பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 12 ஏப்ரல், 2016 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் டாக்டர் ரஹ்மான்ஸ் அறக்கட்டளை சார்பில், தில்லி ஸாஹிப் தர்கா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள முஸ்லிம் குழந்தைகள் மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி கற்பதற்கான மதரஸா மற்றும் பள்ளி கட்டிடம் ரூ 5.00 இலட்சம் செலவில் கட்டி தருவது என அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் டாக்டர் அப்துர் ரஹ்மான் முடிவு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் கடந்து செவ்வாய்க்கிழமை (05.04.16) காலை 08.30 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவரும், அறக்கட்டளை தலைவருமான டாக்டர் முஹம்மது யூனுஸ் தலைமை தாங்க, பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் சையத் ஆரிஃப், பொருளாளர் அஷ்ரஃப் அலி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தில்லி ஸாஹிப் தர்கா குடியிருப்புவாசிகள் கலந்து கொண்டனர்.


மேலும் வாசிக்க>>>> "தில்லி ஸாஹிப் தர்கா வளாகத்தில் புதிய கல்விக்கூட அடிக்கல் நாட்டு விழா"

0 கருத்துரைகள்!

கடந்த வெள்ளிக்கிழமை (01/04/2016) அன்று PMA UAE சார்பாக துபை முஷ்ரிஃப் பூங்காவில் நடைப்பெற்ற ஒன்றுகூடல்-Gathering நிகழ்ச்சியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெரும் திரளாக அமீரகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்  குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.

சுமார் 120 நபர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு உணவு உபசரிப்பு நடைப்பெற்றது, பின்னர் ஆண்கள்,பெண்கள், குழந்தைகளுக்கென தனித்தனியாக போட்டிகள் நடந்தேறியது. பெண்களுக்கு மார்க்க வினா விடை மற்றும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக இரு போட்டிகள் நடைப்பெற்றது, குழந்தைகளுக்கு வயதின் அடிப்படையில் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக மூன்று விதமான போட்டிகள் நடைப்பெற்றது அதே போன்று ஆண்களுக்கும் மூன்று விதமான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது.

அஸர் தொழுகைக்கு பிறகு அமைப்பின் தலைவர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்களின் இளைய மகன் ஜனாப் ஃபஹீம் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார், பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, முதல் பரிசு பெற்ற ஆண்கள் மற்றும் சிறார்களுக்கு ஜனாப். நகுதா மரைக்காயர் அவர்களும் இரண்டாம் பரிசு பெற்ற ஆண்கள் மற்றும் சிறார்களுக்கு ஜனாப். ஹுசைனுல் ஆபிதீன் அவர்களும் பரிசளித்து கவுரவிக்கப்பட்டனர். வெற்றி பெற்ற பெண் போட்டியாளர்களுக்கு பரிசுகளை பெண் பொறுப்பாளர்கள் மூலம் கொடுக்கப்பட்டது.
 
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட MYPNO ஆசிரியர் ஜனாப். ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் (PIA Riyadh தலைவர்) கலந்துக்கொண்டு நாம் வந்திருக்கும் நோக்கம் என்ன? என்ற தலைப்பில் வெளிநாடு மற்றும் இவ்வுலக வாழ்க்கை குறித்து சிறப்புரை ஆற்றினார், அதனை தொடர்ந்து PMA – UAE சார்பாக அமீரக அளவில் நடைப்பெற்ற இறகு பந்து போட்டியில் கலந்துக்கொண்ட விளையாட்டு வீரர்களுக்கும் பள்ளி அளவில் நடைப்பெற்ற போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசளித்து ஊக்கப்படுத்தினார். அதனை தொடர்ந்து அமீரக அமைப்பின் தலைவர் ஜனாப். அப்துல் அஜீஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜனாப். ஃபக்ருதீன் இப்னு ஹம்துன் அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கி கவுரவித்தார்.பின்னர் நடைப்பெற்ற அமைப்பின் கூட்டத்தை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் முஹம்மத் உவைஸ் அவர்கள் அமைப்பின் LOGOவை அறிமுகப்படுத்தி முன்னுரை வழங்கினார். அமைப்பின் LOGOவை வடிவமைத்த ஜனாப். அப்துல் பாசித் அவர்களுக்கு நிர்வாகிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


நன்றி: PMA - UAE, ஐக்கிய அரபு அமீரகம்
மேலும் வாசிக்க>>>> "அமீரக வாழ் பரங்கிப்பேட்டையர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் MYPNO ஆசிரியர் சிறப்புரை"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234