இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி உள்ளார்கள்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்தடை ஏற்பட்ட சம்பவம் அரசியல் கட்சிக்களுக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் நேற்று சிதம்பரம் மற்றும் கடலூர் லோக்சபா தொகுதி தேர்தலின்போது அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து தடையில்லா மின்சாரம் வழங்கவும், தடை ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யவும், சமூக விரோதிகள் மின்சாரத்தை தடை செய்தால் அசம்பாவிதங்கள் நடக்காமல் கண்காணிக்கவும் மின்சார ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர் மாவட்ட மின்சார வாரியத்தின் சார்பில் திடீர் மின்தடை ஏற்பட்டால் உடன் சரி செய்ய 24 மணி நேரமும் உஷார் நிலையில் மின்சார ஊழியர்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
கடலூர் பாரதி ரோட்டில் டவுன் ஹால் அருகில் அமைக்கப்பட்டுள் தகவல் மையத்தில் ஒரு போர்மேன் தலைமையில் 10க்கு மேற்பட்ட லைன்மேன்கள் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றிம் பு.முட்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட தச்சக்காடு, சேந்திரக்கிள்ளை, பால்வாதுண்ணான், வேளங்கிப்பட்டு, புதுச்சத்திரம் உட்பட 16 ஓட்டுச்சாவடிகளிலும், பரங்கிப்பேட்டை உதவி மின்பொறியாளர் அலுவலகத்திற்குட்பட்ட பரங்கிப்பேட்டை, அகரம், சாமியார்பேட்டை, புதுக்குப்பம் உட்பட 18 ஓட்டுச் சாவடிகளிலும் 32 ஊழியர்கள் தயாராக இருந்தனர்.
இந்த மின்சார ஊழியர்கள் பணியில் இருப்பதை உயர் அதிகாரிகள் அடிக்கடி கண்காணித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் செந்துறையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருமானூரில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பழுதாகி, உடனடியாகச் சரிசெய்யப்பட்டன.
பல்வேறு பகுதிகளில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதால் சிறிது நேரம் வாக்குப் பதிவு பாதிக்கப்பட்டது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்ததால் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.
வாக்காளர் கணக்கெடுப்பின் போது வீட்டில் இல்லாததால் பெயர் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட குளறுபடியால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு நிறுத்தம்:
சிதம்பரம் மாலைக்கட்டித்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளியில் உள்ள 101- எண் வாக்குச் சாவடியில் 98 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவர்களும் வாக்களிக்க வேண்டும் அதுவரை வாக்குப்பதிவை நிறுத்துமாறு அலுவர்களுடன் பூத் ஏஜெண்ட்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காலை 7.10 மணி முதல் 7.40 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மேலும் வாக்குச் சாவடியிலிருந்து அனைத்து பூத் ஏஜெண்டுகளும் வெளியேறினர்.