பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 13 பிப்ரவரி, 2012 5 கருத்துரைகள்!


ரண்டாவது மாதத்தின்
இரண்டுங்கெட்டான் தினம்...
காதலர் தினம் - ஒரு
கலாச்சார ரணம்!

வெள்ளைக்காரன் கண்டெடுத்த

கருப்புக்கறை தினம்!
பண்பாடு கலாச்சாரம்
புண்படும் விழாக்காலம்!


காமுகர் மனம்
கண்டெடுத்த தினம்...
வக்கிரத்தின் வடிகாலாய்
வந்துசேர்ந்த தினம்!

கலவியென்று களித்தது

கற்காலக் காதல்...
குளவியெனக் கொட்டுவது
தற்காலக் காதல்!

வெள்ளையனை வெளியேற்றி -அவன்

கொள்கைதனில் புரையோடி
கலாச்சாரக் காதல்கூட
விபச்சாரம் ஆகியதே!

அன்னைக்கென்றொரு தினம்

அப்பனுக்கென்றொரு தினம்
நண்பனுக்கென்றொரு தினம்
நல் உழைப்பாளிக்கென்றொரு தினம்

இறைவன் படைப்பிலே

எத்தினமும் நல்தினம்,
இவர்கள் யார் இவ்வுலகில்
இஷ்டம்போல் பகுத்துரைக்க?

காதலர்தினம் எனும்

கண்றாவிப் புறக்கணிப்போம்,
காதலென்றால் காமமில்லை
அன்பென்று அறிய வைப்போம்!

இந்தியனுக் கென்றொரு

இன்றியமையாப் பொறுப்புண்டு
இளைய சமுதாயத்தின்
இதய ஊனம் களைய வேண்டும்!

காதலர் தினம்...

கன்னியர்க்குக் கண்ணிவெடி
காளையர்க்குக் கள்ளுகுடி
பெற்றோருக்குப் பேரிடி
பொதுப்பாதையில் ஒரு புதைகுழி!

கவிதை ஆக்கம் - சபீர்

மேலும் வாசிக்க>>>> "ஊன தினம்!"

4 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: நகர ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி மாநாடு பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ். ஓ. செய்யது ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்த மீலாது மாநாட்டிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ், கே. பாவாசா மரைக்காயர், கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், யூ. ஜமால் முஹமது, யூ. ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எ. லியாகத் அலி மன்பஈ வரவேற்புரை வழங்கினார். எம். ஷேக் ஆதம் மழாஹிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது. இறுதியமர்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் இ. ஷாகுல் ஹமீத் ஜமாலி சிறப்புரையாற்றினார்.

மீராப்பள்ளி இமாம் அஹ்மத் கபீர் காஷிபி, புதுப்பள்ளி இமாம் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி, இஸ்மாயில் நாஜி காஸ்மி, தவ்லத்துன்னிசா கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி, மஹ்முதிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் ரஷாதி, காதிரியா பள்ளி இமாம் நூருல்லாஹ் பையாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் கட்டுரைப் போட்டி மற்றும் வினா-விடைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நூர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர்.

இறுதியில் மாநாட்டு தீர்மானத்தை கவுஸ் பள்ளி இமாம் நிஜாமுத்தீன் காஷிபி வாசித்தார். மீலாது கமிட்டி செயலாளர் ஓ. முஹம்மது கவுஸ் நன்றியுரை வழங்கினார்.

மேலும் வாசிக்க>>>> "மீலாது மாநாடு!"

4 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: எதிர்வரும் பிப்ரவரி 14-ந்தேதியன்று மாவட்டத் தலைநகர் கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ள வாழ்வுரிமை மாநாடு குறித்து தெருமுனைப் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.

சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நேற்று மாலை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கு பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், போராட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

அப்துல் மஜீத் உமரி உரை நிகழ்த்திய, இப்பிரச்சாரக் கூட்டத்தில் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாஜல் உசேன், முத்துராஜா, ஹசன் அலி, முஜீப் சாஹுல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

மேலும் வாசிக்க>>>> "வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? பரங்கிப்பேட்டை த.த.ஜ. பிரச்சாரம்!"

6 கருத்துரைகள்!


:::: 10.20-க்கு தொடங்கிய விழா 11.55-க்கு நிறைவுபெற்றது.

:::: 10.40-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

:::: மவ்லவி கபீர் அஹமது மதனி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, சிதம்பரம் மூசா, கேப்டன் ஹமீது ஆகியோர் தலா 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள்.

:::: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் 10.45க்கு வருகை தந்தார்.
:::: சால்வை அணிவிக்க வந்தவர்களை தன் கையில் கொடுக்கும்படி தலைவர் நூர் முஹம்மது கேட்டு கொண்டார். அதனால் யாரும் சால்வைகள் போர்த்தவும் இல்லை – யாருக்கும் போர்த்தப்படவும் இல்லை.
:::: கேப்டன் ஹமீது ஜமாஅத் நிதிக்கு காசோலை மூலம் ரூ12,000 வழங்கினார்.

:::: விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட முன்னாள் ஜமாஅத் நிர்வாகிகள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.

:::: முன்னாள் அமைச்சரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி இராமஜெயம் வருகை தரவில்லை.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் அருள்முருகன் கலந்துக்கொண்டார்.

:::: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியத்துரை கலந்துக்கொண்டார்.

:::: நகர தி.மு.க.அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் கலந்துக்கொண்டார்.

::::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

:::: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பிலால், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகி ஹாஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செழியன் மற்றும் ஆரியநாட்டு சலங்குகாரத்தெரு பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

:::: மாதக்கோயில் தெரு பஞ்சாயத்தார்கள் கலந்துக்கொண்டனர்

:::: பரங்கிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் கலந்துக்கொண்டார்.

:::: சிதம்பரம் தாலுகா காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி பற்கேற்கவில்லை

:::: அழைப்பிதழ் வழங்குவதற்கு பொறுப்பேற்றவர்கள் செய்த குளறுபடியால் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் விடுப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது

:::: கா.மு.கவுஸ் நன்றியுரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டு இறுதியில் மாற்றம் செய்யப்பட்டதால் ஆவேசமுற்ற கா.மு.கவுஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதுப்பற்றி குரலெழுப்பிய போது தலைவர் டாக்டர் நூர் முஹம்மது அவரை சமாதானப்படுத்தினார்.
:::: பதவி ஏற்பு விழா முடிவடைந்து சற்று தாமதமாக வந்த பான்மல், டாக்டரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

:::: இரு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி சற்று விரைவாக முடிக்கப்பட்டது.
:::: 11.38-க்கு தொடங்கிய தனது ஏற்புரையை டாக்டர் 11.50-க்கு நிறைவு செய்தார்.

:::: நன்றியுரைக்கு பின்னர் வந்திருந்தோர் டாக்டரை கட்டித் தழுவி தங்களது ஸலாத்தினையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

:::: தாயகம் வந்திருக்கும் பஷீர் அஹமது (தம்மாம்), குலாம் ஜெய்லானி மியான் (குவைத்), ஹுஸைன் (ரியாத்) உள்ளிட்ட வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் அமைப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

:::: விழா முடிவில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


:::: மாலை 6 மணிக்கு ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜமாஅத் அலுவலகத்தை திறந்து, புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


களத்தொகுப்பு: ஹம்துன் அப்பாஸ் / MGF
மேலும் வாசிக்க>>>> "பதவியேற்பு விழா துளிகள் (படங்களுடன்)"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234