திங்கள், 13 ஏப்ரல், 2009

நம்பினால் நம்புங்க!

இந்திய நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 552. (மாநிலங்களிலிருந்து 530, யூனியன் பிரதேசங்களிலிருந்து 20, ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் 2)
  • பட்ஜெட், மழைக்காலம், குளிர் காலம் என்று வருடத்துக்கு மூன்று முறை சபை கூடியாக வேண்டும்

  • நாடாளுமன்றம் செயல்படும் ஒவ்வொரு நிமிடமும் ஆகும் செலவு ரூ.26 ஆயிரம். (எம்.பி.க்கள் செயல்பாடுகள் வேறு)

  • ஒரு எம்.பி.யின் மாதச் சம்பளம் 16 ஆயிரம் ரூபாய், மாதாந்திர தொகுதி செலவு 20 ஆயிரம் ரூபாய், அலுவலக செல்வு 20 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 56 ஆயிரம் ரூபாய் ஆகிறது கணக்கு.

  • எம்.பி. சும்மா இருக்க முடியுமா? தொகுதியை சுற்றி பார்க்க வேண்டாமா? அதற்கான பயணப்படியாக ஒரு கி.மீ.க்கு 8 ரூபாய் கிடைக்கும்.

  • நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டால் ஆயிரம் ரூபாய் தருவார்கள். (கூட்டத்தில் பேசினாலும் பேசா விட்டாலும் கவலையில்லை)

  • டெல்லி எம்.பி. ஹாஸ்டலில் அறை வாடகை இலவசம். அதற்கான மின்சாரக்கட்டணம் ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் வரை இலவசம்.

  • செல்போனில் 1 லட்சத்து 50 ஆயிரம் அழைப்புகள் வரை பேசிக்கொள்ளலாம்.

  • இந்தக் கணக்குகள்படி எம்.பி. ஐந்து முழு வருடங்கள் பதவியில் இருந்தால் சம்பாதிக்கும் தொகை 1 கோடியே 60 லட்சம் ரூபாய்.

  • மொத்தமுள்ள 534 எம்.பி.க்களுக்கான ஐந்தாண்டு செலவு, கிட்டத்தட்ட 855 கோடி ரூபாய்.

தமிழ் வழியில் வெளிநாட்டு மொழிகள் கற்கலாம்

பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய வெளிநாட்டு மொழிகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் ‘ரேஸ்’ அமைப்பு சான்றிதழ் படிப்பாக இதனை வழங்குகிறது.

இது குறித்து ‘ரேஸ்’ இயக்குனர் பிரான்சிஸ் பீட்டர் கூறுகையில்,

மூன்று பிரிவுகளாக வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகிறது.

அடிப்படை பிரிவில் 48 மணிநேரமும், அடுத்த பிரிவில் 60 மணிநேரமும், மூன்றாவது பிரிவில் 90 மணிநேரமும் வகுப்புகள் இருக்கும்.

இதற்கான கற்பிக்கும் முறை கலந்துரையாடல் முறையில் இருக்கும்.

அடிப்படை பிரிவு மாணவர்களின் கலந்துரையாடல் திறனை மேம்படுத்துவதாகவும், இரண்டாவது பிரிவு இலக்கணம் மற்றும் வாசிக்கும் திறனையும், மூன்றாவது பிரிவு மாணவர்களின் ஒட்டுமொத்த மொழித் திறனை மேம்படுத்துவதாகவும் இருக்கும்.

வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்வதில் ஆங்கில மொழியில் புலமையில்லாதவர்களுக்கும், பள்ளித் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கும் இப்படிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளை அடுத்து, ஜப்பானிய, ஸ்பானிய மொழிகளும் தமிழ் வழியில் கற்றுக்கொடுக்க இந்த அமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை - 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்

சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை வாத்தியாப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 150 பேர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர்.

அக் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பா.தாமரைச்செல்வன் முன்னிலையில் இவர்கள் இணைந்தனர். மண்டல பொறுப்பாளர் ரா. காவியச்செல்வன், பா. ரவிச்சந்திரன், தேர்தல் மேற்பார்வையாளர் திலீபன், நீதிவளவன், தடா சி. கதிரவன், கோவி. பாவானன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source: தினமணி

பகுஜன் சமாஜ் கட்சி சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறது

பகுஜன் சமாஜ் கட்சி 11 தொகுதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் நேற்று விழுப்புரத்தில் வெளியிடப்பட்டது.

லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

கடந்த 3ம் தேதி மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாயாவதி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

இரண்டாம் கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விழுப்புரத்தில் நேற்று நடந்தக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலர் விஜயன் வெளியிட்டார்.

தொகுதி வாரியாக வேட்பாளர் விவரம் வருமாறு:

  • கிருஷ்ணகிரி-மூர்த்தி,
  • சிதம்பரம் (தனி)-ராமலிங்கம்,
  • நீலகிரி (தனி) -கிருஷ்ணன்,
  • காஞ்சிபுரம் (தனி) - உத்ராபதி,
  • திருவண்ணாமலை - கோவிந்தசாமி,
  • விழுப்புரம் (தனி) - பொய்யாது (எ) அன்பின் பொய்யாமொழி,
  • நாமக்கல் - ஹரிகரசிவம்,
  • ஈரோடு - சிவகுமாரி,
  • திருப்பூர் - பாலகிருஷ்ணன்,
  • கடலூர் - ஆரோக்கியதாஸ்,
  • தஞ்சாவூர் - டாக்டர் சரவணன்.

பின் நடந்தக் கூட்டத்தில், விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி) தொகுதி வேட்பாளர்களை மாநில பொதுச் செயலர் விஜயன் அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், 'புதுச்சேரி உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வரும் 15ம் தேதி வெளியிடப்படும்' என்றார்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...