பரங்கிப்பேட்டை: சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செல்விராமஜெயம் முதல் முறையாக நேற்று தொகுதிக்கு வந்தார். அமைச்சருக்கு முட்லூரில் அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பேண்டு வாத்தியங்கள் முழங்க, பட்டாசு வெடிக்க உற்சாக வரவேற்பில் நனைந்தார் செல்வி ராமஜெயம். பின்பு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்ததுடன் அமைச்சருக்கு பொன்னாடைகள் போர்த்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் சுப்ரமணியன், பரங்கிப்பேட்டை அ.தி.மு.க. நிர்வாகிகள் மாரிமுத்து, ஷாஜஹான், இக்பால், காமில், யூசுப் அலி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, புவனகிரி சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க புறப்பட்டர் அமைச்சர் செல்வி ராமஜெயம்.