பரங்கிப்பேட்டை: டாக்டா எஸ். நூர் முஹம்மது தலைமையிலான இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகம் கலையப்படுவதை அடுத்து புதிய தலைவரை தேர்தல் முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையடுத்து தேர்தல் குழுவினரும் யார் யார் என்று அறிவிக்கப்பட்டது.
நேற்று இரவு 7 மணியளவில் தலைமை தேர்தல் அதிகாரியாக எம்.ஈ.எஸ். அன்சாரி தலைமையில் தேர்தல் குழுவினர் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்து பேசினர். இதில் துணைத் தலைவர் எம்.எஸ். அலி அக்பருடன் நடந்த சந்திப்பின் போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பற்றி விளக்கி கூறினர். இதனையடுத்து
தேர்தல் அலுவலக இடம், மனுதாக்கல் தேதி, தேர்தல் போன்றவற்றை விரைவில் தேர்தல் குழுவினர் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது ஜமாஅத் நிர்வாகிகள் கலிக்குஜ் ஜமான், ஷாஜஹான், ஹனிபா, சுல்தான் அப்துல் காதர் மற்றும் தேர்தல் அதிகாரிகளான ஆர். ஹபிபுர் ரஹ்மான், எஸ்.ஏ. ரி யாஸ் அஹமத், எல். ஹமீது மரைக்காயர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.