மாநிலம் தழுவிய கராத்தே போட்டியில் கடலூர் மவாட்டம் சார்பாக பரங்கிப்பேட்டை மாணவர் தமிழரசன் இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளார். சலங்குகாரத் தெருவைச் சார்ந்த இந்த மாணவர் தமிழரசன். 11-வது படிக்கும் இம்மாணவர் தன்னுடைய சுயஆர்வத்தினால் இப்போட்டியில் பங்கு பெற்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.புதுடெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து இதற்கான பரிசையும் பாராட்டையும் இம்மாணவர் பெற்றார்.