பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

ஞாயிறு, 31 மே, 2009 2 கருத்துரைகள்!

மதுரை காமராஜ் பல்கலை., தொலைக் கல்வியில் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளின் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

தனித்தேர்வர்கள் தேர்வு விண்ணப்பங்களை கூடுதல் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்லாம்.

தபால் மூலம் பெற விரும்புவோர் ரூ.15 க்கான ஸ்டாம்ப் ஒட்டிய சுயமுகவரி எழுதிய கவர் இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வுகள் ஆகஸ்ட் 17ம் தேதி துவங்குகிறது.

இத்தகவலை கூடுதல் தேர்வாணையர் தெய்வமணி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க>>>> "பல்கலை., தேர்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை அருகே தங்க நகை, லேப் டாப் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (40).

கடந்த 28ம் தேதி மயிலாடுதுறையில் தனது மாமனார் இறந்த துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

நேற்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 46 பவுன் தங்க நகைகள், 15 ஆயிரம் ரூபாய், லேப் டாப், வீடியோ கேமரா, ஒரு செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது.

இதன் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் ஆகும்.

இது குறித்து ஜாகீர் உசேன் பரங்கிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் ராதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

மோப்ப நாய் அர்ஜூன் சம்பவ இடத்தில் இருந்து பு.முட்லூர் ஜவுளிக் கடை டாஸ்மாக் கடை அருகே ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை அருகே வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை"

0 கருத்துரைகள்!

திருப்பரங்குன்றம் கால்நடை பல்கலை., பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் முருகானந்தம் அறிக்கை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.,யில் இளநிலை கால்நடை படிப்பு, மீன்வள படிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் திருப்பரங்குன்றம் பயிற்சி மையத்தில் ஜூன் 15 வரை விநியோகப்படுகிறது.

பிளஸ் 2 வகுப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் இதர வகுப்பினர் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தேர்ச்சி மட்டுமே போதுமானது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஜூன் 15க்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய 0452 - 248 3903ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க>>>> "கால்நடை, மீன்வளம் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்"

0 கருத்துரைகள்!

வங்கிக் கடனுடன் கூடிய 'கிளினிக்கல் ஆராய்ச்சி மேலாண்மை' படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கே.பி.சி. ஆராய்ச்சி மையம், அப்பல்லோ மருத்துவமனையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து, 'கிளினிக்கல் சோதனை மேலாண்மை'யில் மேம்படுத்தப்பட்ட சான்றிதழ் படிப்புகளை புதிதாக வழங்க உள்ளன.

இது தொடர்பாக இரு அமைப்புகளின் நிர்வாகிகள் வி.டி.எஸ். ஸ்ரீராம், ஜெயந்திசாமிநாதன் ஆகியோர் நிருபர்களுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை கூறியது:

'கிளினிக்கல் சோதனை மேலாண்மையில் ஒரு வருடப் படிப்பு, 6 மாத படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில், வேதியியல், உயிரியல், மருத்துவம், பல் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகள், பார்மஸி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் சேரலாம்.

பயிற்சிக் கட்டணம் ரூ.1,75,000 வரை ஆகும்.

இதை நான்கு தவணைகளில் செலுத்தலாம்.

வங்கிக் கடன் பெற உதவி செய்யப்படும்.

தியரி வகுப்புகள் குரோம்பேட்டை எம்.ஐ.டி. கல்லூரியிலும், செய்முறை வகுப்புகள் அப்பல்லோ மருத்துவமனையிலும் வழங்கப்படும்.

மேலும் பயிற்சி காலங்களில் நாடு முழுவதும் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மையங்களில் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்க உதவி செய்யப்படும்.

படிப்பு தொடர்பான மேலும் விவரங்களுக்கு: http://www.au-kbc.org - http://www.apollohospitals.com/research.html ஆகிய இணையதளங்களைத் தொடர்பு கொள்ளலாம்' என்றனர்.

நல்வாழ்வுச் சிகிச்சைத் தொழிற்சாலை ஆலோசகர் எம்.டி. நாயர் கூறியது:

'இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தொற்று நோய்கள் அதிகமாக உள்ளன.

எனவே இதற்கான மருந்துகள், சிகிச்சைகள், மருத்துவமனைகள் ஆகியவை அதிகம் தேவைப்படுகின்றன.

இவற்றில் கிளினிக்கல் சோதனை முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் அதற்கான வளமையங்கள் போதுமானதாக இல்லை.

ஆனால், இந்த துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன' என்றார்.

கே.பி.சி. மைய இயக்குநர் மனோகர், சி.என். கிருஷ்ணன், ஜி. ரமேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் வாசிக்க>>>> "கிளினிக்கல் ஆராய்ச்சி மேலாண்மை படிப்பு"

0 கருத்துரைகள்!

தமிழக அரசு அரசாணை வெளியிட்டுப் பல ஆண்டுகளாகியும், பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமல் உள்ளன.

மேலும், தொழில் நுட்பப் பணியாளர்கள் என அறிவித்து 12 ஆண்டுகளாகியும், அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு அக்கறை காட்டாததால் நூலகர்களிடையே மிகுந்த மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதல் நிலை நூலகங்கள் 30, 2-ம், 3-ம் நிலை நூலகங்கள் 1,567, ஊர்ப்புற நூலகங்கள் 1,492, பகுதி நேர நூலகங்கள் 653 மற்றும் மொபைல் நூலகங்கள் உள்பட மொத்தம் 3,755 நூலகங்கள் இருப்பதாக அரசின் 2007-ம் ஆண்டின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மாவட்ட மைய நூலகத்தில் முதுநிலை நூலகரும், தாலுகா தலைமையக நூலகங்களில் 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நூலகர்களும், கிராமப் பகுதிகளில் பகுதி நேர நூலகர்கள், ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோரும் உள்ளனர்.

இதில் மாவட்ட நூலகருக்கும் சரி, ஊர்ப்புற நூலகருக்கும் சரி, பிளஸ் 2 மற்றும் சிஎல்ஐஎஸ் (நூலகத் தகவல் அறிவியல் சான்றிதழ் படிப்பு) முடித்திருந்தால், அவற்றை அடிப்படைத் தகுதியாகக் கொண்டு பணியில் நியமிக்கப்படுகின்றனர்.

ஆனால், இவர்களுக்கு எஸ்எஸ்எல்சி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டே, அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. பிளஸ் 2, சிஎல்ஐஎஸ் முடித்தது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதையொட்டி, தங்களைத் தொழில் நுட்பப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென்ற இவர்களது நீண்ட நாள் கோரிக்கை, 1997-ல் நிறைவேறியது.

இதையொட்டி, G.O.(1D) No.2. School Education (k2) Department Dated 05.02.1997-ன் மூலம் பொது நூலகத் துறையில் பணியாற்றும் நூலகர்களைத் தொழில் நுட்பப் பணியாளர்களாக அரசு அறிவித்தது.

ஆனால், இதுவரை தொழில்நுட்பப் பணியாளர்களுக்கான அடிப்படை ஊதியம் வழங்கப்படவில்லை.

அரசு உத்தரவு வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.

அது அமலுக்கு வந்தால், தற்போது ரூ.3,200 ஆக உள்ள அடிப்படை ஊதியம் ரூ.4.500 ஆக உயரும்.

இந் நிலையில், தமிழக அரசு தற்போது அறிவிக்கவுள்ள 7-வது ஊதியக் குழுப் பரிந்துரையிலும் இதற்கான அறிவிப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர் நூலகர்கள்.

தரம் உயராத நூலகங்கள்:

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான புத்தகங்களை, வாசகர்களைக் கொண்டிருக்கும் நூலகங்களைத் தரம் உயர்த்துவதற்காக Go.ms.no.1408/EDN (k) Dated 25.07.1980 - ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்திலும், பிறகு மாவட்டத் தலைநகரங்கள் புதிதாக உருவாக்கப்படும்போதும் பல நூலகங்கள் மைய நூலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.

ஆண்டுக்கு 20 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவற்றை முதல் நிலை நூலகமாகவும், ஆண்டுக்கு 8 ஆயிரம் புத்தகங்கள் இருப்பு, 12 ஆயிரம் வாசகர்கள் பயன்பாடு இருந்தால் அவை 2-ம் நிலை நூலகங்களாகவும் அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், பல நூலகங்கள் தரம் உயர்த்தப்படாமலேயே இன்றளவும் செயல்படுகின்றன.

தாலுகா தலைநகரங்களில் செயல்படும் 2 மற்றும் 3-ம் நிலை நூலகங்களை முதல் நிலை நூலகங்களாகத் தரம் உயர்த்துவதன் மூலம் புத்தகங்களும் அதிக எண்ணிக்கையில் கிடைக்கும்.

மக்களும் நீண்ட தூரம் பயணித்து தற்போதுள்ள மாவட்ட மைய நூலகத்துக்கு வர வேண்டிய அவசியம் இருக்காது.

தரம் உயர்த்துவதன் மூலம் கூடுதல் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, புதிதாக நூலகர்கள் நியமிக்கப்படுவதும், பல ஆண்டுகளாகப் பணியாற்றும் நூலகர்களுக்குப் பதவி உயர்வு வழங்கும் பணிகளும் தடையின்றி நிகழும். இதுபோன்ற ஏற்பாடுகள் இல்லாததால், நூலகங்களும் பின்தங்கியுள்ளன.

நூலகர்களும் பதவி உயர்வின்றி பின்தங்கியே உள்ளனர்.

எஸ்.ஜெய்சங்கர்

மேலும் வாசிக்க>>>> "தரம் உயர்வுக்குக் காத்திருக்கும் நூலகங்கள்!"

0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என்று, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். மீரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

அரசாணைப்படி ஏப்ரல், மே மாதங்கள் இலவசப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் ஆகும்.

5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இந்த மாதங்களில் இலவசமாக பிறப்புத் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் குறித்து, முன்னரே மக்களுக்குத் தெரிவிக்க முடியாமல் போயிற்று.

எனவே ஏப்ரல், மே மாதங்கள் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் என்று அரசாணை இருந்த போதிலும், ஜூன் 10-ம் தேதி வரை, மக்கள் இலவசமாகப் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கல் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

பிறப்புச் சான்றிதழ்கள், அவற்றின் இருப்பு, பராமரிப்பு, பாதுகாத்தல், பதிவேடுகள் பரிவர்த்தனை மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

பிறப்புகள் அனைத்தும் 100 சதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அனைத்து பிறப்புகளுக்கும் உடனடியாக இலவசமாகச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது என்றார் டாக்டர் மீரா.

கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (புள்ளியியல்) என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு திட்டம் பற்றி தெளிவுபடுத்தினார்.

மாவட்ட வருவாய் அலுவலரும் பிறப்பு இறப்பு அலுவலருமான எஸ். நடராஜன், அனைத்து வட்டாட்சியர்கள், கிராம அலுவலர்கள், வட்டார, தாலுகா மருத்துவமனை அலுவலர்கள் ஊராட்சி, போரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் வாசிக்க>>>> "ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம்"

0 கருத்துரைகள்!

தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 6 வார கால தொழில் திறன் பயிற்சி ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

இதற்கான ஆட்கள் தேர்வு ஜூன் 2-ம் தேதி கடலூரில் நடக்கிறது.

மத்திய அரசின் சிறு, குறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பெண்கள், ஊனமுற்றோர் சுயதொழில் புரியும் வகையில் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் இந்த பயிற்சி ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெறும்.

பயிற்சியில் தொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

குறைந்த முதலீட்டில் நடத்தப்படும் சில பொருள்களின் தயாரிப்பு குறித்துச் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.

கிளீனிங் பெளடர், சொட்டு நீலம், மெழுகுவர்த்தி, காகிதப் பொருள்கள், உணவு தயாரித்தல் போன்றவை செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.

வங்கிகளில் கடன் பெறுவதற்குத் திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிலை நிர்வகிக்கவும் தேவையான திறமையை மேம்படுத்துதல், அரசின் சலுகைகள், கடன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

பயிற்சியில் சேர குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.

18 முதல் 45 வயது வரை.

சேர விரும்புவோர் ஜூன் 2-ம் தேதி கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் காலை 10 மணிக்கு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவரிகளில் தேர்ந்து எடுக்கப்படும் 45 பேருக்கு 6 வார காலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் வாசிக்க>>>> "பெண்கள், ஊனமுற்றோருக்கு தொழிற்பயிற்சி: ஜூன் 2-ல் தேர்வு"

0 கருத்துரைகள்!

தேசிய சீனியர், ஜுனியர் போட்டி மற்றும் அகில இந்திய பல்கலைக் கழக போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்கள் 22 பேரை ஆண்டு தோறும் தேர்வு செய்து அவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையை இந்திய உணவு கழகம் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டில் இந்த திட்டத்துக்கான வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

கிரிக்கெட், ஆக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, பளுதூக்குதல் ஆகிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

15 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரமும், 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரமும் அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் ஜுன் 8-ந் தேதிக்குள் இந்திய உணவு கழகம், 3 ஹேடோஸ் ரோடு, சென்னை-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய உணவு கழக மண்டல ஸ்போர்ட்ஸ் புரமோஷன் கமிட்டி செயலாளர் ஷைனி வில்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க>>>> "இந்திய உணவு கழகம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை!"

0 கருத்துரைகள்!

வரும் 2011-ம் ஆண்டுக்குள், நம் நாட்டில் 2 ஆயிரம் பேர் வசிக்கும் அனைத்து கிராமங்களிலும் வங்கி கிளைகள் திறக்கப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் கட்டுப்படுத்தும் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையகம் மும்பையில் உள்ளது.

அங்கிருந்தபடி, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் உஷா தோரட், இந்தியா முழுவதிலும் பல்வேறு ஊர்களிலும் உள்ள நிருபர்களுக்கு `டெலி கான்பரன்சிங்' மூலமாக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அடித்தட்டு மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு கொண்டு செல்ல `முன்னோடி வங்கி' திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில அரசு வங்கிகள், நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வசிக்கும் மக்களுக்கு அரசின் நிதி உதவி திட்டங்களின் பயனை பெறும் வகையில் கடன்களை வழங்கி உதவி வருகின்றன.

இத்தகைய வங்கிகள் முன்னோடி வங்கிகள் (லீட் பேங்க்ஸ்) என்றழைக்கப்படுகின்றன.

இந்த வங்கிகளின் செயல்பாட்டினை மேலும் செம்மைப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி அதிகாரிகள், மற்றும் அசாம், குஜராத் உள்பட 3 மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர், நீண்ட ஆலோசனைக்கு பிறகு, பல்வேறு பரிந்துரைகளை தயாரித்துள்ளார்கள்.

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக, நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரின் கருத்தை அறிய திட்டமிட்டுள்ளோம்.

அடித்தட்டு மக்களையும் சென்றடையும் உள்ளூர் பத்திரிகைகள், இந்த வரைவு அறிக்கையின் மீதான கருத்தையும், ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும்.

இது தவிர, ரிசர்வ் வங்கியின் இணையதளத்திலும் இந்த அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதை படித்துப் பார்த்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கூறலாம்.

நாட்டில் கடைகோடியில் உள்ள மக்களையும் பொருளாதார வளர்ச்சியும், அதை சார்ந்த திட்டங்களும், இந்த முன்னோடி வங்கிகள் மூலமாக சென்றடைய வேண்டும் என்பதே நோக்கம்.

இதுபோல், நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் வங்கி கிளைகளை தொடங்க வேண்டும் என்பதும் எங்கள் விருப்பம். அது எளிதானதல்ல.

எனவே, 2 ஆயிரம் பேர் வசிக்கும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கிராமங்களிலாவது வரும் 2011-ம் ஆண்டுக்குள் வங்கி கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு உஷா தோரட் தெரிவித்தார்.

சென்னையில் இந்த டெலி கான்பரன்சிங்குக்கு ஏற்பாடுகளை செய்த ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எப்.ஆர். ஜோசப் கூறுகையில்,

``தமிழகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய அரசுத்துறை வங்கிகள், முன்னோடி வங்கிகளாக செயல்பட்டு வருகின்றன. இதன்படி ஒவ்வொரு வங்கியின் கட்டுப்பாட்டிலும் சில மாவட்டங்கள் உள்ளன.

இந்த வங்கிகள் மூலமாக மக்களுக்கு நிதியுதவி திட்டங்கள் சிறப்பாக சென்றடைவதற்காக மாவட்ட கலெக்டர், முன்னோடி வங்கியின் அதிகாரி, நபார்டு வங்கி அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்களிடம் ஆலோசனைகள் பெறப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன'' என்று கூறினார்.

மேலும் வாசிக்க>>>> "2011-ம் ஆண்டுக்குள் நாட்டில் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களில் வங்கி கிளைகள் திறக்கப்படும்! ரிசர்வ் வங்கி துணை கவர்னர் பேட்டி!!"

0 கருத்துரைகள்!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சென்னை மண்டலத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் மின்கட்டணத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

மின்சார அலுவலகத்திற்கு சென்று வரிசையில் காத்திருக்க தேவையில்லை.

இந்த புதிய வசதியின்படி, மின்சார வாரிய இணையதளத்திற்குள் (www.tneb.in) சென்று இந்தியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் `நெட்பேங்கிங்' மூலம் மின் கட்டணத்தை செலுத்திவிடலாம்.

கட்டணம் செலுத்தும் கடைசி நாளன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த நிலையில், புதிதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நெட்பேங்கிங் மூலம் மின்கட்டணத்தை செலுத்தும் புதிய வசதி சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது.

மின்சார வாரியத்தின் தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி (வருவாய்) எஸ்.சேக்கிழார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் டி.தேனப்பன் ஆகியோர் இதற்கான ஒப்பந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு பரிமாறிக்கொண்டனர்.

பின்னர் பொது மேலாளர் தேனப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த புதிய வசதியை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நெட்பேங்கிங் வசதி வைத்திருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்திவிடலாம்.

மின்சார அலுவலகத்தில் கியூவில் காத்திருக்க தேவையில்லை.

பணம் செலுத்தியதற்கான ரசீதையும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் மின்சார வாரியம், உரிய மின்கட்டணத்தை இ-மெயில் மூலமாக நுகர்வோருக்கு தெரிவிக்கும்.

மின்சார வாரியத்தின் சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து மின்நுகர்வோரும் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்திவிடலாம்.

நெட்பேங்கிங் போல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதியையும் சில தினங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

இவ்வாறு தேனப்பன் கூறினார்.

தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை நிதி கட்டுப்பாட்டு அதிகாரி சேக்கிழார் கூறும்போது, மின்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி சென்னை மண்டலத்தை தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மின்வாரிய அதிகாரிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் வாசிக்க>>>> "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி - மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்"

0 கருத்துரைகள்!

மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 சேரும் 50 மாணவ, மாணவிகளுக்கு, இலவச விடுதி வசதியுடன் கல்வி அளிக்கப்படும் என்று, மனித நேய அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி அறிவித்துள்ளார்.

சென்னையில் சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்ளை நிர்வாக இயக்குனர் மல்லிகா துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித நேய அறக்கட்டளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற அகில இந்திய அளவிலான தேர்வுகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அண்ணா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரிகள் போன்ற புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும் வகையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கிலும், இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்க 25 மாணவர்கள், 25 மாணவிகளுக்கு இலவச தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கவும், அவர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவும் சைதை துரைசாமி முன்வந்துள்ளார்.

இதில் சேர விரும்பும் மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் இயங்கி வரும் சைதை சா. துரைசாமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்.

அவர்களுக்கு புத்தகம் முதல் படிக்க தேவைப்படும் அனைத்துப் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள், பி.வி. கந்தசாமி, தாளாளர், சைதை சா. துரைசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 71, பைபாஸ் ரோடு, மேலூர், மதுரை மாவட்டம் 625 106. (போன் 0452-3204545, செல் போன் 94430 49599) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "+1 & +2 வகுப்பில் சேரப்போகிறீர்களா? இலவச வகுப்பிற்கு விண்ணப்பிக்க அழைப்பு!"

0 கருத்துரைகள்!

உலகம் முழுவதும், இன்று (31-ந் தேதி) புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக புகையிலை இல்லா நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம், ஆண்டுதோறும், மே மாதம் 31-ந் தேதியை, உலக `புகையிலை இல்லா நாளாக' அறிவித்து உள்ளது.

பீடி, சிகரெட் புகைப்பவர்கள், புகையிலை போடும் பழக்கத்துக்கு அடிமையானவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

புகை பிடிப்பதாலும், புகையிலையை வாயில் போட்டு மெல்வதாலும் வாய் புற்று நோய், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு, மூச்சுக்குழாய் வீக்கம், மூச்சுக் குழாயின் உள் சுவர்களில் புண் உண்டாகி அதன் மூலம் பல்வேறு நோய் தாக்குதல் என பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் முதிர்ந்த நிலை ஆஸ்துமா அல்லது `சிஓபிடி' என்னும் பாதிப்பு ஏற்படும்.

புகை பிடிப்பதற்கும் முதிர்ந்த குணப்படுத்த முடியாத ஆஸ்துமாவின் `சிபிஓடி'க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது.

சமீப காலமாக, வயதானவர்கள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் புகைப்பழக்கத்துக்கும், புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கத்துக்கும் தள்ளப்பட்டு உள்ளனர்.

இளம் வயதில் இந்த பழக்கத்துக்கு ஆளவதால், வெகு சீக்கிரத்திலேயே வாய் புற்று நோய், நுரையீரல் பாதிப்பு என பல்வேறு நோய்களால் தாக்கப்படுகிறார்கள்.

ரத்தத்தில் `ஆல்பாஒன் ஆன்டிட்ரிப்சின்' குறைந்திருந்தால் புகை பிடிப்பது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

புகை பிடிப்பவர்களில் பெரும்பாலானோர் சிகரெட் அல்லது பீடியின் புகையை உள் இழுத்து விடுவதால் மூச்சுத் திணறல், வீசிங், இளைப்பு போன்ற தாக்குதலுக்கும் ஆளாகின்றனர்.

உடலில் காற்று பரிமாறும் உறுப்பான ஆல்வியோலைல் பாதிப்பு ஏற்படுவதால் `சர்பேக்டன்ட்' என்ற ஒரு முக்கியமான ரசாயனப் பொருள் உற்பத்தி அழிக்கப்படுகிறது.

இளம் வயதில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மூச்சுக்குழாயில் `மேக்ரோபேஜ்' என்ற வெள்ளை அணுக்கள் பாதிப்பு அதிகம் உண்டாகிறது.

ஆங்காங்கு கெடுதல் விளைவிக்கும் `கொல்லாஜன்' என்ற நார்சத்து பரவ ஆரம்பித்து நுரையீரல் வரையில் கெடுகிறது.

இயற்கையில் நுரையீரல் திசு அணுக்கள் இறந்துவிட்டால் அதற்கு சமமாக புதிய திசு அணுக்கள் உண்டாக்கி சீராக வைத்துக்கொள்ளும் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு திசுக்கள் அதிகமாக அழியும் நிலை உண்டாகி மரணம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது.

எனவே, புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவோரும், அவற்றின் தீய குணங்களை உணர்ந்து இனியாவது புகைபிடிப்பதில் இருந்தும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் இருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை உண்டாக்கவே இன்று (மே 31) உலக புகையிலை இல்லா நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு என்பது வெறும் எழுத்தளவிலும், பேச்சு அளவிலும் இருந்து விடாமல் அதற்கு செயல்வடிவம் கொடுப்போம். புகையிலைக்கு விடைகொடுப்போம்.

மேலும் வாசிக்க>>>> "'`புகை பிடிப்பவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்'! - இன்று உலக புகையிலை இல்லா நாள்!!"

0 கருத்துரைகள்!

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலான மாணவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜுலை மாதம் நடைபெற உள்ளது.

அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் 5-ந் தேதி வரை வழங்கப்படும்.

பள்ளி மாணவராக தேர்வு எழுதியவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் விண்ணப்பத்தை பெற்று 5-ந் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தனித்தேர்வர்கள் அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் (அட்டஸ்டேஷன்) பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் அல்லது இன்டர்நெட் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலமும், அரசு கருவூலக சீட்டாகவும் செலுத்த வேண்டும்.

ஜுன் 5-ந் தேதிக்கு பிறகு விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் சென்னை மண்டல துணை இயக்குனர் மு.மனோகரன் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க>>>> "மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வுகள் - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்"

0 கருத்துரைகள்!

நாடு முழுவதிலும் பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் உள்ள 2,382 காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 6-ல் எழுத்து தேர்வு நடக்கிறது.

இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பிராந்திய முதன்மை ஆணையர் கே.சீனிவாசன் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழக பிராந்திய பிராவிடன்ட் பண்ட் அலுவலகத்தில், பிராந்திய முதன்மை ஆணையர் கே.சீனிவாசன், நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாடு முழுவதிலும் பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் 4 கோடி தொழிலாளர்கள் சந்தாதாரர்களாக உள்ளனர்.

இதில், தமிழகத்தில், மராட்டியத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 70 லட்சம் பேர் உள்ளனர்.

தமிழகத்தில் சந்தாதாரர்களிடமிருந்து ஆண்டுதோறும் பல்வேறு வகைகளில் 5 லட்சம் மனுக்கள் வருகின்றன. அவற்றில் 90 சதவீதம், உடனுக்குடன் சரிசெய்யப்படுகின்றன.

பிராவிடன்ட் பண்ட் சந்தாதாரர்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக, ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம்.

கடந்த ஆண்டில் கூட ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்பினோம்.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதிலும் எங்களது அலுவலகங்களில் உள்ள சமூக பாதுகாப்பு உதவியாளர் (மொத்தம்-2382) மற்றும் இளநிலை பொறியாளர் (சிவில்) பணியிடங்களை (மொத்தம் 11) எழுத்து தேர்வு வாயிலாக நிரப்ப திட்டமிட்டுள்ளோம்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு பட்டமும், ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரம் எழுத்துக்களை கம்ப்யூட்டரில் டைப் செய்பவருமாக இருக்க வேண்டும்.

மற்றபடி, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து கம்ப்யூட்டர் பயின்றதற்கான சான்றிதழை வைத்திருந்தால் நலம்.

இளநிலை பொறியாளர் பதவிக்கு, அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடமிருந்து, சிவில் அல்லது எலக்ட்ரிகல் என்ஜினீயரிங்கில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும்.

எஸ்டிமேஷன், டிராயிங் மற்றும் டிசைன் போன்றவற்றில் அனுபவம் இருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு, பொதுப்பிரிவினருக்கு 8.7.2009 தேதிப்படி, 18 வயது முதல் 27 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

எஸ்.சி-எஸ்.டி.யினருக்கு, 5 ஆண்டு வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்த்தப்படும்.

மத்திய அரசு மற்றும் பிராவிடன்ட் பண்ட் அலுவலக தொழிலாளர்களுக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

இளநிலை பொறியாளர் பணியிடத்துக்கும் மேற்கண்ட வயது வரம்பு பொருந்தும்.

சமூக பாதுகாப்பு உதவியாளர் பணியிடத்துக்கு எழுத்து தேர்வும், அதன்பிறகு, கம்ப்யூட்டர் தேர்வும் நடத்தப்படும்.

கடந்த ஆண்டில் இந்த பணியில் சேர்ந்த ஒரு பெண், தற்போது 17 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார்.

இளநிலை பொறியாளர் பணியிடத்துக்கு எழுத்து தேர்வும், அதன்பிறகு நேர்முக தேர்வும் நடைபெறும்.

மேற்கண்ட இருபிரிவினருக்கும் செப்டம்பர் 6-ந் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவையில் நடைபெறும்.

விண்ணப்பங்களை, தபால் பெட்டி எண்:8463, மண்டபேஷ்வர், போரிவலி (வெஸ்ட்), மும்பை-400103 என்ற முவரிக்கு சாதாரண தபாலில், ஜுலை 8-க்குள் அனுப்ப வேண்டும்.

உறையின் மீது, எந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள், சமுதாயம் மற்றும் தேர்வு மைய எண் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட முறையில் மனுக்கள் அமைந்திருக்க வேண்டும்.

பொதுப்பிரிவினர் ரூ.200-ம், எஸ்.சி-எஸ்.டி. பிரிவினர் ரூ.50-ம் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க>>>> "பிராவிடன்ட் பண்ட் அலுவலகங்களில் உள்ள 2,382 காலியிடங்களுக்கு தேர்வு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்"

வியாழன், 28 மே, 2009 0 கருத்துரைகள்!

தமிழகத்தில் விளையாட்டு பள்ளிகள், விளையாட்டு விடுதிகள் மே 30 ல் திறக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருச்சி, திருநெல்வேலி, மதுரை, சென்னை அசோக்நகர், ரெட்ஹில்ஸ், கிருஷ்ணகிரி, திருச்செங்கோடு, நெய்வேலி, சென்னை நந்தனம் ஆகிய இடங்களில் மாணவர் விளையாட்டு விடுதிகளும்,

ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு திண்டல் ஆகிய நான்கு இடங்களில் மாணவிகள் விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

இந்த விளையாட்டு விடுதிகள், தனியார் பள்ளிகள் உதவியுடன் நடத்தப்படும் விளையாட்டு பள்ளிகளுக்கான மாணவர் தேர்வு ஒன்றிய அளவில் ஏப்.,28 முதல் மே 7 வரை நடந்தது.

இதில் தேர்வு பெற்றவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் மே 9, 10ம் தேதிகளில் பங்கேற்றனர்.

மண்டல போட்டிகளில் தேர்வு பெற்றவர்கள் திருச்சியில் நடந்த மாநில அளவிலான தேர்வில் பங்கேற்றனர்.

இதில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகளில் தங்கி படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

7, 8, 9, 11 வகுப்புகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு விளையாட்டு விடுதிகள் மே30ல் திறக்கப்படவுள்ளது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் மே 30ல் விளையாட்டு விடுதிகளில் வந்து சேர வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க>>>> "மே 30 ல் விளையாட்டு பள்ளி, விடுதிகள் திறப்பு"

0 கருத்துரைகள்!

வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பயனாளிகளாக சேர விரும்புவோர் இன்று முதல் மீண்டும் விண்ணப்பங்களை அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம்.

வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு தினசரி 80 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் பதிவு செய்திருந்தாலும் அத்தனை பேருக்கும் ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கப்படும்.

இதுவரை நீர் ஆதாரங்களை மேம்படுத்தி தூரெடுக்கும் பணிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் நடந்து வந்தது.

தற்போது அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல்,சுகாதார மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இப்பணிகளில் ஈடுபடும் போது நூறு ரூபாய் சம்பளம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் இருந்ததால் புதிதாக எந்த விண்ணப்பங்களும் பெறப்படவில்லை.

இன்று முதல் தேர்தல் நடைமுறை விதிகள் விலக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து கிராம ஊராட்சிகளிலும் புதிதாக சேர விரும்பும் பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே பயனாளிகள் கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் தங்களது விண்ணப்பங்களை கொடுக்கலாம்.

விண்ணப்பிக்கும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் அடையாள அட்டையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளியாக சேர இன்று முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்"

0 கருத்துரைகள்!

மனிதன் பிறந்த நிலையிலேயே விடப்பட்டால் அவன் மிருகமாகி விடுவான்; அவனை மனிதனாக மாற்றுவது கல்வி.

எல்லாச் செல்வங்களிலும் கல்விச் செல்வமே மிகவும் உயர்ந்தது என்று கூறப்பட்டாலும், அந்தக் கல்வியைப் பெறுவதற்கும் பொருள்செல்வம் இல்லாமல் முடியாது என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது.மேலும் வாசிக்க>>>> "கல்வியா? செல்வமா?"

0 கருத்துரைகள்!

சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி சென்னையை அடுத்த மாத்தூரில் ஜூன் 6 முதல் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

சென்னை பெட்ரோலியம் நிறுவனம் ஆதரவில் திருவள்ளூர் மாவட்ட செஸ் சங்கம் இப்போட்டியை நடத்துகிறது.

பட்டம் வெல்லும் வீரருக்கு கோப்பையுடன் ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.
மொத்தப் பரிசுத் தொகை 1.05 லட்சம்.

போட்டியில் பங்கேற்போர் ஜூன் 1-ம்தேதிக்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அமைப்புக் குழு செயலாளர் எஸ். பலராமனை தொடர்பு கொள்ளலாம். போன்: 9884424747

மேலும் வாசிக்க>>>> "சென்னையில் சர்வதேச ரேட்டிங் செஸ் போட்டி"

0 கருத்துரைகள்!

சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருமானம், சாதி மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

தற்போது 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அம் மாணவர்கள் மேல்நிலை மற்றும் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி வருகின்றனர்.

அதற்கு தேவையான சாதி, இருப்பிடம், வருமானம் சான்றிதழ் பெற மாணவர்கள் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளித்து அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவதால் மிகவும் அவதியுற்றுள்ளனர்.

வெவ்வேறு இடங்களில் அலுவலகத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற மாணவர்கள் மிகவும் அலைகழிக்கப்படுகிறார்கள்.

அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகத்தில் இல்லாததால் இருவரிடம் கையெழுத்து பெறவே ஒருவார காலமாகிறது.

அதன்பின்னர் அந்த விண்ணப்பத்தை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் கையொப்பமிட்டு வழங்க மேலும் 5 தினங்களாகிறது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் 'சிறப்பு கவனிப்பு' செய்யப்பட்டால் உடனடியாக சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதனால் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை அனுப்ப முடியாமல் அவதியுற்றுள்ளனர்.

மேலும் வாசிக்க>>>> "மாணவர்களை அலைக்கழிக்கும் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகம்"

0 கருத்துரைகள்!

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேருவதற்கு இஸ்லாமிய மாணவியரின் குடும்ப வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தத் தொகை ரூ. 50 ஆயிரமாக இருந்தது.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு:

கடந்த ஆண்டில் திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி, கோவை, வேலூர் ஆகிய இடங்களில் இஸ்லாமிய மாணவியர்களுக்கென விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த விடுதிகளில் சேருவதற்கான மாணவியரின் பெற்றோர் ஆண்டு வருமான வரம்பு ரூ. 50 ஆயிரமாக இருந்தது. இது, ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அரசின் உத்தரவு காரணமாக, ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வரை குடும்ப வருமானம் கொண்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியர் பெரிதும் பயனடைவர் என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "விடுதிகளில் சேர இஸ்லாமிய மாணவியர்க்கு சலுகை"

0 கருத்துரைகள்!

வாயில் ஏற்படும் புற்று நோயைக் கண்டறியும் இலவச மருத்துவ முகாமுக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது.

உலக புகையிலையில்லா விழிப்புணர்வு தினத்தை (மே 31) முன்னிட்டு வரும் சனிக்கிழமை இந்த முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம் அன்றைய தினம் காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

வாயில் நாள்பட்ட புண், சாப்பிடும்போது எரிச்சல், சதை வளர்ச்சி மற்றும் வீக்கம், நாள்பட்ட வெண்ணிறப் படை உள்ளவர்கள், புகை பிடிப்பவர்கள், புகையிலை, பான் - பாக்கு பழக்கம் உள்ளவர்கள் ஆகியோர் இந்த முகாமுக்கு வரலாம்.

அடிப்படை ரத்த - திசு பரிசோதனை, தாடை எக்ஸ் ரே ஆகியவை இலவசமாகச் செய்யப்படும்.

தாடை ஸ்கேன் பரிசோதனை குறைந்த கட்டணத்தில் செய்யப்படும்.

மேலும் வாசிக்க>>>> "வாய் புற்று நோய் இலவச மருத்துவ முகாம்!"

0 கருத்துரைகள்!

இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை எம்எஸ்ஓடி மேலாண்மை பள்ளி அறிவித்துள்ளது.

'ஒரு பொறுப்பு வாய்ந்த இந்திய குடிமகனாக தற்போதைய பொருளாதார வீழ்ச்சியில் நான் எனது நாட்டை எவ்வாறு வழி நடத்துவேன்?',

அல்லது

'ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெறும் 30 லட்சம் மாணவர்களில் வெறும் 5 லட்சம் பேர் மட்டும் தங்கள் மேல்படிப்புக்கு மேலாண்மை கல்வியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதனை இரட்டிப்பாக்குவது எப்படி?'

ஆகிய தலைப்புகளில் தங்கள் கட்டுரையை எழுத வேண்டும்.

இக் கட்டுரை ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

இப் போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள் தங்கள் பெயரை www.smot.edu.in எனும் இணையதளத்தில் பதிவு செய்து அவர்களுடைய பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் வாசிக்க>>>> "கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி"

0 கருத்துரைகள்!

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் சார்பில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கண்காட்சி சென்னையில் பல்கலைக் கழக வளாகத்தில் 30 மற்றும் 31 தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் மீர் முஸ்தபா உசேன் கூறியதாவது:-

முதல் முதலாக மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளை சேர்ந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு கண்காட்சி ஒன்றை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் பல்கலைக் கழக வளாகத்தில் 30 மற்றும் 31 தேதிகளில் நடத்த உள்ளது.

இந்த கண்காட்சியை தமிழக குடும்ப நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 29-ந்தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

முதல்-அமைச்சர் கருணாநிதி ஆசியுடன் நடக்கும் இந்த கண்காட்சி தொடக்க விழாவுக்கு சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தலைமை தாங்குகிறார்.

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 60 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மருத்துவம், நர்சிங், பார்மஸி, பிஸியோதெரபி, யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்டவை அவற்றில் இடம் பெறுகின்றன.

இந்த கண்காட்சியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் கொண்ட கல்லூரிகள் பற்றிய விவரங்கள் விளக்கங்கள் அளிக்கப்படும்.

பி.எஸ்சி. நர்சிங் படித்தால் அமெரிக்காவில் நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமல்ல 10-வது வகுப்பு தேறியவர்கள் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளை படித்து உடனடியாக வேலை பெறலாம்.

இந்த கண்காட்சியில் 10-வது வகுப்பு படித்தவர்கள், பிளஸ்-2 படித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலைபட்டம் பெற்றவர்கள், நர்சிங் படித்தவர்கள், மருத்துவம் படித்தவர்கள் மருத்துவம் சார்ந்த கல்வி கற்றவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

எந்த கல்லூரிகளில் எந்த படிப்புகள் உள்ளன. அதனால் வேலைவாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றிய விளக்கமும் கண்காட்சியில் அறியமுடியும்.

சில தனியார் மருத்துவமனைகளில் எம்.பி.பி.எஸ். படித்த டாக்டருக்கு பதிலாக சித்தா மற்றும் யுனானி படித்த டாக்டர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இது பெரிய குற்றமாகும்.

அதுபோல நர்சுக்கு பதிலாக ஆயாக்களை நர்சு உடை அணியவைத்து உள்ளார்கள். இதுவும் தவறு.

பொதுமக்களை ஏமாற்றக்கூடாது.

பாம் டி. என்ற புதிய படிப்பு 3 கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது பிளஸ்-2 படித்த மாணவர்கள் 6 வருடம் படிக்கவேண்டும். அதில் ஒருவருடம் பயிற்சி ஆகும்.

இந்த படிப்புக்கு நல்ல வேலைவாய்ப்பு உண்டு.

இந்த படிப்பு வேல்ஸ் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, ராமகிருஷ்ணா பார்மஸி கல்லூரி ஆகியவற்றில் வர உள்ளது.

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதுகலை டிப்ளமோ படிப்பு புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி வர உள்ளது.

இவ்வாறு டாக்டர் மீர்முஸ்தபா உசேன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க>>>> "மருத்துவம் சார்ந்த கல்வி - வேலை வாய்ப்பு கண்காட்சி"

0 கருத்துரைகள்!

27-05-2009 அன்று, பரங்கிப்பேட்டையில் பெண்களுக்காக நடத்தப்பட்டு வரும் "அல்ஹஸனாத் இஸ்லாமிய கல்லூரி"யின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவும், கோடைக்கால தீனியாத் வகுப்புகளுக்கான பரிசளிப்பு விழாவும் கல்லூரியில் நடைப்பெற்றது.

இஸ்லாமிய ஐக்கியஜமாஅத் தலைவர் மதிப்பிற்குரிய யூனுஸ் நானா அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மீராப்பள்ளி முத்தவல்லி மதிப்பிற்குரிய நவாப்ஜான் நானா அவர்கள் பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கி மாணவிகளை ஊக்குவித்தார்கள்.

கல்லூரி முதல்வர் சகோதரர் அப்துல் காதர் மதனி, சகோதரர் தவ்லத் அலி, சகோதரர் பைஸல் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல்: கு. நிஜாம்

மேலும் வாசிக்க>>>> "அல்ஹஸனாத் இஸ்லாமிய கல்லூரியின் பட்டமளிப்பு விழா"

செவ்வாய், 26 மே, 2009 5 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை மாணவ சமுதாயம் முன்னுதாரணமாக கொள்ள வேண்டிய மாணவர்களை பற்றி எழுதி வருகிறோம்.
நமதூர் திரு ராதா கிருஷ்ணன் - திருமதி மருத்துவர் அங்கயற்கண்ணி இவர்களின் மகனான ஆனந்த் என்பவர் அவர்களில் ஒருவர் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.
அண்ணா பல்கலைகழகத்தில் B.E. Geo Informatics & B.Tech (I.T) (Dual Degree) இந்த வருடம் முடித்து விட்டு I.A.S. இந்திய ஆட்சிப்பனிகளுக்கான அரசு குடிமைத்தேர்வு 2008 தேர்வினை எழுதினார்.

தரப்பட்டியலில் முந்தி I.R.S. (Indian Revenue Service) இந்திய வருவாய் பணியில் தேர்வு பெற்றுள்ளார்.

அரசு குடிமைத்தேர்வு என்பது (Civil Service Exams) நமது இந்திய அரசின் ஆட்சிப்பணிக்கான உயர் அளவிலான தேர்வாகும். சூழ்திறன் அமையப்பெற்ற மற்றும் மிகுந்த பயிற்சியும், முயற்சியும் உள்ள மாணவர்கள் மட்டுமே இதனை எளிதாக வென்றெடுக்கலாம்.

I.A.S. க்காக முயற்சி செய்து தரப்பட்டியலில் சற்று குறைந்ததால் I.R.S. கிடைத்திருந்தும் ( I.R.S.சே ஒரு சாதனை தான் ) இவர் மீண்டும் I.A.S. க்காக (Reappear) இந்த வருடம் தேர்வு எழுதுகிறார்.
தனது லட்ச்சியத்தில் வெற்றி பெற்று சாதித்த, இனியும் சாதிக்கப்போகும் இவர், I.A.S. ஆக நமது வாழ்த்துக்கள்.

இவரை பற்றி சில குறிப்புக்கள்

* பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு நாட்டின் மிக உயர் தர கல்வி மையமான I.I.T. யில் பயில நுழைவு தேர்வு எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பற்றி கேட்டால் " that was not a serious attempt " என்று மெலிதாக சிரிக்கிறார்.

* ஆனந்த் அவர்களின் தந்தை ராதா கிருஷ்ணன் அவர்கள் ஒய்வு பெற்ற வங்கி மேலதிகாரி. தற்போது பொது சேவையில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இவரின் தாயார் நாம் அனைவரும் அறிந்த மருத்துவர் அங்கயற்கன்னி அவர்கள். நமதூரில், மருத்துவர் நூர் முஹம்மது தவிர நடு இரவிலும் மக்களின் அவசர மருத்துவ உதவிக்காக தன்னலம் கருதாது சேவை புரிபவர்.

* இவரின் சகோதரர்கள் இருவர் அஷ்விந்த், அரவிந்த். ஒருவர் M.B.B.S இன்னொருவர் B.D.S. படித்து வருகின்றனர்.

நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.
மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டையில் ஒரு ஐ.ஏ.எஸ்"

0 கருத்துரைகள்!

தேசிய சப்-ஜூனியர் எறிபந்து சாம்பியன் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸில் ஜூன் 12 முதல் 14-ம்தேதி வரை நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்கும் தமிழக சிறுவர், சிறுமியர் அணிகளுக்கான தேர்வுப் போட்டி சென்னையில் சோழிங்க நல்லூர் சாக்ரட் ஹார்ட் பள்ளியில் வரும் 30-ம்தேதி நடைபெற உள்ளது.

15 வயதுக்குள்பட்டவர்கள் தகுதியான சான்றிதழுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு மாநில சங்கத்தின் செயலாளர் டி. பாலவிநாயகம் (98410 25254), அல்லது ரெக்ஸ் ஆபிரஹாம் (98403 65077) தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வாசிக்க>>>> "சென்னையில் 30-ம்தேதி மாநில எறிபந்து அணி தேர்வுப் போட்டி!"

0 கருத்துரைகள்!

சென்னையில் செயின்ட் ஜோசப் அகாதெமி நடத்திவரும் விளையாட்டு விடுதிக்கு 2009-10 கல்வி ஆண்டுக்கு தட கள வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

7-ம் வகுப்பு முதல் கல்லூரியில் படிப்பவர் வரை தேர்வுப் போட்டியில் பங்கேற்கலாம்.

செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மைதானத்தில் வரும் 27-ம்தேதி காலை 8 மணிக்கு தேர்வுப் போட்டி நடைபெறும்.

தேர்வு செய்யப்படுவோருக்கு கல்வி, தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தலைமைப் பயிற்சியாளர் நாகராஜனை 99406 99728 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் வாசிக்க>>>> "தடகள விடுதிக்கு வீரர்கள் தேர்வு"

0 கருத்துரைகள்!

பிச்சாவரத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை ஜல்லி மீன்.
மீன் ஓட்டின் கீழ்பாகத்தின் தோற்றம்.


சிதம்பரம் அருகே கிள்ளை பிச்சாவரம் சின்னவாய்க்கால் தீவு கடற்கரையில் அரியவகை மீன்கள் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கின.

ஆமை ஓடு போன்ற மேல்பாகத்தை கொண்ட இந்த மீன்கள் ஜல்லி மீன் வகையைச் சேர்ந்தது என கிள்ளை பேரூராட்சித் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

அந்த ஓட்டில் கோலம் போட்டது போன்ற அழகிய தோற்றம் இயற்கையாகவே அமைந்துள்ளது.

ஓட்டின் உள்புறமும் அழகிய சித்திரம் வரைந்தது போன்று உள்ளது.

"இந்த மீன்கள் கோடைக்காலத்தில் கடற்கரையில் அதிகம் ஒதுங்கும். இவை மருத்துவ குணம் வாய்ந்தவை'' என்று பரங்கிப்பேட்டை கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க>>>> "பிச்சாவரத்தில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்"

1 கருத்துரைகள்!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளி மாணவி சந்தான லட்சுமி 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பள்ளியில் 277 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினார்கள்.

அதில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பள்ளி மாணவி சந்தான லட்சுமி 500-க்கு 479 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

அதே பள்ளியை சேர்ந்த மாணவி ராஜ மோகனா அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி அருள் செல்வி சமூக அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப் பெண்களையும் பெற்றனர்.

தமிழ் பாடத்தில் மாணவி சங்கீதா 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் சந்தானலட்சுமி 96மதிப்பெண்களும், கணிதத்தில் செவ்வந்தி 99 மதிப்பெண்களும் பெற்றனர்.

தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவிகளையும் பள்ளியின் முதல்வர் லீலாவதி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்து கூறினர்.

சமீபத்தில் நடந்த பிளஸ்-2 தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க>>>> "எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளி மாணவி சந்தானலட்சுமி சாதனை!"

0 கருத்துரைகள்!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 33 ஆயிரத்து 711 பேர் எழுதினார்கள்.

22 ஆயிரத்து 758 பேர் தேர்வு பெற்றனர்.

இது 71.69 சதவீதம். கடந்த ஆண்டைவிட 0.45 கூடுதல் ஆகும்.

கடலூர் கல்வி மாவட்டத்தில் கடலூர் புனித அன்னாள் மேல்நிலைபள்ளி மாணவி கலைவாணி 492 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

அதே பள்ளியைச் சேர்ந்த இந்துமதி 491 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், காட்டுமன்னார் கோவில் பி.ஜி.ஆர். மேல்நிலைப்பள்ளி மாணவர் முத்து 489 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தையும் பிடித்தார்கள்.

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் திருப்பாபுலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி 487 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார்.

கடலூர் முதுநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீநிதி 485 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்.

பண்ருட்டி புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி கோமதி 484 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தை பிடித்தார்.

கடலூர் மாவட்டத்தில் மெட்ரிக் தேர்வில் 806 பேர் எழுதினார்கள்.

இதில் 787 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மாவட்ட அளவில் கடலூர் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர் கணேஷ்குமார் 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பெற்றார்.

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி, அதே பள்ளியை சேர்ந்த முனீஸ்வரன், சிதம்பரம் காமராஜர் மெட்ரிக் பள்ளி மாணவி ஜீவிதா, நெய்வேலி செயின்ட் பால் பள்ளி மாணவர் பாலமுருகன், அதே பள்ளியை சேர்ந்த பிரவின்குமார், நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி அனுபாரதி ஆகிய 6 பேரும் தலா 481 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்தார்கள்.

நெய்வேலி செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி மாணவி ஜனனி, அனுஷா, செரின் சல்மா, கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் பள்ளி மாணவி சாந்தி ஆகிய 4 பேரும் தலா 480 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் 3-ம் இடம் பிடித்தார்கள்.

இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி தெரிவித்தார்.

மேலும் வாசிக்க>>>> "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடலூர் மாவட்டத்தில் 71 சதவீதம் பேர் தேர்ச்சி"

திங்கள், 25 மே, 2009 0 கருத்துரைகள்!
சிதம்பரம் அருகே கடலோரத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது.


சிதம்பரத்திலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதி.


பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீட்டர்.


மேற்கே உப்பனாறும், தெற்கே கீழ்திருக்கழிப்பாலையும், வடக்கே காடுகளும் எல்லைகளாக உள்ளன.


பிச்சாவரத்தின் சதுப்பு நிலக் காடுகள் கடலோரம் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது.


இந்த சதுப்பு நிலக்காடுகளில் (சுந்தரவனக் காடுகள்) உப்பங்கழிகள் மற்றும் அடர்த்தியான மாங்குரோவ் (சுரபுண்ணை) காடுகள் உள்ளன.


இந்த காடுகளில் சுமார் 4400 கால்வாய்கள் உள்ளன.இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.


இந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்வையிடலாம்.


கடலோரம் உள்ள எழில்மிகு அழகிய தீவுகளையும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கலாம்.


பிச்சாவரம் வனப்பகுதியை சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பார்க்கும் வண்ணம் உயர்கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.


2004 டிசம்பர் 26ந் தேதி சுனாமி பேரலை வந்த போது இந்த மாங்குரோவ் காடுகள் பேரலையின் வேகத்தை குறைத்து பிச்சாவரம் பகுதியில் பெரும்பாதிப்பை தடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகுக்குழாம் மற்றும் உணவகம் ஆகியவற்றை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது என சுற்றுலா அலுவலர் காமராஜ் தெரிவித்தார்.


இங்கு பிச்சாவரத்தில் கடலோரப் பகுதியில் எம்ஜிஆர் திட்டு, சின்ன வாய்க்கால் மற்றும் பில்லுமேடு ஆகிய எழில்மிகு தீவுகள் உள்ளன.


எம்ஜிஆர் நடித்த இதயக்கனி படப்பிடிப்பு அங்குள்ள தீவில் நடத்தப்பட்டதால் அந்த தீவிற்கு எம்ஜிஆர் திட்டு என பெயரிடப்பட்டுள்ளது.


மேலும், பிச்சாவரத்தில் சூரியன் உள்ளிட்ட பல்வேறு படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.


மேற்கண்ட தீவுகளில் மீனவர் குடும்பங்கள் வசித்து வந்தனர்.


சுனாமி பேரலைக்கு பிறகு அத்தீவில் மீனவர்கள் குடியிருக்க அரசு தடைவிதித்துள்ளது.


தற்போது சின்ன வாய்க்கால் தீவில் குடில்கள் அமைக்கப்பட்டு பகல் நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


ஆண்டு தோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம் கூட்டமாக வரும்.


ஆனால், தற்போது வெளிநாட்டு பறவைகள் வருகை எண்ணிக்கை குறைந்துள்ளது.


"ஹெச்ஐவி என்ற உயிர்க்கொல்லி மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோயை அழிக்கக்கூடிய வேதிப்பொருட்கள் மற்றும் கொசுக்களை விரட்டக்கூடிய ரசாயனப் பொருட்கள் மாங்குரோவ் காடுகளில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது'' என அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியியல் உயராய்வு மைய இயக்குநர் டி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.


"பிச்சாவரம் பகுதியில் தில்லை என்ற வகை மரங்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மரவகைகள் அழிந்துவிட்டதாகவும், தில்லை மரம் மருத்துவகுணம் கொண்டது என்றும், தொழுநோய் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் தாவரமாகும்.


எனவே, இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் தில்லை தாவரங்களை வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்கிறார் கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன்.


இத்தகைய அழகுமிக்க வனப்பகுதியுடன் கூடிய பிச்சாவரத்துக்கு ஒருமுறை சென்று வரலாமே!


பஸ் கட்டணம்


சிதம்பரத்திலிருந்து 16 கி.மீட்டர் தொலைவில் உள்ளது பிச்சாவரம்.


சிதம்பரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் உள்ளது.


பஸ் கட்டணம் ரூ.5.


பிச்சாவரத்தில் அறிஞர் அண்ணா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாம் உள்ளது.


ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.25 கட்டணம்


குறைந்தது 5 பேர் ஒரு படகில் பயணம் செய்ய ரூ.125 வசூலிக்கப்படுகிறது.


காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைதான் படகு சவாரி.


சிதம்பரம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலக எண்: 04144- 238739.


கிள்ளை பேரூராட்சி அலுவலகம் எண்: 04144-249227.Source: தினமணி

மேலும் வாசிக்க>>>> "பிச்சாவரம் போகலாம் வாங்க!"

0 கருத்துரைகள்!

வேலை வாய்ப்பு அதிகம் உள்ளதும், சி.ஏ. படிப்புக்கு இணையானதுமான புள்ளியியல் துறை படிப்பு பற்றி தமிழக மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

பொதுவாக பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளில் சேரவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த படிப்புகளைத் தவிர, உயரிய அந்தஸ்து, வருமானம் தரும் மற்ற படிப்புகளும் உள்ளன.

உதாரணமாக, புள்ளியியல் துறை படிப்பு. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த படிப்பு வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 முடித்தவர்கள் இதில் சேரலாம்.

இந்த துறை குறித்து சென்னை பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாசன் கூறியது:

புள்ளியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இன்சூரன்ஸ், மருந்து கம்பெனிகள், சோப்பு, குளிர்சாதனப் பெட்டி போன்ற பொருட்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் நிறுவனங்கள் போன்றவற்றில் மார்க்கெட்டிங் பிரிவில் சேரலாம்.

மேற்படிப்பு அதாவது எம்.எஸ்சி (ஆக்சூரிஸ்), எம்.எஸ்சி (புள்ளியியல்) படித்தவர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

ஆக்சூரிஸ் படிப்பு சார்ட்டர்டு அக்கவுண்டன்டுக்கு (சி.ஏ.) இணையாக கருதப்படுகிறது.

இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பாலிசிகளை வடிவமைக்கும் பணியை ஆக்சூரிஸ்கள் மேற்கொள்கின்றனர். அதாவது எந்த விதமான பாலிசியை கொண்டு வரலாம் என்பதை இவர்கள் தான் வடிவமைக்கின்றனர்.

ஆக்சூரிஸ் படிப்பு படிக்கும் போதே மும்பையில் உள்ள இஸ்டிடியூட் ஆப் ஆக்சூரிஸில் பதிவு செய்து, அதன் தேர்வை எழுத வேண்டும்.

இதில் வெற்றி பெற்றவர்கள், இந்த தேர்வு எழுதாத மற்ற ஆக்சூரிஸ்களைவிட மூன்று மடங்கு சம்பளம் கூடுதலாக பெறுகின்றனர்.

அதே போன்று இந்த துறை தொடர்பான பயோ ஸ்டேஸ்டிக்ஸ் படித்தவர்களுக்கு மருந்து தயாரிப்பு கம்பெனி, அவற்றைச் சோதனை செய்யும் கம்பெனி போன்றவற்றில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

முதுநிலை புள்ளியியல் படிப்பு சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ளது.

இந்த படிப்பில் டெல்லி, மும்பை, குஜராத் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் சேர்கின்றனர்.

தமிழக மாணவர்களிடம் இப்படிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.

இந்த ஆண்டு முதல் பி.எஸ்சி.,யில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் முதுநிலை படிப்பில் சேரலாம்.

கடந்த ஆண்டு வரை பி.எஸ்சி கணிதம், புள்ளியியல் படிப்பு படித்தவர்கள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டனர்.

இந்த படிப்பை முடித்தவர்கள் கம்பெனிகளில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது. ஆனால் மாணவர்கள் குறைவாக உள்ளனர் என்றார்.

மேலும் வாசிக்க>>>> "சி.ஏ.க்கு இணையான வேலை வாய்ப்புள்ள புள்ளியியல் படிப்பு!"

0 கருத்துரைகள்!

சென்னை ஆழ்வார்ப் பேட்டையில் இஸ்லாமிய சமய கண்ணோட்டத்துடன் 'பிரிஸ்டன் இன்டர்நேஷனல்' கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அந்தக் கல்லூரி தரப்பில் கூறியிருப்பது:

இந்தியாவிலேயே முதல் முறையாக, இஸ்லாமிய கண்ணோட்டத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தக் கல்லூரி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கே.பி.தாசன் சாலையில் உள்ளது.

இதில் மூன்று வருட பி.ஏ. (இஸ்லாமிய படிப்பு), பி.பி.ஏ., படிப்புகள், 2 வருட எம்.பி.ஏ., ஒரு வருட எக்ஸிக்யூடிவ் எம்.பி.ஏ., பி.எட். உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.

கனடாவைச் சேர்ந்த டாக்டர் பிலால் பிலிப்ஸின் நேரடி மேற்பார்வையில், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகியவற்றில் பணியாற்றிய பேராசிரியர்கள் பாடம் எடுக்கின்றனர்.

கல்லூரியில் ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி ஏ.சி. வகுப்பறைகள், தொழுகை நடத்த வசதி, லேப்டாப்களை இயக்கக் கூடிய பிரத்யேக வைப்பி வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இணையதளம்: http://www.prestonchennai.ac.in/

மேலும் வாசிக்க>>>> "சென்னையில் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் புதிய கல்லூரி!"

0 கருத்துரைகள்!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒரே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்திருக்கும் வசதி - நாடு முழுவதும் அறிமுகம்!

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் செல்போன் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர், வேறு நிறுவனத்திற்கு மாறினாலும், அதே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்திருக்கும் வசதி வரும் 2010-ஆம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இது முதல் கட்டமாக சென்னை, புதுடெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நான்கு பெரிய நகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வாடிக்கையாளர் சேவை அளிக்கும் நிறுவனத்தை மாற்றும்போது செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்திருப்பற்காக ரூ.200-300-ஐ கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதற்கான சரியான கட்டணத்தையும், இதர விதிமுறைகளையும், இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் வகுக்க உள்ளது.

ஒரு வாடிக்கையாளர் சேவை அளிக்கும் நிறுவனத்தை மாற்ற விரும்பினால் 48 மணி நேரத்திற்குள் மாற்றி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் ஒரே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்திருக்கும் வசதியை செயல்படுத்தும் பொறுப்பு கூர்கானைச் சேர்ந்த சைனிவர்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் எம்.என்.பி. ஆகிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சைனிவர்ஸ் இந்த வசதியை வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும், எம்.என்.பி. நிறுவனம் தென் மாநிலங்கள் மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தும்.

தற்போதுள்ள நிலையில் வாடிக்கையாளர் வேறு நிறுவனத்தின் செல்போன் சேவைக்கு மாறினால், செல்போன் எண்ணையும் மாற்ற வேண்டும்.

இதுபற்றிய விவரத்தை வாடிக்கையாளர்கள் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்த இடர்ப்பாட்டினால்தான் பல வாடிக்கையாளர்கள் ஒரே செல்போன் சேவை நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

இது ஏக போக வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது.

இதனால் நுகர்வோர்கள் நலன் பாதிக்கப்படுகிறது.

இதனால் செல்போன் எண்ணை நிரந்தரமாக வைத்திருக்கும் வசதியை அறிமுகப்படுத்துவதில் இந்திய தொலை தொடர்புத் துறை அதிக கவனம் செலுத்துகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த முறையில் சேவை அளிக்கும் நிறுவனத்திற்கு மாற முடியும்.

மேலும் வாசிக்க>>>> "ஒரே செல்போன் எண்ணை தொடர்ந்து வைத்திருக்கும் வசதி!"

0 கருத்துரைகள்!

கடலூரில் திடீரென இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது.

இதனால் அக்கினி நட்சத்திர வெப்பம் தணிந்தது.

அக்கினி நட்சத்திரம் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.

அன்று முதல் நாளுக்கு நாள் கடலூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

இதனால் பகல் நேரங்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலை உருவானது.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கடலூர் மக்கள் நீர், மோர், இளநீர் மற்றும் குளிர்பானங்களை பருகியும், வெள்ளரி, நுங்கு, தர்பூசனி ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

மாலையில் பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை லேசாக தூறல் போட்டது.

இதனால் கன மழை பெய்யும் என கடலூர் மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் தூறலோடு மழை நின்று விட்டது.

பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் பங்கர இடி மின்னலுடன் திடீர் என மழை பெய்தது.

அப்போது ஒரு சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

இந்த மழை சுமார் 1 மணி நேரம் வரை நீடித்தது.

சாலையோரங்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

இதனால் பூமி குளிர்ந்து அக்கினி நட்சத்திர வெப்பம் தணிந்தது.

அதிக பட்சமாக கடலூரில் 10.2 மில்லி மீட்டரும், பரங்கிப்பேட்டையில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

தொடர்ந்து நேற்று பகல் நேரங்களில் வானத்தில் கரு மேகங்கள் திரண்டு இருந்தாலும் மழை பெய்யவில்லை.

இதனால் நேற்று பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இல்லை.

மேலும் வாசிக்க>>>> "இடி-மின்னலுடன் கடலூரில் கோடை மழை! அக்கினி நட்சத்திர வெப்பம் தணிந்தது!!"

0 கருத்துரைகள்!


வெள்ளிக்கிழமை (22.05.2009) காலை சரியாக 8.30 மணிக்கு SS நகர் மைதானத்தில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்தும் முதலாம் ஆண்டு T-10 கிரிக்கெட் போட்டி துவங்கியது.

இப்போட்டியை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹமது யூனிஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் நடந்த முதல் போட்டியில் F.C.C Vs 11 boys அணியினர் மோதினர்.

அதில் F.C.C. அணியினர் வெற்றி பெற்றனர்.

Source: CWO
மேலும் வாசிக்க>>>> "கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி"

ஞாயிறு, 24 மே, 2009 0 கருத்துரைகள்!

கம்ப்யூட்டர் வழங்கப்பட்டுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு இணைய தள வசதி உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு, தனி இணையதள வசதி ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளின் விவரம், மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளியின் தரம், தேர்ச்சி விகிதம், தேர்வு முடிவுகள் வெளியீடு, ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கிடைக்கும் வகையில் அந்த இணைய தளம் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவர்கள் கம்ப்யூட்டர் கல்வி பெற, கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்பள்ளிகளுக்கு இணைய தள வசதியை அளிக்கும் பட்சத்தில், மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மறு கூட்டல் போன்றவற்றிற்கான விண்ணப்பங்களை இந்த இணைய தளத்திலேயே பெற்று விண்ணப்பிக்கலாம்.

பொதுத் தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் வாசிக்க>>>> "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையதள வசதி : அரசு ஏற்பாடு!"

0 கருத்துரைகள்!

முன்னாள் படை வீரர்கள் புதியதாக தொழில் மற்றும் வியாபாரம் செய்ய கடனுதவி செய்ய ரெப்போ வங்கி முன் வந்துள்ளது.

இது குறித்து முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள் புதியதாக தொழில் மற்றும் வியாபாரம் செய்து தங்களது குடும்ப வருமானத்தினைப் பெருக்கி தன்னிறைவு கண்டிட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தற்போது ஈடுபட்டு வரும் சுய தொழில் மற்றும் வியாபாரத்தினை அபிவிருத்தி செய்திட முன்னாள் படை வீரர்களுக்கு கடனுதவி அளித்திட ரெப்போ வங்கி முன் வந்துள்ளது.

இவ்வங்கியில் கடனுதவி பெற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர், கடலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனரை நேரில் அணுகி விபரம் பெற்று பயனடையுமாறு கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னு தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க>>>> "முன்னாள் படை வீரர்கள் தொழில் துவங்க கடனுதவி"

0 கருத்துரைகள்!

சிதம்பரம் அருகே ரோந்து சென்ற போலீஸ் ஜீப்பும், காரும் புதன் கிழமை இரவு மோதிக் கொண்ட விபத்தில் எஸ்.ஐ. உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

புவனகிரி காவல் நிலை குற்றப்பிரிவு எஸ்.ஐ. புஷ்பராஜ் தலைமையில் காவலர்கள் கார்த்திகேயன், யோகானந்தம், சிவசெந்தில் ஆகியோர் ஜீப்பில் புதன்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது. பி.முட்லூர் தீர்த்தாம்பாளையம் என்னுமிடத்தில் போலீஸ் ஜீப்பில் ஆக்சில் கட்டாகி கட்டுப்பாட்டை இழந்து சென்னையிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த கார் மீது மோதியது.

இதில் போலீஸ் ஜீப்பில் இருந்த எஸ்.ஐ. உள்பட 4 போலீஸாரும், கார் டிரைவர் ராஜேஷ் (22), காரில் பயணம் செய்த ராஜா (55), ராஜாத்தி (22) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் அண்ணாமலை நகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க>>>> "போலீஸ் ஜீப் -கார் மோதல்: எஸ்.ஐ. உள்பட 7 பேர் காயம்"

0 கருத்துரைகள்!

கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கடலூர் மாவட்டத்தில் 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டவையாக செயல்பட்டு வருகின்றன.

அவை வருமாறு:-

 1. தூய இருதய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பாரதி ரோடு, கடலூர்

 2. சேவா மந்திர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை

 3. அன்னை மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், இடைச்செருவாய், திட்டக்குடி

 4. பிஷப் பீட்டர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தேவனாம்பட்டினம் கடலூர்

 5. சி.எஸ். ஜெயின் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

 6. ஜெய விக்னேஷ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கீழ மூங்கிலடி ,சிதம்பரம்

 7. ஜெயந்தி பத்மநாபா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

 8. கீழ மூங்கிலடி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்

 9. லயோலா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கிருஷ்ணன்குப்பம், குள்ளஞ்சாவடி

 10. டாக்டர் மகாலிங்கம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வடலூர்

 11. நியூ மில்லினியம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குமாரப்பேட்டை, கடலூர்

 12. நெய்வேலி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மருங்கூர், கீழக்கொல்லை

 13. ஓ.பி.ஆர். ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கடலூர்

 14. சந்திர வதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பழஞ்சாநல்லூர்

 15. எஸ்.பி.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

 16. செந்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியவடவாடி, விருத்தாசலம்

 17. ஸ்ரீ ஆறுமுகம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தொழுதூர், திட்டக்குடி

 18. ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி

 19. புனித பால் அன்னை இந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், விருத்தாசலம்

 20. இந்தியன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பண்ருட்டி

 21. எம்.ஜி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெண்ணாடம்

 22. மெர்சி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிதம்பரம்

 23. ஸ்ரீ வெக்காளியம்மன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கழுதூர், திட்டக்குடி

 24. ஸ்ரீ பவானி வித்யாலயா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருவந்திபுரம்

 25. மங்களம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், புவனகிரி, சிதம்பரம்

 26. ஸ்ரீ விருத்தாம்பிகை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குப்பநத்தம், விருத்தாசலம்

 27. ஜே.எஸ்.ஜே.வி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், செல்லங்குப்பம், கடலூர்

 28. ஸ்ரீ ரங்கா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திட்டக்குடி

 29. டி.வி.சி. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஸ்ரீமுஷ்ணம்

 30. மூனா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பரங்கிப்பேட்டை

 31. விவேகானந்தா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேப்பளாநத்தம், விருத்தாசலம்

 32. எம்.கே.ராமன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், வளையாமாதேவி, சிதம்பரம்

 33. சந்திரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சேத்தியாத்தோப்பு

 34. ஷைனி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நவலிங்கம் நகர், சிதம்பரம்

 35. செவன் ஹில்ஸ் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரும்பூர், பண்ருட்டி

 36. ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பூதாமூர், விருத்தாசலம்

 37. மாவட்ட ஆ.க.ம.ப. நிறுவனம், கடலூர்

போன்றவை மட்டுமே அங்கீகாரம் பெறப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகும்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "கடலூர் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்"

0 கருத்துரைகள்!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை மாணவ-மாணவிகள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு முதல்...

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றுதான் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மட்டும் தங்கள் மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பள்ளி மாணவர்களும், தாங்கள் படித்த பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய...

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், அதே பள்ளியில் வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மதிப்பெண் சான்றிதழை பெற பள்ளிக்கு செல்லும்போது, தங்கள் இடம் பெற்றுள்ள ரேசன் கார்டு (குடும்ப அட்டை) மற்றும் ஏற்கனவே 10-ம் வகுப்பு மதிப்பெண் பதிவு செய்திருந்தால் அந்த வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றுடன் பிளஸ்-2 படித்த பள்ளிக்கு செல்ல வேண்டும்.

குடும்ப அட்டையில் பெயர் இருத்தல் அவசியம்

குடும்ப அட்டையில் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவியரின் பெயர் இல்லாவிட்டால், அவருக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய இயலாது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பின் பதிவு அடையாள அட்டை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாகவே பள்ளியில் வழங்கப்படும்.

பதிவு செய்பவர்கள் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வரத் தேவையில்லை.

எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2வில் தேர்ச்சி பெற்று, மதிப்பெண் சான்றுகளைபெற உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற கல்வி தகுதிகளை பதிவு செய்ய விரும்புவோர் வழக்கம்போல் வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பிற மாவட்டங்களில் குடும்ப அடையாள அட்டை உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவரது செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க>>>> "தாங்கள் படித்த பள்ளிகளிலேயே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவு செய்யலாம் - கடலூர் கலெக்டர் தகவல்"

0 கருத்துரைகள்!

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு ஆள் சேர்க்கும் பணி அடுத்த மாதம் நடக்க உள்ளது.

இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருவண்ணாமலையில்

இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் வரும் ஜுன் 10-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியை சார்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

சோல்ஜர் டெக்னிகல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட் மற்றும் சோல்ஜர் பொதுப் பணியில் சேர பிளஸ் 2 தேர்ச்சி, இன்டர்மீடியேட் படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் படித்திருக்க வேண்டும்.

சோல்ஜர் பொதுப் பணி, சோல்ஜர் டெக்னிகல் பணியில் சேரும் நபர்களுக்கு ஒரே மாதிரியான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

ஸ்கிரீன் தேர்வு

சோல்ஜர் பொதுப் பணியில் சேர விரும்பும் வேலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 11-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜுன் 12-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடக்கும்.

சோல்ஜர் கிளார்க் மற்றும் ஸ்டோர்கீப்பர்களுக்கு ஜுன் 14-ந் தேதி ஸ்கிரீன் தேர்வு நடைபெறும்.

விமானப்படை

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ஜுலை 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களுக்கு, அதிகாரிக்கு கீழ் நிலைப் பதவிகளுக்கான ஆள் சேர்ப்பு நடக்கும்.

இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் வாசிக்க>>>> "இந்திய விமானப்படை உட்பட ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி அடுத்த மாதம் நடக்கிறது"

0 கருத்துரைகள்!

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் ஜுன் மாதம் 15-ந் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதிப்பெண் பட்டியல்

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் ஜுன் மாதம் 15-ந் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும்.

தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

மாணவர்கள் அனைத்து பாடங்களுக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜுன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை வழங்கப்படும்.

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள் ஜுன் 5-ந் தேதி ஆகும்.

ஜுலையில் சிறப்புத்தேர்வு

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜுலை மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படும்.

இதற்கான விண்ணப்பங்களும் மேற்கூறப்பட்ட அலுவலகங்களில் கிடைக்கும்.

சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜுன் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் அல்லது பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு வசந்தி ஜீவானந்தம் கூறினார்.

மேலும் வாசிக்க>>>> "எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் 15-ந் தேதி கிடைக்கும்"

வியாழன், 21 மே, 2009 1 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை பர்மிட் இருந்தும் சிதம்பரத்தில் இருந்து நேர்வழியில் கடலூர் செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகரங்களில் பரங்கிப்பேட்டையும் ஒன்று.

நகர வளர்ச்சிக்கு ஏற்ப அரசு மூலம் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டையில் இருந்து வெளி பகுதிகளுக்கு செல்ல போதுமான பஸ் வசதியில்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்லும் பெரும்பாலான தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை வழியாக செல்ல பர்மிட் வாங்கியுள்ளனர்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டாக பரங்கிப்பேட்டைக்கு செல்லாமல் கொத்தட்டை வழியாக நேர் வழியில் சென்று விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பரங்கிப்பேட்டையில் கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், தொழில்நுட்ப பயிற்சி பள்ளி மற்றும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட், பேரூராட்சி அலுவலகம் என அனைத்து வசதிகளும் உள்ளது.

இங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் கடலூர், சிதம்பரம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர்.

பரங்கிப்பேட்டைக்கு பர்மிட் பெற்றுள்ள தனியார் பஸ்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.

இது குறித்து மோட்டார் வாகன அலுவலகத்திற்கு பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து கடலூர் செல்ல பரங்கிப்பேட்டை பர்மிட் பெற்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டைக்கு வராத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டையில் புதிய மாஜிஸ்திரேட்டாக சுதா பொறுப்பேற்றார்.

கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய சரத்ராஜ், பழனி கோர்ட்டிற்கு பணி இடமாற்றம் மாற்றப்பட்டார்.

தொடர்ந்து புதிய மாஜிஸ்திரேட்டாக திருச்சி 1வது கோர்ட்டில் பணி புரிந்த சுதா பரங்கிப்பேட்டை கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க>>>> "பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் பொறுப்பேற்பு"

0 கருத்துரைகள்!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக இரவு நேர பஸ்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் தினம் தினம் அவதிப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், அவரது மகன் சார்லஸ் அந்தோணி இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவல் தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கை அரசின் முன்னுக்கு பின் முரணான தகவலால் பிரபாகரன் இறந்தாரா, இல்லையா என்ற 'சர்ச்சை' உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்ட மக்கள் ஆங்காங்கே கூடி பேசி வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பிரபாகரனின் மரண செய்தி கேட்டு இலங்கை ராணுவத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியில் உள்ள வர்த்தகர்கள் உணர்வுப் பூர்வமாக கடையடைப்பு நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம், பண்ருட்டி போன்ற பகுதியில் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் உள்ள தி.மு.க., அலுவலகம் தீ பிடித்து எரிந்துள்ளது.

சில சமூக விரோதிகள் பஸ்கள் மீது கல்வீசி தாக்கி வருகின்றனர்.

நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது.

இதனால் மாலை நேரங்களில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு டவுன் பஸ்கள் அடியோடு நிறுத்தப்பட்டு விடுகின்றன.

எங்கோ ஒரு மூலையில் பஸ்கள் மீது கல்வீச்சு நடந்துவிட்டால் உடனே ஒட்டுமொத்த அரசு, தனியார் பஸ்களை நிறுத்தி விடுவது வழக்கமாகி வருகிறது.

நடந்த சாலையில் பாதுகாப்பு அளிக்காமல் ஒட்டுமொத்தமாக பஸ் போக்குவரத்தை தடை செய்து விடுகின்றனர்.

பின்னர் மெயின் லைனில் மட்டும் கால நேரம் இல்லாமல் பல மணி நேரம் காத்திருக்க வைத்து வாகனங்கள் சேர்ந்த பின்னர் 'ஹைவே பேட்ரால்' பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டுகின்றன.

இதுபோல போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் - புதுச்சேரி, கடலூர் - சென்னை, கடலூர் - சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களுக்கு மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது.

அண்டை மாநிலத்திற்கு கூட பஸ்கள் இயக்கப்படுவதில்லை.

நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விழுப்புரம் (தடம் எண் 155) திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பயணம் செய்ய தயாராக இருந்த பயணிகள் வேறு வழியின்றி பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

கிராமப் பகுதிகளுக்கு செல்லுவோர் நிலை அதோ கதிதான்.

இதனால் அரசு அலுவலர்கள், பெண்கள், வெளியூர்களிலிருந்து வருபவர்கள் பஸ் நிலையத்திலேயே காத்துகிடக்கும் அவலம் ஏற்பட்டது.

பகல் முழுவதும் உழைத்து விட்டு மாலை வீடு போய் சேர முடியாமல் சில தினங்களாக பயணிகள் தவித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் தொடரும் கடையடைப்பு... :

பிரபாகரன், அந்தோணி இறந்த செய்தி ஊடகங்கள் மூலம் வெளியானதைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடையடைப்பு நடந்து வருகிறது.

கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.

கடையடைப்பு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை.

சமூக விரோத செயலில் ஈடுபட்டால் துப்பாக்கிச்சூடு: எஸ்.பி., எச்சரிக்கை

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது வெளியில் வர முடியாத வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர் என எஸ்.பி., பிரதீப்குமார் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இலங்கை பிரச்னையை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பத்து அரசு பஸ்கள் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

இது தொடர்பாக வழக்கு பதிந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்டம் முழுவதும் ஆயுதம் ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் தீங்கு ஏற்படும் முயற்சிகளில் ஈடுபட்டால் அதை தடுக்கும் பொருட்டு போலீசார் துப்பாக்கி பிரயோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 136 போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணியிலும், முக்கிய சாலைகளில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு படையினர் சமூக விரோதிகளை தேடி வருகின்றனர்.

சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், கைது செய்யப்பட்டு வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிந்து சிறையில் அடைக்கப்படுவர். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

சமூக விரோதிகள் பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.

தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பஸ்கள் 'கட்' ஆட்டோ கட்டணம் அதிகரிப்பு

சிதம்பரத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இரவு நேரங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் ஆட்டோ கட்டணம் திடீரென அதிகரித்துள்ளது.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்த தகவலால் பஸ் உடைப்பு போன்ற சம்பவங்கள் நடப்பதால் கடந்த சில தினங்களாக பெரும்பாலான பகுதிகளுக்கு இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனால் கிராம பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரம் பகுதிகளில் உள்ள துணிக்கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கிராம பகுதிகளை சேர்ந்த அதிகமானவர்கள் பணி செய்கின்றனர்.

அவர்கள் பணி முடிந்து இரவு நேரங்களில் வீட்டிற்கு திரும்ப பஸ் கிடைக்காமல் கடும் அவதியடைகின்றனர்.

கூடுதல் செலவு செய்து ஆட்டோ எடுத்துக் கொண்டும், இரு சக்கர வாகனங்களில் சென்றும், நீண்ட தூரம் நடந்து சென்றும் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஆனால் ஆட்டோ கட்டணம் இரவு நேரத்தில் அதிகரிக்கப்படுவதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து சென்னை, கடலூர், புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை மார்க்கம் செல்லும் பஸ்களும் வழியில் ஆங்காங்கே 'கான்வாய்' முறையில் இயக்கப்படுவதால் பல மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருந்தாலும் பாதுகாப்பான பயணம் அமைந்தால் போதும் என பயணிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் வாசிக்க>>>> "இரவு நேர அரசு டவுன் பஸ்கள் திடீர் நிறுத்தம் : பிரபாகரன் மறைவால் பதட்டம்"

0 கருத்துரைகள்!

இன்றைக்கு கல்வி ஒரு மிகப் பெரிய வர்த்தக விஷயமாகிவிட்டது.

படித்தவர்கள் மட்டுமல்லாமல், பாமரர்களும் கூட, தங்கள் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதில் ஆர்வமாகவும், உறுதியாகவும் இருக்கின்றனர்.

உயர் கல்வி பெற்றால் மட்டுமே குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை வளம் பெறும் என, பெரும்பாலான பெற்றோர்கள் உணரத் துவங்கிவிட்டனர்.

இதனால், தங்கள் குழந்தைகள் துவக்கத்தில் இருந்தே, தரமான கல்வி பெறும் வகையில், சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சேர்க்கின்றனர்.

இதனால், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புக்களில் கூட சேர்க்கைக்காக காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

பெற்றோர்களை பொறுத்த வரையில், தனியார் கல்வி நிறுவனங்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்தால் மட்டுமே அவை சிறப்பாக ஆங்கில அறிவு பெறும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது.

துவக்கத்தில் இருந்தே ஆங்கில அறிவு பெற்றால் மட்டுமே, தங்கள் குழந்தைகள் உயர் கல்வியில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள்; நல்ல நிறுவனங்களில் பணி கிடைக்கும்; அதன் மூலம் கூடுதல் சம்பளம் பெற முடியும் என்பது அவர்களின் எண்ணம்.

ஒரு வகையில், அவர்களின் எண்ணம் சரியானது தான்.

இன்றைக்கு, ஆங்கிலம் மட்டுமே இணைப்பு மொழியாக உள்ளது.

முன்னைப் போல அல்லாமல், இன்றைய இளைஞர்கள் சர்வ சாதாரணமாக வெளிநாடுகளுக்கு சென்று, பணிபுரிய வேண்டியுள்ளது.

எனவே, அலுவலக பணிக்கும், தகவல் தொடர்புக்கும் ஆங்கில அறிவு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

ஆனாலும், அதற்காக பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் பெற்றோர்கள் தள்ளப்படுகின்றனர்.

சராசரி மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு இது ஒரு பெரும் சுமையாகவே மாறிவிடுகிறது.

குறிப்பிட்ட சில தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர, 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசு பள்ளிகளில், தொடக்க கல்வியில் இங்கிலீஷ் மீடியத்தை கொண்டு வந்தால், இப்பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இன்றைய நிலையில், அரசு பள்ளிகளில், தற்போது ஆறாம் வகுப்பு முதல் இங்கிலீஷ் மீடியம் உள்ளது.

சிறப்பு கட்டணம் செலுத்தினால், இங்கிலீஷ் மீடியத்தில் குழந்தைகள் படிக்கலாம். இந்நிலையில், தொடக்க கல்வியில் இருந்து இங்கிலீஷ் மீடியத்தை அறிமுகப்படுத்தினால், குழந்தைகள் முன்கூட்டியே ஆங்கில அறிவை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், தனியார் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய்களை கட்டணமாக கட்ட வேண்டிய கட்டாயமும் பெற்றோருக்கு ஏற்படாது.

மேலும் வாசிக்க>>>> "தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை...! தொடக்க கல்வியில் 'இங்கிலீஷ் மீடியம்' வருமா?"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234