
பரங்கிப்பேட்டை வீடுகளில் இறப்பு என ஏற்படும்போது, அவரவர்களின் உற்றார்-உறவினர்களுக்கு சொல்லி அனுப்புவதைவிட முதலில் தகவல் தெரிவிப்பது பரங்கிப்பேட்டையில் முன்மாதிரி இளைஞராக இருக்கும் சுல்தான் பாஷாவிற்குத்தான். அந்த அளவிற்கு சமூக சேவையில் ஆர்வமிக்கவராய் இறந்தவர்களின் உடலை குளிப்பாட்டுவது முதல் அடக்கம் செய்யப்படும் வரை எல்லா வேலைகளிலும் எந்தவித தயக்கமின்றி எந்த பலனுமின்றி சேவை செய்து வந்த இவர், தன் பொருளாதார தேடல் கருதி நேற்று சவூதி அரேபியாவுக்கு பயணமனார்.
அனைத்து தரப்பினருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்கும் இவர், பணத்திற்கோ (அ) பொருளுக்கோ ஆசைப்படமால் இறைவனுக்காக பரங்கிப்பேட்டையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சமுதாய-சமூக சேவை புரிந்துள்ளார். மேலும் சில பள்ளிவாசல்களில் நிறைய பொருப்புகளை கவனித்தும் வந்துள்ளார். இச்சேவவையை குறிப்பாக வைத்து பக்கீம்ஜாத் எனப்படும் மக்தூம் அப்பாப் பள்ளியில் ஆடிட்டர் இல்யாஸ் அவர்களின் ஏற்பாட்டில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுல்தான் பாஷாவின் சேவையை கௌரவிக்கப்பட்டது.
மேலும் இவரை கௌரவிக்கும் வகையில் MYPNO வலைப்பூ ஏற்பாடுசெய்த விருந்திலும் கலந்துக் கொண்டார். 'எனது பொருளாதார தேவை குறித்து நான் வெளிநாட்டிற்கு சென்றாலும், இறைவனுக்காக நான் அங்கேயும் என்னால் முடிந்த அளவிற்கு சமூகப் பணிகளில் இறைவனின் நாட்டத்தோடு ஈடுபடுவேன் என உறுதிபட தெரிவித்தார்.