ஞாயிறு, 27 ஜூலை, 2008

மிகச் சிறந்த விஞ்ஞானியாக வர ஆசை - பரங்கிப்பேட்டையின் இளம் எழுத்தாளர்கள் விருப்பம்.

எங்கேயும் எப்போதும் சிந்தித்தவர்களாகவே காணப்படுகின்றார்கள் எட்டாம் வகுப்பு படிக்கும் முஸ்தாக் சமீர், முஹமது அஸ்லம் என்கிற இரு சிறுவர்கள். இந்த சிறு வயதில் பல சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர்களின் விருப்பம், நோக்கம் எல்லாமே "மிகச் சிறந்த விஞ்ஞானியாக வரவேண்டுமென்பதே" என்று உறுதிபடக் கூறுகிறார்கள் கோரஸாக.

"குள்ள மனிதர்கள், மர்ம மாளிகை, மஞ்சள் நிலவின் மர்மங்கள்" என்று மர்மக் கதைகளை அதிகமாக எழுதிவரும் முஸ்தாக் சமீர், தன்னுடைய படைப்புகளில் கேடயக் குறிப்பாக (Disclaimer) "இவ்வுலகில் பேய் என்று எதுவுமில்லை, ரசிக்கத்தக்கவை என்பதற்காக மட்டுமே இப்பேய்கதை" என்று அடிகுறிப்பு இடுகிறார்.

புத்திசாலி நண்பர்கள், கண்ணன் ஆசைப்பட்ட சைக்கிள், The Thief (ஆங்கிலம்) என்று தன்னுடைய சிந்தனைகள கதைகளாக தருகிறார் முஹமது அஸ்லம். இவர் தன்னுடைய உற்ற நண்பனான முஸ்தாக் சமீரீனால் உந்தப்பட்டதாக (Inspired) குறிப்பிடுகிறார். இருவரும் சேர்ந்து நரியின் தந்திரம் என்கிற தலைப்பில் ஒரு கதை எழுதியிருக்கிறார்கள்.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...