புதன், 20 பிப்ரவரி, 2008

ITJ சார்பாக பரங்கிப்பேட்டையில் மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) சார்பாக மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மவ்லவி. S.I. அப்துல் காதிர் மதனி "சமூக தீமைகள்" என்ற தலைப்பிலும், ஆலிமா ஹமீதுன்னிசா "ஸபர் மாதம் ஓர் ஆய்வு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர துனைத்தலைவர் ஐ. ஹபீப் முஹம்மது பரிசளித்து சிறப்புரையாற்றினார்.