பரங்கிபேட்டை வெள்ளாற்று பாலம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் தேக்க நிலையில் இருப்பதை விரைந்து கட்டி முடிக்க கோரியும் பரங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் தேவையான மருத்துவர்களை நியமிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாலை பரங்கிபேட்டை சஞ்சீவிராயர் கோவில் தெரு சந்திப்பில் கண்டன கூட்டம் நடந்தது.அதில் தோழர் ராஜேந்திரன், முராத் மற்றும் தோழர் மூசா உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
மூசா அவர்கள் பேசுகையில் தற்போது நிகழும் அரசியல் சார்பான பிரச்சனய்கள் அனைத்தையும் ஒரு பிடி பிடித்தார். இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமேயில்லை என்று ஹைதராபாதில் கூடிய தேவ்பந்து உலமாக்கள் ஆறாயிரம் பேர் கொடுத்திருக்கும் பத்வாவை குறிப்பிட்டு பேசினார். மத்திய அரசின் அமெரிக்க அடிமை போக்கையும், மாநில அரசின் மின் வெட்டு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் குறித்து தனது வழக்கமான ஸ்டைலில் உரையாற்றினார்.