புதன், 8 ஜூன், 2011

ஆட்சியருடன் ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு..!


கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கும் அமுதவல்லி-யை இன்று மாலை பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் சார்பில் ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில், ஜமாஅத் நிர்வாகிகள் ஹமீது கவுஸ், ஹாஜா கமால், உதுமான் அலி, ஜி.எம்.கவுஸ், அலாவுதீன் ஆகியோர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

..ம்ஹும்., கெடயாதாம்...!

திமுக எம்பி கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. முன்னதாக 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரின் ஜாமீன் மனுக்களையும் விசாரணை நீதிமன்றம் மே 20-ம் தேதி தள்ளுபடி செய்திருந்தது. அதை எதிர்த்து கனிமொழியும், சரத்குமாரும் தில்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களின் மீதான விசாரணை தில்லி உயர்நீதிமன்றத்தில் மே 30-ம் தேதி முடிவடைந்தது. அதன் மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 2ஜி ஊழலில் தொலைத்தொடர்பு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுடன் சேர்ந்து சதி செய்தார் என கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


தீர்ப்பு வாசிக்கப்படும்போது கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் இருந்தனர்.

2ஜி ஊழல் பணத்தில் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவிக்காக ரூ 200 கோடியை பெற்றார் என நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக சினியுக் பிலிம்ஸ் இயக்குநர் கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை பாட்டியாலா நீதிமன்றம் நிராகரித்தது. அவரது மனுவை நிராகரித்த நீதிபதி ஓ.பி.சைனி அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டவுடன் உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.

ரூ 214.84 கோடியை கடனாகப் பெற்றதாக கலைஞர் டிவியின் வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ 214.86 கோடி அளித்ததாக சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் 2009-10 ஆண்டு வரவுசெலவு கணக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சினியுக் நிறுவனம் பால்வா மற்றும் மொரானி சகோதரர்களுக்கு சொந்தமானது. சினியுக் நிறுவனத்தின் வரவுசெலவு கணக்கின்படி, அந்த நிறுவனம் ஆசிப் பால்வாவுக்கு சொந்தமான குஸேகாவோன் நிறுவனத்திடம் இருந்து ரூ 212 கோடியை கடனாகப் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆசிப் பால்வா டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் ஒரு இயக்குநராவார். டிபி ரியாலிட்டி நிறுவனம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆம்னி பேருந்து விபத்து: பலர் பலி?

சென்னையில் இருந்து திருப்பூருக்கு தனியார் ஆம்னி பஸ் 07-06-2011 இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சற்று முன் சென்ற போது பஸ் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் அந்த பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் இருந்து டிரைவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டார். பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் தீயில் கருகி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு வேலூர் கலெக்டர் நாகராஜ் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஜெயராம், தீயணைப்புத்துறை வேலூர் சரக துணை இயக்குனர் டேவிட் வின்சென்ட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்


முன்னர் வந்த செய்தி:
வேலூர் மாவட்டம் அவலூர் கிராமத்தில் உள்ளது சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை. இச்சாலையில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு 07.06.2011 அன்று இரவு தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் யாரும் தப்பிக்க முடியததால் 27 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் தெரிந்ததும் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...