திங்கள், 2 பிப்ரவரி, 2015

குவைத்தில் நடைபெற்ற ஏழைகளுக்கான ஆடைகள் சேகரிப்பு முகாம்

குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக 'ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்' உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்பு முகாமை சென்ற வெள்ளிக்கிழமை (30/01/2015) அன்று குவைத் தமிழ் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது. 

குறுகிய கால அவகாசம் தரப்பட்டாலும் சுமார் 1 டன் (ஆயிரம் கிலோ) ஆடைகளை மக்கள் அன்பளிப்பாக அள்ளி வழங்கினர். அவற்றை சேகரித்து குவைத்தில் இயங்கும் பூப்யான் வங்கி (Boubyan Bank) துணையுடன் ஒரே நாளில் 56,000 கிலோ (56 டன்) ஆடைகளை சேகரித்துகின்னஸ் சாதனை புரிந்த வளைகுடா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்குவைத் (Gulf University for Science & Technology, Kuwait) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆடைகளை அள்ளி வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆடைகளை சேகரித்து அல்லல்படும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வோம் என்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் பல்வேறு காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கபட்ட திருப்பூர், முஸாஃபர் நகர், ஜம்மு & காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உதவித் தொகைகளை இச்சங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆடைகள் வழங்கும் முகாமின் காணொளியை காண....  K Tic ஏற்பாடு செய்த ஆடைகள் சேகரிப்பு முகாம்

-------------------------------------
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.

துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் /  டெலிகிராம் / அலைபேசி: (+965) 97 87 24 82
மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.com
இணையதளம்: www.k-tic.com
யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
முகநூல் (Facebook) பக்கம் : https://www.facebook.com/q8tic
முகநூல் (Facebook) குழுமம் : https://www.facebook.com/groups/q8tic
நேரலை (Ustream) : http://www.ustream.tv/channel/ktic-live
ஒலி/ஒளிப் பெட்டகம் (Youtube) : www.youtube.com/user/Ktic12









சிலிண்டர் டெலிவரி பாய்க்கு பணம் தர வேண்டாம்

கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும்போது பணம் கொடுக்க தேவையில்லை. கட்டாயப்படுத்தினால் புகார் தெரிவிக்கலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
சமையல் கியாஸ் நேரடி மானியம் திட்டம் ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் முழு தொகை கொடுத்து சிலிண்டரை பெற வேண்டும். மானியம் பொதுமக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும், கியாஸ் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.
 
வீடுகளுக்கு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது ரூ.10 அல்லது ரூ.20 கொடுத்தால் டெலிவரிபாய் வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது, ரூ.50 கொடுத்தால் தான் சிலிண்டர் வழங்குவோம் என்று டெலிவரிபாய் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். தரை தளத்தில் உள்ள வீடுகளாக இருந்தால் ரூ.30ம், அடுக்குமாடி குடியிருப்புகளாக இருந்தால் ரூ.50ம் கட்டாயம் தர வேண்டும் என்று அந்த ஊழியர்கள் பிடிவாதமாக கேட்கிறார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பணத்தை தராவிட்டால் வாக்குவாதம் செய்துவிட்டு மீண்டும் சிலிண்டரை திரும்ப எடுத்து சென்று விடுகிறார்கள்.
 
இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி வெற்றி செல்வகுமார் கூறும்போது, ''கியாஸ் விநியோகம் செய்யும் பையன்களுக்கு ‘டிப்ஸ்’ எதுவும் கொடுக்க தேவையில்லை. அவர்களுக்கு விநியோகஸ்தர்கள் சம்பளம் வழங்குகிறார்கள். வாடிக்கையாளர்களே முன்வந்து கொடுப்பது அவர்களது விருப்பம். ஆனால், ரூ.30, 40, 50 என நிர்ணயம் செய்து கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவது தவறு. அதனை அனுமதிக்க கூடாது.
 
கட்டாயப்படுத்தி பணம் கேட்டால் கியாஸ் ஏஜென்சியின் பெயர், ஏரியா, விவரங்களை போன் மூலமாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவரும் தங்களது பெயர் விவரங்களை கூற வேண்டும். அப்போதுதான் தவறு செய்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் தேனாம்பேட்டையில் இதற்காக சேவை மையம் செயல்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும நேரத்தில் பொது மக்கள் நேரிலும் வந்து எழுத்து மூலம் புகார் கொடுக்கலாம்.
 
இது தவிர 11800 425247247 என்ற இலவச டெலிபோன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். புகாரின் அடிப்படையில் அந்த கியாஸ் ஏஜென்சி மீதும், ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொது மக்கள் சிலிண்டர் விநியோகத்தின் போது கூடுதலாக பணம் கேட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...