பரங்கிபேட்டை - புதுச்சத்திரம் ரோட்டில் அரசு ஆண்கள் பள்ளிக்கு அருகே இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். பரங்கிபேட்டை சலங்குகார தெருவை சேர்ந்த ஸுஜய் மற்றும் புதுக்குப்பத்தை சேர்ந்த அவரது நண்பரும் தங்களது பஜாஜ் பல்சரில் வந்துகொண்டு இருக்கும்போது ஒரு நாவல் மரத்தில் மோதி இந்த விபத்து நேரிட்டது. இறந்துபோன இரு சகோதரர்களும் சலங்குகார தெருவை சேர்ந்தவர்கள ஆவார்கள். இதில் ஸுஜய் அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஆவார். தங்களது பிள்ளைகளை திடீர் என இழந்து அதிர்ச்சி அடைந்து வாடும் அவர்தம் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வலைப்பூ குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது
