பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை : அனல் மின் நிலையத்திற்கு வேலி அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தில் கடந்த 20ம் தேதி ஐ.எல்.எப்.எஸ்., தனியார் அனல்மின் நிலையத்தினர் வாங்கிய இடத்தில் வேலி அமைத்ததை கிராமத்தினர் தடுத்து நிறுத்தினர். ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு ஏற்படாததால் பிப்ரவரி 5ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீண்டும் ஆர்.டி.ஓ., இந்துமதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் புகழேந்தி, கிராமத்தினர் தரப்பில் விவசாய சங்கத் தலைவர் சண்முகம், பரமானந்தம், விவசாய சங்க மாவட்ட செயலர் சேகர், ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலர் சேகர், கம்பெனி தரப்பில் மோனீஷ் அகுஜா, பொதுமேலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஐந்து மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராததால் மீண்டும் டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Source: Dinamalar

மேலும் வாசிக்க>>>> "அனல் மின் நிலைய வேலி பிரச்னை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் அடுத்த மாதம் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் அமைக்க சுமார் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலத்தை அந்த நிறுவனம் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த மின் உற்பத்தி நிலையம் வந்தால் தங்களுடைய மீன்பிடி தொழில், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி தலைமையில் நடந்து வந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் நேற்று புதுக்குப்பம், கரிக்குப்பம், பஞ்சங்குப்பம் உள்பட கிராம விவசாயிகள், அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் ஆகிய கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பி.முட்லூரில் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அருண் மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணி வாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நுகர்வோர் பேரவை மாவட்ட செயலாளர் நிஜாமுதீன் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அமைந்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து பேசினார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பாண்டியன், ஒன்றிய பேரவை செயலாளர் ராசாங்கம், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி உமாமகேஸ்வரன், நகர செயலாளர் செல்வக்குமார் மற்றும் கரிக்குப்பம் சண்முகம், பரமானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தில் மின்உற்பத்தி நிலையம் அமைத்தால் மீனவர்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஆகவே இதை கண்டித்து அடுத்த மாதம் 11-ந் தேதி சிதம்பரம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

Source: Daily Thanthi

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை அருகே தனியார் மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரத்தில் 11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்"

1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை தெற்கு தெரு வண்ணாரப்பாளையத்தில், கதிரவன், கலைச்செல்வன் ஆகியோர்களின் தந்தையும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற, K.S. Sir என்றழைக்கப்படும் புலவர் கு.செல்வராஜ் (வயது 75) அவர்கள் நேற்று (29-01.2011) மாலை மரணம் அடைந்தார். அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை (31-01-2011) நடக்கின்றது.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234