பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 15 ஜூன், 2011 5 கருத்துரைகள்!

நம்முடைய mypno.com இணைய தளம், சில மாதங்களாக, கட்டமைப்பு மறு சீரமைப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, சீரமைப்பு பணி முடிவடைந்த நிலையில், நம் இணைய தளம் உங்கள் முன் வலம் வர தயாராக இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ், வெள்ளிக்கிழமை முதல் நமது இணையதளம் செயல்பட தொடங்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இது நாள்வரை தங்கள் ஆர்வம் சற்றும் குறையாமல், தங்களது ஆதரவை நம்முடைய வலைப்பூவின் மூலம் பதிவு செய்தீர்கள்.

உங்கள் ஆதரவை தொடர்ந்து நாடுகின்றோம்.

விரைவில் பற்பல புதிய தகவல்களையும், சுவையான பதிவுகளையும் தங்கள் கண்முன் கொண்டுவர முயற்சித்து வருகின்றோம்.

உங்கள் ஆதரவையும் , கருத்துக்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

உங்கள் அன்புடன்
mypno.com ஆசிரியர் குழு
மேலும் வாசிக்க>>>> "புதிய கட்டமைப்புடன் உங்கள் MYPNO.COM"

7 கருத்துரைகள்!முஸ்லிம்கள் அதிகம் வாழும் பல ஊர்களில் ஒவ்வொரு முஹல்லாவுக்கும் ஒரு ஜமாஅத் என்ற அடிப்படையில் ஊருக்கு குறைந்தது ஐந்து ஜமாஅத் என்றளவில் இருந்து ஐக்கியம் என்பது ஐயம் மிக்க வினாவாகவே இருக்கும், ஆனால் பெயருகேற்றப்படி ஒரே ஐக்கிய ஜமாஅத் என்பது, பரங்கிப்பேட்டைக்கு இறைவன் வழங்கிய அருட்கொடைகளில் முதன்மையான ஒன்றாகும்.

சமுதாய ஒற்றுமை, மத நல்லிணக்கம், கல்வி, மகளிர் நலன், வட்டியில்லா கடனுதவி, சிறுதொழில்களுக்கான வாய்ப்புகள், மருத்துவம், அவசரக்கால ஊர்திகள், இயற்கை இடையூறுகளின் போது உதவி என்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வரும், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் பல முஸ்லிம் ஊர்களுக்கு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

இதன் அடுத்த கட்டமாக அமைக்கப்பட்ட கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில், பல ஊர்களில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் பரங்கிப்பேட்டையுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கடலூர் முதுநகர் (OT) ஜமாஅத்தார்கள் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையிலான நிர்வாகிகளை கடந்த சில தினங்களுக்கு முன் சந்தித்து ஜமாஅத் செயல்பாடுகளை கேட்டறிந்தனர், மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைப்பெற்ற இச்சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைப்பெற்றது.

படம்: TNTJ PNO
மேலும் வாசிக்க>>>> "முன்னோடியாகிறது இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்..!"

2 கருத்துரைகள்!
சமச்சீர் கல்வி குழப்பத்தால் ஜூன் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிக்கூடம் ஜூன் 15 அன்று திறக்க அரசு உத்தரவிட்டது. மேலும் சமச்சீர் கல்வி குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இன்று பரங்கிப்பேட்டையில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன, கடந்த 2 மாத காலமாக காலை நேரப்போக்குவரத்து இல்லாததின் காரணமாக அமைதியாக இருந்த பரங்கிப்பேட்டை நகர வீதிகளில் காலை 8 மணி முதல் பள்ளிக்கூட வேன்கள் - ஆட்டோக்கள் போக்குவரத்து மிகுந்ததால் வழக்கமான பரப்பரப்பு மீண்டும் காணப்பட்டது. பரங்கிப்பேட்டையின் " தி.நகர் ரங்கநாதன் தெரு" என்றழைக்கப்படும் மேட்டுத்தெரு வணிக வளாகங்களில், பள்ளிக்கூடங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று மாலை மக்கள் போக்குவரத்து அதிகமாக இருந்தது. மாணவ - மாணவிகளின் கல்வி சிறக்க mypno.com ஆசிரியர் குழு சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். மாணவ - மாணவிகளை வாழ்த்துகிறோம்.
மேலும் வாசிக்க>>>> "இறைவா..!, கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக..."

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234