

மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் பெரும்பாலான கவுன்சிலர்கள், ஆர்.டி.ஓ. மற்றும் முக்கிய சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்கள நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள நாம் நேரில் கேட்டதில் அவர்கள் குடித்த தண்ணீரில் பெண்களின் லிப்ஸ்டிக் (உதட்டுச்சாயம்) போல் ஏதோ கிடந்தது என்று கூறினார்கள். அங்கிருந்த மருத்துவர்கள கேட்டதில் மாணவர்களின் நலக்குறைவுக்கு காரணம் இன்னும் துல்லியமாக தெரியவில்லை. மாணவர்கள் குடித்ததாக சொல்லப்படும் தண்ணீரை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர் . யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்தனர்.
பல மாணவர்கள் பள்ளிக்கு காலை உணவு சாப்பிடாமல் வந்திருந்ததும் நமது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம் காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது.