ஞாயிறு, 9 நவம்பர், 2008

வருங்கால மருத்துவரை வாழ்த்துவோம்

கலைகழகம் நடத்திய கிராம அளவிலான போட்டிகளில், பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்த நமது பரங்கிபேட்டை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி ஹபீபா ஜுலைக்கா ஜமாலுதீன் அவர்கள், சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் முதல் பரிசை வென்றார். பள்ளியில் நடைபெறும் அனைத்து தேர்வு மற்றும் போட்டியிலும் (தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டி\ கட்டுரை போட்டி) பெரும்பாலும் முதலிடம் பிடிக்கும் இந்த மாணவி, பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்விலும் பள்ளி முதல் மாணவியாக வந்து நமது ஜமாஅத் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கைகளால் சிறப்பு பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் மாநிலத்திலேயே முதலிடம் பெற முயற்சித்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சொல்லும் இந்த சகோதரி ஒரு டாக்டர் ஆகி தன் சமூகத்திற்கு சேவை புரிவதை தனது லட்சியக்கனவாக கொண்டுள்ளார். (இன்ஷா அல்லாஹ்).
கல்வி குழு சார்பாக நாம் பேட்டி எடுத்த எத்தனையோ சகோதரிகளிடம் மேற்கொண்டு படிக்கும் ஆர்வத்தையே அரிதாக நாம் காணும் நிலையில் இத்தனை உயர்ந்த லட்சியம் கொண்டு இயங்கும் இந்த சகோதரியின் பின்புலம் தான் என்ன என்று பார்க்க போனால் ..... அந்த சகோதரியை முழு அளவில் ஊக்கப்படுத்தி அவருக்காக தியாகங்கள் பல புரிந்து கனவு காணும் அவரின் அன்பு பெற்றோர்கள் தான்.

இவருக்காக நாம் செய்ய வேண்டியது அவரின் கனவு லட்சியத்திற்கு (சமுதாயத்தின் லட்சியமும் அதுதான்) நமது மதிப்பு மிக்க பிரார்த்தனைகளும் நல் வாழ்த்துக்களும் தான் இன்ஷா அல்லாஹ் .
செய்வோமா?

இறப்புச் செய்தி.

காஜியார் தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி அவர்களின் மகனாரும், மர்ஹூம் M.G.கவுஸ்மியான் அவர்களின் மருமகனாரும், முஹம்மது நெய்னா (சேட்டு), நிசார் அஹம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய அஹம்மது ஹுசைன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...