பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

செவ்வாய், 25 ஜூன், 2013 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: ஜாமிஆ மஸ்ஜித்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து எதிர்வரும் வெள்ளியன்று ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பொதுக்குழு நடைபெற உள்ளது. இப்பொதுக் குழுக் கூட்டம் தமிழக அரசின் வக்ஃப் கண்காணிப்பாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதற்கான அறிவிப்பை மீராப்பள்ளி நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது. அதன்படி மேற்படி முஸ்லிம் பொதுமக்களை பொதுக்குழுவில் கலந்துக் கொள்ளவும் மீராப்பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க>>>> "மீராப்பள்ளி புதிய நிர்வாகம் குறித்து கூடுகிறது பொதுக்குழு! வக்ஃப் கண்காணிப்பாளர் வருகை!!"

0 கருத்துரைகள்!

தம்மாம்: இந்திய பன்னாட்டு பள்ளியில் 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று 10CGPA அவார்டு வின்னராக தேர்ந்தெடுக்ப்பட்ட பரங்கிப்பேட்டை மாணவி ஷிஃபா காஜா முஹையத்தீனுக்கு தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சவூதி அரேபிய தம்மாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இம்மாணவிக்கு தங்கப்பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதே போன்று இம்மாணவியின் சகோதரர் மெஹ்மூத் காஜா முஹையத்தீன் 7-ம் வகுப்பு சிபிஎஸ்இ (CBSE) டேலன்ட் சர்ச் (Talent search) தேர்வில் 80%  அதிகமான மதிப்பெண்கள் பெற்றதற்காக  வழங்க்ப்பட்டது.

மாணவர்களின் சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசுகளை இந்தய துணை தூதரக அதிகாரி சிபி ஜார்ஜ் இவர்களது தந்தை காஜா முஹையத்தீனிடம் வழங்கினார்.
மேலும் வாசிக்க>>>> "CBSE தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பரங்கிப்பேட்டை மாணவிக்கு தங்கப் பதக்கம்!"

0 கருத்துரைகள்!ரியாத்: ரியாத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் கூட்டமைப்பான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய அசோசியேஷன் (PIA)-வின் மாதந்திரக் கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைப்பெற்றது.

செயலாளர் எஸ். நகுதாவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு பதிலாக ஆர். தமிஜுத்தீன் புதிய செயலாளராகவும், ஐ. சாகுல் ஹமீது து. செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் பொருளாளராக செயல்பட்டு வந்த என். அஷ்ரப் அலியின் பொறுப்பை ஹெச். முஹம்மது ஹுசைன் பெற்றுக்க கொண்டார்.

இக்கூட்டத்தில் பரங்கிப்பேட்டை தனியார் பள்ளி ஒன்றில் சில மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்கள் வழங்கியதைக் கண்டித்தும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்திற்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்குவது குறித்த ஜமாஅத்தின் அறிவிப்பிற்கு ஏற்கனவே உபயோகத்தில் இருக்கும் இரண்டு பழைய ஆம்புலன்ஸ் வாகனங்களை புதுப்பித்து அதைனையே பயன்படுத்திக் கொள்ள ஜமாஅத்தை கோரியும், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட  பரங்கிப்பேட்டை பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்கப்படுகிறது என்கிற பொது மக்களின் கோரிக்கையை ஜமாஅத் பரிசீலிக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "பழைய ஆம்புலன்ஸை புதுப்பிக்க ஜமாஅத்துக்கு PIA கோரிக்கை!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234