்பு மற்றும் இடத்துக்கு ஏற்ப கல்விக் கட்டணம் மாறுபடும். ரஷிய மொழியில் படித்தால் கட்டணம் குறைவு.
முகவரி:
74, கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்பேட்டை,
சென்னை-600 018,
போன்: 044-24986860/ 8215, 52177188.
பேக்ஸ்: 044-24986860.
email: info@studyabroadedu.com
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள்.
அங்கு மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.இங்கிலாந்தைச் சேர்ந்த நியூ செளத் வேல்ஸ் பல்கலைக்கழகம், சிங்கப்பூரில் 2007-ம் ஆண்டில் சிங்கப்பூரில் தனது கிளையைத் தொடங்கவுள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களோடு கூட்டு ஒப்பந்தங்களை வைத்துள்ளன.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி உயர்வால் மாவட்டத்தில் சதவீதம் அதிகரிப்பு

கடலூர் மாவட்டத்தில் 66 அரசு பள்ளிகள், 9 நலத்துறை பள்ளிகள், ஒரு நகராட்சி பள்ளி, 29 நிதியுதவி பள்ளிகள், ஒரு சுய நிதி பள்ளி, 42 மெட்ரிக் பள்ளிகள் என 148 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இவைகளில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 58 சதவீதமாக இருந்த தேர்ச்சி இந்தாண்டு 63.94 என உயர்ந்துள்ளது.
அடுத்ததாக நிதியுதவி பள்ளிகளில் 81 ஆக இருந்தது, சொற்ப அளவில் 81.32 ஆக உயர்ந்துள்ளது.
நலத்துறை பள்ளிகளில் 63 ஆக இருந்த தேர்ச்சி சதவீதம் 62.09 ஆகவும், நகராட்சி பள்ளி 63 ஆக இருந்தது 58.30 ஆகவும், சுய நிதி பள்ளிகளில் 95 ஆக இருந்தது 93.43 ஆக குறைந்தும், மெட்ரிக் பள்ளிகளில் 95 ஆக இருந்த தேர்ச்சி 93.19 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் மட்டும் இந்த ஆண்டு 5.94 சதவீதம் உயர்ந்ததன் காரணமாக மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதமும் உயர்ந்துள்ளது.
ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்த 3,013 மாணவ, மாணவிகளின் மீது ஆசிரியர்கள் கவனத்தை செலுத்தியிருந்தால் 87.40 சதவீதம் தேர்ச்சி பெற்று 12வது இடத்திற்கு முன்னேறி இருக்கலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 655 பேர் தேர்வு எழுதியதில் 17 ஆயிரத்து 662 பேர் தேர்ச்சி பெற்று 74.66 சதவீதத்தை எட்டியுள்ளனர்.
ஒரு சில பாடங்களில் கேள்வித்தாள் கடினம் மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கெடுபிடி போன்றவைகளை மீறியும் கடந்த ஆண்டை விட 3.57 சதவீதம் கூடுதலான தேர்ச்சி கிடைத்துள்ளது.
மாவட்டத்தின் ஒரு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்கும் விதத்தில் சி.இ.ஓ., முயற்சியால் மற்ற பள்ளிகளிலிருந்து வாரத்தில் 2 நாட்கள் 'டெபுடேஷன்' மூலம் பணி நியமித்து பாடங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாவட்டங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்தாலும் கடலூர் மாவட்டம் முன்னேறியுள்ளது ஆறுதலான விஷயம்.
இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தியிருந்தால் 12வது இடத்திற்கு முன்னேறியிருக்கலாம்.
மாவட்டம் முழுவதும் தேர்வு எழுதிய 23 ஆயிரத்து 655 பேரில் ஏதோ ஒரு பாடத்தில் மட்டும் தோல்வியடைந்து தேர்ச்சியை நழுவ விட்டவர்கள் எண்ணிக்கை 3,013 பேர்.
ஒரே ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சியை நழுவ விட்ட மாணவர்கள் அறவே படிக்காதவர்களாக இருக்க முடியாது.
ஓரளவு சரியாக படிக்காத மாணவர்கள்தான் ஒரு பாடத்தில் கோட்டை விடுவர்.
இந்த மாணவர்களை முறையாக கண்டு அவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்து தேர்ச்சி பெற வைத்திருந்தால் 87.40 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 12வது மாவட்டமாக கடலூர் மாவட்டம் இடம் பிடித்திருக்கும்.
ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பறிபோனது பெரும்பாலும் 10 முதல் 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட கல்வித்துறையின் முயற்சியால் 'மினிமம் மெட்டீரியல்' எனப்படும் குறைந்தபட்ச பாடத்திட்டத்தின் கீழ் கேள்வி-பதில் புத்தகம் தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்த புத்தகத்தை மாணவர்கள் படித்தால் தேர்ச்சி பெறாதவர்கள் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற முடியும்.
ஆனால் இந்த புத்தகம் மாணவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் வேதியியல் பாடத்தில் மட்டும் 403 பேரும், இயற்பியலில் 634 பேரும், கணிதப் பாடத்தில் அதிகபட்சமாக 874 பேர் தேர்ச்சி பெறவில்லை.
இவர்களுக்கு குறைந்தபட்ச பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கேள்வி-பதில் அடங்கிய புத்தகம் வழங்கி, அவர்கள் படிக்க உறுதுணையாக இருந்திருந்தால் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தியிருக்கலாம்.
இந்த குறைந்தபட்ச பாடத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட கணிதப் பாடத்திட்டத்தை திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் பின்பற்றி கடலூர் மாவட்டத்தை விட கணிதத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 8,66, 983 ஓட்டுகள் எண்ணப்பட்டன
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649.
தேர்தலில் பதிவான ஓட்டுகள் 8 லட்சத்து 66 ஆயிரத்து 983.
இதில் ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 30 ஆயிரத்து 368ம், பெண் வாக்காளர்கள் 4 லட்சத்து 36 ஆயிரத்து 615 ஓட்டுகளும் பதிவானது.
மொத்த சதவீதம் 76.09.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஓட்டு போட்டவர்கள் 8 லட்சத்து 10 ஆயிரத்து 986 பேரும், பிற ஆவணங்களை காண்பித்து ஓட்டு போட்டவர்கள் 56 ஆயிரத்து 90 பேரும் அடங்குவர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகளான குன்னத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 696 ஓட்டுகளில் 77 சதவீதம் பதிவானது.
அரியலூரில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 433 ஓட்டுகளில் 79 சதவீதம் பதிவானது.
ஜெயங்கொண்டத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 67 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.
புவனகிரியில் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 15 ஓட்டுகளில் 78 சதவீதம் பதிவானது.
சிதம்பரத்தில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 96 ஓட்டுகளில்73 சதவீதம் பதிவானது.
காட்டுமன்னார் கோவிலில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 676 ஓட்டுகளில் 76 சதவீதம் பதிவானது.
இந்த ஓட்டுகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.
சிதம்பரம் தொகுதியில் 11 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியான விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க., கூட்டணி சார்பில் பா.ம.க., பொன்னுசாமியும், தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமாரும் போட்டியிட்டனர்.
இதில் வி.சி., திருமாவளவனுக்கும், பா.ம.க., பொன்னுசாமிக்கும் கடும் போட்டி நிலவியது.
சிதம்பரம் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 25 ஆயிரத்து 649 பேரில் 8 லட்சத்து 71 ஆயிரத்து 76 பேர் ஓட்டளித்தனர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் கல்லூரியில் சிதம்பரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
துவக்கம் முதல் திருமாவளவன் முன்னிலை வகித்தார்.
இதில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 804 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
பா.ம.க., வேட்பாளர் பொன்னுசாமி 3 லட்சத்து 29 ஆயிரத்து 721 ஓட்டுக்கள் பெற்று தோல்வியடைந்தார்.
திருமாவளவன் தம்மை எதிர்த்து போட்டியிட்ட பொன்னுசாமியைவிட 99 ஆயிரத்து 83 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார்.
தே.மு.தி.க., சார்பில் சபா சசிக்குமார் 66 ஆயிரத்து 283 ஓட்டுக்கள் பெற்றார்.
பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 5,718 ஓட்டுக்களும், ராஷ்டிரிய கிரந்திகாரி சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் செல்வகுமார் 3,140 ஓட்டுக்களும், மணிகண்டன் (சுயே) 9799, மருதமுத்து (சுயே) 8367, கவியரசன் (சுயே) 6173, சுசீலா (சுயே) 4178, தர்மலிங்கம் (சுயே) 2678, சக்திவேல் (சுயே) 1,950, செந்தமிழ் செல்வி (சுயே) 1500, கனகசபை (சுயே) 1398 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.
தபால் ஓட்டில் திருமாவளவனுக்கு 825 ஓட்டுக்களும், பொன்னுசாமிக்கு 258 ஓட்டுக்களும், சபா சசிக்குமாருக்கு 10 ஓட்டுகளும், தர்மலிங்கத்துக்கு 2 ஓட்டுகளும் கிடைத்தன.
தபால் ஓட்டில் 1376 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இத்தொகுதியில் பா.ம.க.,வைத் தவிர தே.மு.தி.க., உள்ளிட்ட 11 வேட்பாளர்களும் டிபாசிட் இழந்தனர்.
விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் அனைவரும் விடைத்தாள் மறு கூட்டல் மற்றும் நகல் வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இயற்பியல், வேதியியல், உயிரியியல், கணிதம், தாவரவியல், விலங்கியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு விடைத்தாள் ஜெராக்ஸ் வேண்டுவோர் பாடம் வாரியாக 275 ரூபாய்க்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு வரைவோலை எடுக்க வேண்டும்.
அதேப்போன்று மறு கூட்டலுக்கு தமிழ், ஆங்கிலம், உயிரியியல் போன்ற இரண்டு பேப்பர் உள்ள பாடங்களுக்கு 305ம், பிற பாடங்களுக்கு 205 ரூபாயும் வரைவோலை எடுக்க வேண்டும்.
இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று வரைவோலையை இணைத்து கொடுக்க வேண்டும்.
10 முதல் 15 நாட்களுக்குள் விடைத்தாள் நகல் விண்ணப்பித்தவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்படும்.
இன்று முதல் வரும் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கோடைகால கிரிக்கெட் போட்டி
கோடை கால தீனிய்யாத் போட்டி
இவர்களின் நோக்கம் என்ன? இவர்களின் லட்சியங்கள் தான் என்ன?
சீரென வார்ததைகளும் மொழியத் தெரியா அந்த பிஞ்சு நெஞ்சங்களின் நாவிலிருந்து பீரிட்டு ஒளித்த லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் எனற அந்த கலிமா ஏனோ இறுகிய நெஞ்சையும் நெகிழத்தான் செய்தது.
அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு அழகிய முறையில் குர்ஆனை ஓதி கான்பித்தலும், துஆ, கலிமா, ஹதீஸ், பாங்கு, பயான், கட்டுரை என அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று அன்று நாயகம் (ஸல்) அவர்கள் மொழிந்த ஹதீஸுக்கு ஒப்ப அதாவது, 'கியாமத் நாள் வரை ஓர் கூட்டம் நேரிய வழியில் நிலைத்திருக்கும்' ஆம் அந்த கூட்டத்தில் உருவெடுக்கவும், உருவாக்கவும் நாங்கள் என்றுமே சளித்தவர்கள் அல்ல என்று மழலை படை மொழிந்ததை போன்று நிகழ்ச்சி அமைந்தது.
மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்.... http://ulamaa-pno.blogspot.com/