புதன், 1 ஜூன், 2011

மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம்?

பரங்கிப்பேட்டை:  மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து மீராப்பள்ளி நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சின்னக்கடை அஞ்சல்நிலையம் காலி செய்தது குறித்தும் சத்திரம் சீர் செய்யாமல் இருப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க கோரி பரங்கிப்பேட்டை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது மக்கள் சிலரிடம் கையெழுத்து வாங்கி மீராப்பள்ளி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்த மனு குறித்து பதில் அளித்துள்ள மீராப்பள்ளி நிர்வாகம், அதற்கான காரணங்களை சுட்டிகாட்டியதுடன் விரைவில் சத்திரம் பழுது பார்க்கப்படும் என்றும். பலரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் சின்னக்கடை அஞ்சல்நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த மாசம் பத்து டூ பன்னண்டு!

பரங்கிப்பேட்டை: மின்சார வாரியத்தின் தினசரி மின்நிறுத்த நேரம் மாதந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் மாலை 3 மணி முதல் 5 அல்லது 6 மணி வரை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்தது. இன்று ஜூன் 1 முதல் நடப்பு மாதத்திற்கு தினசரி மின்வெட்டு காலை 10 முதல் பகல் 12 மணிவரை என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப பகல் 1 மணி வரைக்கும் இந்த மின்நிறுத்தம் நீடிக்கவும் வாய்ப்புள்ளது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...