வியாழன், 9 பிப்ரவரி, 2012

பைத்துல்மால் கமிட்டி நிர்வாகிகள் அறிவிப்பு!


பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை புதிதாகப் பொறுப்பேற்க உள்ள புதிய தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது நேற்று வெளியிட்டிருந்தார். அதில் புதிதாக மேலும் இரு நிர்வாகிகளையும் இன்று அறிவித்தார். 

இந்நிலையில், பைத்துல்மால் எனப்படும் ஜமாஅத்தின் பொதுநிதிக் கருவூலத்தின் நிர்வாகிகள் பட்டியலை சற்றுமுன் வெளியிட்டார்.

பைத்துல் மால் கமிட்டி நிர்வாகிகள்:

தலைவர்: 
டாக்டர் எஸ். நூர் முஹம்மது.

பொருளாளர்: 
எம்.கே. கலிக்குஜ் ஜமான்

நிர்வாகிகள்:

ஐ. ஹபீப் முஹம்மது
எம். எம். முஹம்மது முராது
ஜி. நிஜாமுத்தீன்
எஸ். முஹம்மது அப்துல் காதர்
எஸ். ஏ. ரியாஜ் அஹமது
ஹெச்.எம். காமில்

ஜமாஅத் நிர்வாகிகள்: மேலும் இருவர் சேர்ப்பு

டாக்டர் S.நூர் முஹம்மது தலைமையிலான பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் மேலும் இரு நிர்வாகிகள் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
M.அப்துல் காதர் மரைக்காயர் உமரி (தவ்லத்துன்னிசா அரபிக் கல்லூரி முதல்வர்) துணைத்தலைவராகவும்,
வழக்குரைஞர் முஹம்மது ஹனிபா செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குட்டியானை - பைக் மோதல்: கோர விபத்து!

 பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வாரச் சந்தையிலிருந்து 15-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு சின்னூர் நோக்கி சென்ற குட்டியானை என்கிற சரக்கு வாகனம் சின்னூர் சுமங்கலி திருமண மண்டபம் அருகே உள்ள திருப்பத்தில் எதிரில் டிரிபிள்ஸில் வந்த ஒரு பைக் மீது மோதியதால் நிலை தடுமாறி சாய்ந்தது. இதனால் பைக்கில் வந்த மூவர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஜமாஅத் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டனர்.
மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் சிலரை 108 அரசு ஆம்புலன்ஸ் மற்றும் ஜமாஅத் ஆம்புலன்ஸில் சிதம்பரம் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

படங்கள்: ஜமான், முத்துராஜா

ஜமாஅத் நிர்வாகப் பட்டியல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டாக்டர் எஸ்.நூர் முஹம்மது, வரும் 12ந் தேதி தலைவராக பொறுப்பேற்க இருக்கின்றார். பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே யூகங்கள் இறக்கை கட்டி அலையிலும் – வலையிலும் பறந்து வந்தது. கடந்த சில தினங்களாக நடத்தப்பட்டு வந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு தனது சக நிர்வாகிகள் பட்டியலை டாக்டர் நூர் முஹம்மது இறுதி செய்துள்ளார். இந்நிலையில் டாக்டர் எஸ்.நூர் முஹம்மது அறிவித்துள்ள நிர்வாகிகள் பட்டியல்:-

தலைவர் : 
டாக்டர் S. நூர் முஹம்மது

துணைத்தலைவர்கள் :
M.S. அலி அக்பர்,
S. O. செய்யது ஆரிஃப் (அல்ஹாஸ்),
S. முஹமது அலி (Rtd. தாசில்தார்)
பொதுச்செயலாளர்:
O.முஹம்மது கவுஸ் (Rtd. ஆர்.ஐ)

செயலாளர்கள் :  
M. சுல்தான் அப்துல் காதர்,
H. ஷாஜகான்,
G.Md. அன்சாரி,
S. முஸ்தபா,
A. முஹமது ஹனீஃபா,
A. ஹபீபுல்லா கான்

பொருளாளர்:   
M. K. கலிக்குஜ் ஜமான்,

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...