கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியத்திற்கான வீரர்கள் உடல் திறன் தேர்வு நடக்கிறது. வரும் 28ம் தேதி கடலூர் ஒன்றிய அளவில் வீர்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் காலை 8 மணிக்கு நடக்கிறது.
அண்ணாகிராமம் ஒன்றியத்திற்கு புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பண்ருட்டி ஒன்றியத்திற்கு பண்ருட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும் வீரர்கள் தேர்வு நடக்கிறது.
அதே போல் 29ம் தேதி பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பி.முட்லூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், புவனகிரி ஒன்றியத்தில் புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீரப்பாளையம் ஒன்றியத் திற்கு சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் மேல் நிலை பள்ளியிலும் நடக்கிறது.
வரும் 30ம் தேதி நல்லூர் ஒன்றியத்தில் எறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியிலும், மங்களூர் ஒன்றியத்தில் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கம்மாபுரம் ஒன்றியத்திற்கு மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியிலும் வீரர்கள் தேர்வு நடக்கிறது.
மே 1ம் தேதி விருத்தாசலம் ஒன்றியத்தில் விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் குறிஞ்சிப்பாடி எஸ்.கே.வி., மேல்நிலைப் பள்ளியிலும், 2ம் தேதி குமராட்சி ஒன்றியத்தில் லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும், காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது.
ஒருவர் இரண்டு விளையாட்டில் சேர இரண்டு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய அளவு, மண்டல அளவு, மாநில அளவு என மூன்று கட்டமாக தேர்வு நடக்கிறது.
உயரமானவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
7, 8, 9, 11 வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்திலும், உடல் திறன் தேர்வு நடக்கும் அந்தந்த பள்ளிகளிலும் கிடைக்கும்.
Source: தினமலர்