பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் பதவிக்காலம் நிறைவடைந்ததை ஒட்டி புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக, ஐக்கிய ஜமாஅத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், ஓய்வு பெற்ற உள்ளாட்சி நிதித் தணிக்கையாளருமான I.முஹம்மது இல்யாஸ் தலைமையில் தேர்தல் குழு அமைக்கப்பட்டு 27-11-2022 அன்று தேர்தல் நடைபெற்று அன்றே முடிவும் அறிவிக்கப்பட்டது. 
இதில் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர்  வெற்றி பெற்றார்.  
இதனையடுத்து இன்று 10-12-22 ஷாதி மஹாலில் நடைபெற்ற பதிவியேற்பு நிகழ்ச்சியில் கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் தலைமையிலான நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொண்டது. 
H. முஹம்மது ஹனிபா தலைமையில் நடைபெற்ற விழாவை மீராப்பள்ளி இமாம் M.S. அஹமது கபீர் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். 
கலிமா. K. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் பதவிப்பிரமாணம் செய்து  வைக்க கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் ஜமாத்தின் புதிய தலைவாராக பொறுபேற்றுக்கொண்டார். 
இதனை தொடர்ந்து டாக்டர். S. நூர் முஹம்மது உப. தலைவராகவும், B.M.H. பாவசா மரைக்காயர், U. ஜெய்னுலாபுதீன் மாலிமார், S. முஹம்மது அலிகான், M. முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும் பொறுபேற்றுக்கொண்டனர்
|  | 
| தலைவர்: கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் | 
|  | 
| உப தலைவர்: டாக்டர். S. நூர் முஹம்மது | 
M.S. காஜா மெய்தீன் பொதுச் செயலாளராகவும், N.M. மெஹ்ராஜ் பொருளாளராகவும் பொறுபேற்றனர். 
|  | 
| N.M. மெஹ்ராஜ் பொருளாளராகவும், M.S. காஜா மெய்தீன் பொதுச் செயலாளராகவும், | 
மற்ற நிர்வாகிகள் விபரம் கீழே  
|  | 
| துணைத் தலைவர்கள்: B.M.H. பாவசா மரைக்காயர், U. ஜெய்னுலாபுதீன் மாலிமார், S. முஹம்மது அலிகான், M. முஹம்மது இப்ராஹிம் | 
| .jpeg) | 
| நிர்வாக செயலாளர்கள் | 
|  | 
| செயலாளர்கள் | 
|  | 
| வழக்கறிஞர்கள்: M.E. செய்யது அன்சாரி, M.Y. முகம்மது ஹனிபா | 
|  | 
| பைத்துல்மால் செயலாளர்கள் | 
|  | 
| கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் குழு | 
|  | 
| விளையாட்டு குழு | 
|  | 
| ஊடக அணி | 
|  | 
| ஜமாஅத் மேம்பாட்டு குழு 
 
 | 
|  | 
| ஷரீஅத் அணி | 
.jpeg)

நிகழ்ச்சியில் G.M. தல்பாதர் மரைக்காயர், Er. H. முஹம்மது ஷாஃபி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
நிகழ்ச்சியில் டாக்டர் ரஹ்மான், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன், செல்வி ராமஜெயம், SDPI மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், இந்தியா யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, ரஷீத் ஜான்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய நிர்வாகதிற்கு வாழ்த்து தெரிவித்து  பேசினர். 
விழாவில் பேசிய சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் "எதிர்கட்சியின் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தாலும் எனது தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டைக்கு எனது சட்டமன்ற நிதியிலிருந்து சாலைப் பணிகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் நிர்வாக ஒத்துழைப்புடன் நற்பணிகளை தொடர்வேன் என்று தெரிவித்தார் .
ஏற்புரை ஆற்றிய கேப்டன் M. ஹமீது அப்துல் காதர் “ஜமாத்திற்கு வரும் வழக்கு, பிணக்குகளில் அதில் வரும் தீர்ப்புகளில்  ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவர்களுக்கு பாதகமாகவும் வருவது இயல்பு. இதை தவிர்க்க முடியாதது. என்னால் முடிந்த அளவு அதில் நேர்மையாக இருக்கவே செயல்படுவேன். தீர்ப்புகளில் எந்த ஒருவருக்கு அதிருப்தி நிலவுகிறதோ அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். அதற்காக உலமாக்கள் குழுவினரிடம் பரிசீலினை செய்யலாம். பிறகு அவர்கள் வழங்கும் தீர்ப்பே இறுதியானது” என்று பேசினார்
கேப்டன் பாபா பக்ருதீன் நிகழ்வை தொகுத்து வழங்கினார். அப்துல் பாசித் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. 
|  | 
| நிகழ்ச்சி அழைப்பிதழ் |