12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு தற்போது 2 மணி நேரம் முன்பு வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி கலிமா மேல்நிலைப்பள்ளி 87 சதவிகிதம் தேர்ச்சி (23க்கு 20 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவிகிதம் தேர்ச்சியும் (102 க்கு 47 பேர் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55 சதவிகிதம் தேர்ச்சியும் (122க்கு 67 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளன. 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்று கலிமா மேல்நிலைபள்ளியை சேர்ந்த சுல்தானி என்கிற மாணவி (10ம் வகுப்பிலும் இவரே முதல் மதிப்பெண்) ஊரின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். முஹம்மது அக்ரம் (கலிமா நகர்) 1200 க்கு 991 மதிப்பெண் பெற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுபஸ்ரீ என்கிற மாணவி 1200க்கு 989 மதிப்பெண் பெற்று பள்ளி முதல் நிலை பெற்றுள்ளார்..
முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.
தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள உடனடியாக வழங்கி உதவிய பரங்கிப்பேட்டை கல்விக்குழுவிற்கு வலைப்பூ சார்பில் நன்றி
இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முதல் நிலை சாதித்த மாணவ மாணவியரின் பேட்டிகள் வலைப்பூவில் வெளியாகும்.