பரங்கிப்பேட்டை: தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.கழக தலைவருமான கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் தமிழகமெங்கும் அக்கட்சியினரால் நேற்று கொண்டாடப்பட்டது. பரங்கிப்பேட்டை நகர தி.மு.கழகம் சார்பில் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு பால்-ரொட்டி-பழங்கள் வழங்கப்பட்டது.
நகர தி.மு.க செயலாளர் ஜெ.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் கலந்துக்கொண்டு பால்-ரொட்டி-பழங்களை வழங்கினார். பின்னர் நான்கு இடங்களில் தி.மு.க கொடி ஏற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், நகர அவைத்தலைவர் தங்கவேல்,பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் எம்.ஜி.எம்.காஜா கமால், பொற்செல்வி, ஒன்றிய பிரதிநிதி கோமு, பக்ருத்தீன், சிவபாலன், நாசர், மாயகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்துக்கொண்டனர்.
படம்: ஹமீது கவுஸ்