தமிழ்நாடு அரசு செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பரஙகிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் முஹமது யூனுஸ் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் நான்கு பேரூராட்சித் தலைவர்களில் யூனுஸ் அவர்களை குறிப்பிட்டு பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் சுனாமி பாதித்த 19 பேரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்த இரு புத்தகங்களை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இப்புத்தகங்களை பரங்கிப்பேட்டை, கிள்ளை, மரக்காணம், கோட்டகுப்பம், மாமல்லபுரம் மற்றும் சோழிங்கநல்லூர் பேரூராட்சி தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
