பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

சனி, 16 நவம்பர், 2013 0 கருத்துரைகள்!


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் 'ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், யோகா வகுப்பு, அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல், மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற பல்வேறு நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ஆரோக்கியம் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பிரச்சாரம் பரங்கிப்பேட்டை மீராப்பள்ளி அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மது, புகையிலை தீங்கு சம்பந்தமாக விழிப்புணர்வு பதாதைகளும், யோகா பயிற்களும் இடம்பெற்றன. 

மேலும் வாசிக்க>>>> "யோகா வகுப்பு மற்றும் மது, புகையிலை விழிப்புணர்வு பிரச்சாரம்"

செவ்வாய், 29 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

ஃபாத்திமா நகரில் மர்ஹூம் அப்துல் கறீம் அவர்களின் மனைவியும், ஏ.கே. அப்துல் பாரீ அவர்களின் தாயாரும், எஸ்.அப்துல் ஹமீது அவர்களின்  மாமியாரும், ஏ.பி. அப்துல் நஜீர் (பாபு), நமது MYPNO இணையதளத்தின் ஆசிரியர் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ, ஐ. முஹம்மது ஹனீஃப், ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (சேட்டு) மற்றும் ஏ.ஹெச். லியாகத் அலீ ஆகியோரின் பாட்டியாருமாகியஜுலைஃகா பீவி அவர்கள் மர்ஹூமாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிவூன்.

இன்ஷா அல்லாஹ் நாளை (18.10.2013 வெள்ளிக்கிழமை) மாலை 4:00 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.
மேலும் வாசிக்க>>>> "வஃபாத் செய்தி - அக். 18: ஜுலைஃகா பீவி"

0 கருத்துரைகள்!

பெருநாள் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து சென்ற பிறகும் இந்த இரு இளைஞர்கள் பிரார்த்தனையில்... அவர்களுக்கு தெரியாமல் ஒரு ஸ்நாப்.

இடம்: மீராப்பள்ளி, பரங்கிபேட்டை
க்ளிக்: அபூ பிரின்சஸ்
மேலும் வாசிக்க>>>> "ஆலயத் தொடர்புடைய அகம் கொண்ட இளைஞர்கள்"

திங்கள், 14 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

அண்ணா நகரில் மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் பேரனும், இப்ராஹீம் (ரேடியோ செட்) அவர்களின் மகனாரும், முஹம்மது ஹனீஃபா அவர்களின் மருமகனாரும் முஸ்தஃபா மற்றும் ஸுல்தான் பாஷா ஆகியோரின் சகோதரருமான ஷாஹுல் ஹமீது அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 
இன்று (10-10-2013) மாலை 4 மனிக்கு நல்லடக்கம் ஹக்கா சாஹிப் தர்காவில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "அக் 14: ஷாஹுல் ஹமீது"

ஞாயிறு, 6 அக்டோபர், 2013 0 கருத்துரைகள்!

ஆளுமைகளை பற்றி நாள்தோறும் நாம் பேசி வருகிறோம். உருவாகவோ உருவாக்கவோ முயற்சிகள் என்று பார்த்தாலோ மிக சொற்பமாகவே இருக்கும். இறைவன் அருளால் நமதூரிலிருந்து திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் B.Com இறுதியாண்டு பயின்று வரும் (இண்டோமால்) ஜுனைத் அவர்களின்  மகனார் J. முஹம்மது சுஹைப் உஸ்மான் தனது சில சாதனைகள் மூலம் தன்னம்பிக்கை அளிக்கிறார். 

கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் "BEST MANAGER" டைட்டிலை சமீபத்தில் வென்றிருக்கும் இவர் DEBATE எனப்படும் விவாத போட்டியில் பல்கலைகழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதே வரிசையில் தென்னிந்திய அளவில் பல்கலைகழகத்தை பிரதிநிதித்துவபடுத்துகிறார். 

முன்னதாக கால்பந்து விளையாட்டில் பிராந்திய / மாவட்ட அளவில் பல முதலிடங்களையும், மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டும் இருக்கிறார். 

மாணவர் மேலும் பல சாதனைகளை புரிய MYPNO சார்பில் வாழ்த்துகிறோம்.     மேலும் வாசிக்க>>>> "இன்றைய சாதனையாளர்; நாளைய ஆளுமை"

சனி, 28 செப்டம்பர், 2013 0 கருத்துரைகள்!

சிரியா நாட்டின் மீது தாக்குதல் நடத்தவிருக்கும் அமெரிக்காவை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சஞ்சீவிராயர் கோவில் தெரு முனையில் நடைப்பெற்றது. 

இந்த ஆர்பாட்டத்திற்க்கு நகர செயலாளர் M. நூர் முஹம்மது தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது  "அமெரிக்காவே! சிரியாவை தாக்காதே!!" "எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தானை தாக்கி அழித்தது போன்று இப்போது சிரியாவை கொள்ளையடிக்க போர் தொடுக்காதே!" போன்ற கோஷங்கள் எழுப்பபட்டன. 

கண்டன உரையை சிதம்பர சட்டமன்ற உறுப்பினர் K. பாலகிருஷ்ணன் நிகழ்தினார். கூட்டத்தில் ரமேஷ் பாபு, கற்பனை செல்வம், ராஜாராமன், சிவலிங்கம், மணி, காந்தி, ஜீவா, சுதாகர், இளம்பாரதி, சண்முகசுந்தரம் மற்றும் குப்புசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்

மேலும் வாசிக்க>>>> "மார்க்சிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா அரசின் அவலங்களை விளக்கி தெருமுனை பிரச்சார கூட்டம் சின்னக்கடை தெருவில் நேற்று நடைப்பெற்றது.

தலைமை கழகப் பேச்சாளர்கள் தானுர் சிவகொழுந்து, பொன்னேரி சிவா, மற்றும் வளவனுர் மணிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்கள். 

இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் தலைமை தாங்கினார். இக்கூட்டதில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் M.S. முஹம்மது யூனுஸ், துனைத்தலைவர் நடராஜ், மாவட்ட பிரதிநிதி முனவ்வர் ஹுஸைன், இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயேன் மற்றும் தங்கவேல், நல்லதம்பி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காஜா கமால், ஹபீபூர் ரஹ்மான், ஜாஃபர் மற்றும் பொற்செல்வி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
செய்தி & படங்கள்: ஹம்துன் அஷ்ரஃப்
மேலும் வாசிக்க>>>> "தி.மு.க. வின் தெருமுனை பிரச்சார கூட்டம்"

புதன், 25 செப்டம்பர், 2013 0 கருத்துரைகள்!


பரங்கிப்பேட்டை: தி.மு.கழக தலைவர் கருணாநிதி எழுதிய "நீதி வெல்லும், நிச்சயம் வெல்லும்" என்ற தலைப்பிலான அறிக்கையினை துண்டு பிரசுரமாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பரங்கிப்பேட்டை தி.மு.க. சார்பில் நடைபெற்றது. 

நகர தி.மு.க.செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டு சஞ்சீவிராயர் கோயில் தெரு, கச்சேரி தெரு, உள்ளிட்ட பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் வழங்கினார். 

கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன் முன்னிலையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், நகர அவைத்தலைவர் தங்கவேல், ஒன்றிய பிரதிநிதிகள் கோமு, வேலவன், நகர நிர்வாகிகள் மாமுன் அலி மாலிமார், ஆரிபுல்லா, மாயா உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.
மேலும் வாசிக்க>>>> "தி.மு.க சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி..!"

செவ்வாய், 17 செப்டம்பர், 2013 0 கருத்துரைகள்!

நமது தளத்தின் ஆசிரியர் எம்.ஐ.சிராஜூத்தீனுடைய மகன், ஐந்து வயதான ஃபஹீம் ஒரு வாரத்திற்கு முன்பு கத்தாரில் திறந்திருந்த சாக்கடை ஒன்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11மணியளவில் மரணம் அடைந்தார்  என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

எங்களில் ஒருவரான சகோ. சிராஜ் மற்றும் குடும்பத்தினர்களுக்கு   mypno.com சார்பில்  ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஃபாஹிமுடைய மறுமை நல்வாழ்வுக்கும், சிராஜ் குடும்பத்தாரின் மனவலிமைக்கும் இறையைப் பிரார்த்திக்கிறோம்.
மேலும் வாசிக்க>>>> "கத்தாரில் பரங்கிப்பேட்டையை சேர்ந்த சிறுவன் ஃபஹீம் மரணம்"

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013 0 கருத்துரைகள்!

ஈகைத்திருநாள் மகிழ்ச்சியினை அனைத்து சமுதாயத்தினருடனும் பகிர்ந்து கொள்ளும் மனிதநேய விழாவும், மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும் மீராப்பள்ளித் தெரு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் நடைப்பெற்றன.
 
நிகழ்ச்சியினை M.H. கபீர் அஹமது மதனி அவர்கள் கிராத் ஓதி துவக்கி வைக்க, இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் செயல் தலைவரும், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவருமான டாக்டர் M.S. முஹம்மது யூனுஸ் அவர்கள் முன்னிலையில், இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையில் விழா தொடங்கியது விழாவிற்க்கு சிறப்பு அழைப்பளார்களாக டாக்டர் K.V.S  ஹபீப் முஹம்மது அவர்களும், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் M. அப்துஸ் ஸமது மற்றும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் K. பால கிருஷ்ணன்  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
மாற்று மதத்தினை சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் சுமார் 460 கட்டுரைகள் பெறப்பட்டு, அதில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் முறையே 15,000, 10,000 மற்றும் 5,000 ரொக்க பணமாகவும், புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  முதல் 50 போட்டியாளருக்கு சிறப்பு ஆறுதல் பரிசும், மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும்  ஆறுதல் பரிசும் வழங்கப் பட்டன.  வெளி ஊரிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், அவர்களின் பெற்றோர்களுக்கு பகல் உணவு வழங்கப்பட்டது .
 
விழாவினை  நிகழ்ச்சி அமைப்பாளர் L. ஹமீது மரைக்காயர்  சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
மேலும் வாசிக்க>>>> "ஈத் மிலன் விழா! மாவட்ட அளவிலான புனித ஈகைத் திருநாள் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!!"

வியாழன், 29 ஆகஸ்ட், 2013 0 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளில் ஈடுபடாத ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் ஏ.டி.எம் நிறுவியுள்ளனர். இதில் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். சமீப காலமாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ஏ.டி.எம் சேவை இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வியப்பினையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இது குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பதே பதிலாக கிடைத்தது. தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாமல் கருத்து தெரிவித்த  வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,"வங்கியுடன் இணைந்தவாறு (ON SITE) இயங்கும் வகையில் செயல்படக்கூடிய ஏ.டி.எம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை அமைப்பதற்கான இடப்பற்றாக்குறையின் காரணமாகவே இப்பணியில் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.  

ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வங்கி அலுவலகத்தோடு இணையாமல்  தனியாக (OFF SITE) ஏ.டி.எம்  அமைத்து முன்னோடியாக வழிகாட்டியுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி உடனடியாக ஏ.டி.எம் அமைக்க வேண்டும் என்பதே பரங்கிப்பேட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு அதற்கேற்ப வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்களும்  இந்தியன் வங்கி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.


MYPNO.COM  செய்திக்காக  ஹம்துன் அப்பாஸ்
படங்கள்: ஹஸன் அலி
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். அமைக்குமா..?!"

புதன், 28 ஆகஸ்ட், 2013 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சத்திரம் அருகே பெத்தாங்குப்பம், கம்பளிமேடு, சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 17 நான்கு சக்கர வாகனங்கள், 45 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய வாகனங்களுடன்  தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையொட்டி இன்று காலை பரங்கிப்பேட்டை குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  முன்னிலை ஆனார்.  பின்னர்  இவ்வழக்கு விசாரணையை 3-9-2013-க்கு ஒத்திவைத்து நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவதையொட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து பெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்,  நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார், புவனகிரி ஒன்றிய தி.மு.க.செயலாளர் , வி.என்.ஜெயராமன், கிள்ளை ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கோமு, வேலவன், ஆரிபுல்லாஹ்,ஜி.எம்.கவுஸ்,மாயகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் திரண்டதால் பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை..!"

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013 0 கருத்துரைகள்!

ஓவியர் சரவண ராமலிங்கம் நேற்று மாலை இயற்கை எய்தினார். இவர் பரங்கிப்பேட்டையின் பிரபல ஓவியராக இருந்து சரவணா ஸ்டூடியோவை நடத்திவந்தர். மேலும் இவர் பரங்கிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர் ஆவார். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.

தகவல்: மரு. லெ. பூபதி
மேலும் வாசிக்க>>>> "ஓவியர் சரவண ராமலிங்கம் மறைவு!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234