வெள்ளி, 13 மே, 2011
பாலகிருஷ்ணன் வெற்றி!
மீண்டும் செல்வி ராமஜெயம் எம்.எல்.ஏ.: 13117 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

வெற்றிக் கொண்டாட்டத்தில் பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டணியினர்!
சிதம்பரம் தொகுதி வெற்றி அறிவிப்பு ஒத்திவைப்பு!
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் மா.கம்யூ. வேட்பாளர் பாலகிருஷ்ணன் வெற்றி உறுதியாகிவிட்ட சூழ்நிலையிலும் வெற்றி அறிவிப்பை ஒத்திவைத்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள். இறுதிசுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தும்கூட வெற்றி விபரங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறை போன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.பி. தொடர்ந்து முன்னிலை-வெற்றி களிப்பில் பரங்கிப்பேட்டை ம.ம.க.!
பரங்கிப்பேட்டை; சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. கூட்டணியில் மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். கூட்டணியில் அங்கம் வகிக்கம் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் இந்த வெற்றியை பெரியதெரு முனை, சின்னக்கடையில் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர். அதேபோன்று அ.தி.மு.வினரும் சஞ்சீவீராயர் கோயில் தெருவில் வெடி வெடித்து தங்களது வெற்றியை வெளிப்படுத்தினர்.