பரங்கிப்பேட்டை ஒன்றிய அ.இ.அ.தி.மு.கழகம் சார்பில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் தெருமுனை கண்டன பிரச்சாரக் கூட்டம் குமாரப்பேட்டை, புதுப்பேட்டை, புதுக்குப்பம்,கிள்ளை ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மாலை பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோயில் தெருவில் நடைப்பெற்றது.
MGR இளைஞர் அணி நகர செயலாளர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம், தான் பேரூராட்சி மன்ற தலைவியாக பதவி வகித்த போது செய்த பணிகள் குறித்து பட்டியலிட்டார், தொடர்ந்து பேசுகையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் குறிப்பிட்டார். கூட்டத்தில் இராசாங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரமேஷ், தலைமைக்கழக பேச்சாளர் கோ.ஜெயவேல் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கூட்டத்தில் மலை.மோகன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன்,ஷாஜஹான், வீராசாமி,இக்பால்,ஜெய்சங்கர், மாரிமுத்து, காமில், சுல்தான்,மாலிமார், யூசுப் அலி,ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.