வியாழன், 8 அக்டோபர், 2009

புதிய மன்றம் துவக்கம்!

கத்தார் வாழ் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களை ஒன்றிணைத்து ஊரில் இருக்கும் ஏழைகளுக்கு மருத்துவம்,திருமணம் மற்றும் கல்விக்கு உதவுவதை பிரதான நோக்கமாக கொண்டு கத்தார்-பரங்கிப்பேட்டை இஸ்லாமிய மன்றம்
QATAR-PARANGIPETTAI ISLAMIC FORUM(Q-PIF)துவங்கப்பட்டுள்ளது.

நீண்ட கால முயற்சியின் பலனாக கடந்த (வியாழக்கிழமை) இரவு ஜனாப்.ஹசன் அலி அறை வளாகத்தில் நடைபெற்ற அமர்வில் கீழ்க்கண்ட சகோதரர்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளாக தேர்ந்தெடுப்பட்டனர்.
தலைவர் - ஜனாப்.S.தாஹா மரைக்காயர்
துணைத்தலைவர் - ஜனாப்.M.ஹஸன் பசிரி
செயலாளர் - ஜனாப்..D.அபூ பக்கர்(ராஜா)
துணைச் செயலாளர் - ஜனாப்.H.M.நூர் ஜலாலுதீன்
பொருளாளர் - ஜனாப்.M.I முஹம்மது சிராஜுத்தீன்

அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது

பரங்கிப்பேட்டை:

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற எளிய விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார் பேரூராட்சித் தலைவரும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ்.


இவ்விழாவிற்கு பரங்கிப்பேட்டை ஊராட்சித் தலைவர் முத்துப் பெருமாள், முன்னால் தலைமை ஆசிரியர் இராஜகோபால் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு உரையாற்றினார்கள்.

நோபல் பரிசு பெற்ற வேதியியல் விஞ்ஞானி சிதம்பரத்தில் பிறந்தவர்

வெங்க்கி ராமகிருஷ்ணன் என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (Venkatraman Ramakrishnan, பிறப்பு: 1952).

தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்திய அமெரிக்கரும், இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் உள்ள மருத்துவ ஆய்வுக் கழகத்தில் உயிரியலாளரும் ஆவார்.

அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ரைபோ கரு அமிலம் மற்றும் புரதங்களின் சிக்கலான அமைப்பான "ரைபோசோம் (ribosome) எனப்படும் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பான ஆய்வுக்காக" வெங்கட்ராமனுக்கும் தாமஸ் ஸ்டைட்ஸ், மற்றும் ஆடா யோனஃட்ஸ் ஆகியோருக்கும் 2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உயிர்களின் மூலச்செயல்பாடுகள் எவ்வாறு இயங்குகின்றன் என்பது பற்றிய தெளிவு ஏற்படுவதற்கும் அதன் மூலம் உயிர்களைக் காப்பதற்கும் இம்மூவரின் கண்டுபிடிப்புகள் பெரிதும் பயன்படும்.

நோபல் பரிசைப் பெற்ற மூன்றாவது தமிழர் ராமகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி: விக்கிப்பீடியா - தகவல்: இப்னு ஹம்துன்