பரங்கிப்பேட்டை:
தமிழக முன்னாள் துணை முதல்வரும், தி.மு.கழக மாநிலப் பொருளாளருமான
மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாள் மாநிலமெங்கும் இன்று தி.மு.க-வினரால்
கொண்டாடப்பட்டு வருகின்றது.
பரங்கிப்பேட்டை
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, நகர செயலாளர்
ஜெ.பாண்டியன் தலைமையில், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர்
எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர்
உசேன், நகர இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.பைசல் யூசுப் அலி ஆகியோர்
முன்னிலையில் பால் பழம், ரொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.
பரங்கிப்பேட்டை
வழக்குரைஞர் அணி சார்பாக நீதிமன்ற வளாகத்தில் இருந்த பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கப்பட்டது. வழக்கறிஞர்கள் சக்திவேல், ஜெயபால், தியாகராஜன்
இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
தெத்துக்கடை
பகுதியில் சாதாத்கான், தி.மு.க. கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில்,
நகர அவைத்தலைவர் தங்கவேல் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், ஒன்றிய
பிரதிநிதி கோமு நகர தி.மு.க.நிர்வாகி வேலவன், பேரூராட்சி மன்ற
உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.காஜா கமால், யூ.ஹபீப் ரஹ்மான், பொற்செல்வி,
முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன், ஜாபர் அலி, நாசர்
பக்ருதீன், சரவணன், ஆறுமுகம் செட்டியார் உள்ளிட்ட தி.மு.க.வினர்
கலந்துக்கொண்டனர்