தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
லெதர் பிராசஸிங் பிரிவில் முதுநிலை டிப்ளமோவும், லெதர் பிராசஸிங், லெதர் கூட்ஸ், லெதர் கார்மென்ட்ஸ், புட்வேர் ஆகிய பிரிவில் டிப்ளமோ படிப்பும் வழங்கப்படுகிறது.
டிப்ளமோ படிப்பிற்கு வேதியியலை ஒரு பாடமாகக் கொண்ட பி.எஸ்சி., படிப்பும், டிப்ளமோ படிப்புகளுக்கு பிளஸ் 2 பாடத்தில் 50 சதவீத தேர்ச்சியும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், கான்பூர், ஜலந்தர் ஆகிய இடங்களில் இதற்கான மையங்கள் உள்ளன.
- ஜூன் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு ஜூன் 13ம் தேதி நடைபெற உள்ளது.
- இப்படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை முதல் தேதி துவங்குகிறது.
- விபரங்களுக்கு: http://www.clri.org/
ஆங்கில பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை
- ஹைதராபாத்தில் உள்ள தி இங்கிலிஷ் அண்ட் பாரின் லேங்க்வேஜ்ஸ் பல்கலைக்கழகத்தில் 2009-10ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பிஎச்.டி., ஆகிய ஆராய்ச்சி படிப்புகளும், ஆங்கிலம் கற்பிப்பதலில் முதுநிலை டிப்ளமோ, முதுநிலை சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
- மேலும் விவரங்களுக்கு: http://www.efluniversity.ac.in/
இக்னோ பல்கலை. மாணவர் சேர்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு படிப்புகளில் சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இக்னோ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
- இக்னோ பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
- பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் மாணவர்களின் வசதிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- எனவே, ஏப்ரல் 30-ம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவர்கள் தாமத கட்டணம் ரூ.200 செலுத்தத் தேவையில்லை.
- விண்ணப்பத்தை ரூ.100 செலுத்தி நேரில் பெறலாம்.
- www.ignou.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விவரங்களுக்கு 044-22541919, 22542727 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.