பரப்பரப்பான அந்த நிமிடங்களில் ஜமாஅத் தலைவரும் பேரூராட்சித் தலைவருமான முஹமது யூனுஸ், த.மு.மு.கவினர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர், பொதுமக்கள் பலர் உடனே ஆஜராகிவிட்டனர். முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவர் பார்த்தசாரதியும் உடனே வந்துவிட்டார்.


அடுத்தகட்ட சிகிச்சைக்காக ஜமாஅத் ஆம்புலன்ஸூம் தயார் நிலையில் இருந்த போது, அவசரம் கருதி தன்னுடைய வாகனத்தையும் காயம்பட்டவர்களை வெளியூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தந்துவிட்டார் பேரூராட்சித் தலைவர். இந்த தருணத்தில், காயம் அடைந்தவர்களின் உறவினரான வெளியூர்காரர் ஒருவர் கேட்டார், 'யாருங்க அவர்? அங்கயும் இங்கயும் அலஞ்சி திரிஞ்சி வேல செய்யுறாரே??' என்று.
அதற்கு, மெயின்ரோடு பகுதியை சார்ந்த இன்னொருவர், 'அவர் எங்க ஊரு பஞ்சாயத்து போர்டு தலைவரு, முஸ்லிம்ட ஜமாத்து தலைவரும் அவர்தான்' என பதிலளித்தார்.
மீண்டும் அந்த வெளியூர்காரர், 'அட! அப்படியா!! பரவாயில்லயே!' என்று ஆச்சரியத்துடன் கூறியபோது, 'இந்த ஊர்ல நாங்க எல்லாரும் அண்ணன்-தம்பியாத்தான் ஒத்துமையுடன் பழகுறோம்' என்று பதில் கூறிய போது, அந்த உறவினர் பதில் ஏதும் கூறாமல் நெகிழ்ச்சி கலந்த புண்முறுவலுடன் 'அட அப்படியா என்பதுபோல் தலையசைத்து நகர்ந்தார்.