அறிவியல் கண்காட்சிகள் என்பது மாணவர்களின் புத்தக அறிவிற்கு மாற்றாக விசாலமான அறிவினை வழங்குகிறது. பரங்கிபேட்டை அரசு பெண்கள் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பள்ளி அளவிலான அறிவியல் கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவியர்களை ஊக்கப்படுத்தும் முகமாக உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை சார்பாக சான்றிதழும் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
நேற்று பள்ளி துவங்கிய போது இவற்றை நமதூர் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ்வழங்கினார்கள். அப்போது பேசிய பள்ளியின் தலைமை ஆசிரியர் K. ஸ்ரீனிவாச ராகவன் சமீபத்தில் நோபல் விருது பெற்ற அறிவியலாளர் (வேதியியல்) வெங்கடராமன் ராமகிருஷ்ணன் நமது சிதம்பரத்தை சேர்ந்தவர் என்பதில் நமக்கு ஒரு செய்தி உள்ளது என்றார்.
பிறகு பேரூராட்சி தலைவர் அறிவியல் கண்காட்ச்சிகளின் முக்கியம், அரசு அளித்து வரும் ஆதரவு பற்றி மாணவிகளிடையே உரையாற்றினார். பள்ளியில் பல்வேறு நலத்திட்டங்களை நிகழ்த்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரிடம் பேசி உள்ளதாக தெரிவித்தார்.
மாணவிகளை ஊக்கப்படுத்தும் முறையில் உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை சார்பில் சான்றிதழும் புத்தகங்களும் வழங்கி உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளை பற்றி பாராட்டி பேசிய அவர், இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் நடைபெறும் அறிவியல் கண்காட்ச்சியினை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி தர உபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளையின், சகோதரர் நஜீர் உபைதுல்லாஹ் விருப்பத்துடன் முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவிகளை ஊக்கப்படுத்தும் இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீனிவாச ராகவன் அவர்களின் தனிப்பட்ட முயற்சியும், பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் அவர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பும், நஜீர் உபைதுல்லாஹ் போன்றோர்களின் தொண்டுள்ளமும் இதில் கவனிக்கப்பட வேண்டியவை.
மேலும் தமிழக அரசின் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன. கண்ணாடிகள் தரமானதாகவும் நளினமாகவும் இருந்தன. இதனையும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் வழங்கினார்
நமது சமுதாயத்தில் அறக்கட்டளைகள் மூலம் மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தும் முறைமைகள் இன்னும் அவ்வளவாக பிரபலமாகவில்லை. இந்நிலையில், சகோதரர் நஜீர் உபைதுல்லாஹ் அவர்கள் தனதுஉபைதுல்லாஹ் சாஹிப் அறக்கட்டளையின் மூலம் இந்த நன்முயர்ச்சியினை துவங்கி இருப்பது நல்லதோர் முன்னுதாரணம்.
இதனால் ஈர்க்கப்பட்டோ என்னமோ தெரியவில்லை ஒரு மாணவியின் பெற்றோர் ரூபாய் பதினைந்தாயிரம் தலைமை ஆசிரியரிடம் கொடுத்து வருடம்தோறும் பத்தாம் வகுப்பில் முதலிடம் பேரும் மாணவிகளுக்கு பரிசு வழங்க கேட்டு கொண்டார் என்ற தகவலை தலைமை ஆசிரியர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.