சனி, 21 ஜூன், 2008

கண்டன ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் இன்று (21-06-2008) சனி மாலை 6 மணியளவில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை கட்டிமுடித்து ஓராண்டாகியும் இதுவரை திறக்கப்படாமலேயே இருப்பதை கண்டித்தும், அரவு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததை கண்டித்தும், புதுப்பேட்டை அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று 37 மாணவர்கள் வாந்தி-மயக்கம், வயிற்றுவலி ஏற்பட்டதற்கான சுகாதார சீர்கேட்டை கண்டித்தும், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இரவு நேர அவசர-ஆபத்து நேரங்களில் மக்கள் அவதிபடும் அவலநிலையைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனையை விரைவில் திறக்கமால் வைத்திருந்தால் அதை உடைத்தாவது நாங்கள் திறப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார் சிதம்பரம் வட்ட செயலாளர்.

இறப்புச் செய்தி

பெரிய ஆசரகாணாத் தெரு மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனார் "நகைக்கடை பாவா" என்கிற S.M. ஷெரீஃப் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று காலை 11 மணியளவில் புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...