செவ்வாய், 13 அக்டோபர், 2009

மய்யத் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

ஆரிய நாட்டு சலங்குகார தெரு மர்ஹூம் வாப்பா துரை மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹும் ஹாஜி மன்ஜுர்சா அவர்களின் மகனாரும், ஹாஜி மன்ஜுர்சா, முஸ்தபா கமால் ஆகியோரின் தகப்பனாரும்,முபாரக் அலியில் மாமனாருமான ஹாஜி ஹாஜா கமால் (டிரைவர்) மர்ஹும் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

இன்ஷா அல்லாஹ் (14-10-2009) நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்

கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளிப்பண்டிகை வருகிற 17ந் தேதி (சனிக்கிழமை) வருவதையட்டி இப்போதே தங்கள் ஊருக்கு செல்ல பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இதற்காக ரெயில் மற்றும் பஸ்களில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சார்பில் கடலூரில் இருந்து சென்னைக்கு இந்த ஆண்டு 50 சிறப்பு பஸ்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இந்த பஸ்கள் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

வருகிற 14ந் தேதி (புதன்கிழமை) காலை முதல் 19ந் தேதி (திங்கட்கிழமை) வரை சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இது தவிர ஏற்கனவே சென்று வரும் பஸ்களின் சர்வீசையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வி துறை விளம்பர அறிவிப்பு

தேசிய அஞ்சல் வாரம்

பன்னாட்டு லயன்ஸ் சங்கம் நடத்தும் சிறுகதை & குறும்படப் போட்டி

இலக்கிய பீடம் நடத்தும் சிறுகதைப் போட்டி

காங்கிரஸ் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி

பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் அறியும் சட்டம் குறித்து விழிப்புணர்வு

தொழிலதிபர்களின் கனிவான கவனத்திற்கு!

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...