பரங்கிப்பேட்டை: தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் பணி பரங்கிப்பேட்டை நியாய விலை கடைகளில் எளிமையுடன் நேற்று துவங்கியது. முறைகேடுகளை தவிர்க்க அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதல்வராக கடந்த 16ம் தேதி பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதாஇ ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனையொட்டி பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 525 ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணி, ஆயிரத்து 360 நியாய விலை கடைகளில் நேற்று காலை துவங்கியது.
இத்திட்ட துவக்க விழாவில் ஆடம்பரம் கூடாது; அரசியல் பிரமுகர்கள் எவரும் பங்கேற்கக்கூடாது எனவும், இலவச அரிசி வழங்கும் பணியில் முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் இலவச அரிசி வழங்கும் பணி எந்தவித ஆடம்பரமும் இன்றி அமைதியாக துவங்கியது.