பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 17 ஏப்ரல், 2013 0 கருத்துரைகள்!பரங்கிபபேட்டை: பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் குமாஸ்தா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரத்தில் புதைக்கப்பட்ட உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பரங்கிபபேட்ங்கிடை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக இருந்தார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடலூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரங்கிபபேட்டை அகரம் காலனி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை திரும்ப பெற்றனர்.
இதனையடுத்து நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மாட்டோம், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் மெத்தனம் காட்டுகிறது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அகரம் காலனி மக்கள் நேற்று மாலை 7 மணியளவில் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியில் திரும்பப்பெறப்பட்டது.
மேலும் வாசிக்க>>>> "குமாஸ்தா கொலை: சஞ்சிவீராயர் கோயில் தெருவில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234