சனி, 11 ஜூன், 2011

சிங்கப்பூர் காசினோ: மிகத் தெளிவாக ஒரு சூதாட்ட பிசினெஸ் பிளான்!

சிங்கப்பூர்: உலக அளவில் சூதாட்டத்தின் (காசினோ) அதிகப்படி வருமானம் கிடைக்கும் ஸ்பாட், Macau (ஹாங்காங்) என்பது உண்மைதான். ஆனால்,  அங்கிருந்து 5 மணிநேர விமானப் பயணத்தில் உள்ள சிங்கப்பூர்தான்.

மார்னிங் ஸ்டார் நிறுவனத்தின் பொருளாதார அதிகாரி சாட் மோல்மன், “சிங்கப்பூரின் காசினோ மாடலைத்தான், தற்போது மற்றைய ஆசிய நாடுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. காரணம், இது ஒரு மிகத் தெளிவான, எளிமையான பிசினெஸ் பிளான். நஷ்டம் ஏற்படவே சாத்தியமில்லாத வர்த்தக செட்டப்” என்கிறார்.

அவர் குறிப்பிடுவது சிங்கப்பூரிலுள்ள மரீனா பே சான்ட்ஸ் கசீனோவை.

மரீனா பே சான்ட்ஸ் கசீனோ, சிங்கப்பூரிலுள்ள இரு பிரதான கசீனோக்களில் ஒன்று. இது அமெரிக்க முதலீடு. லாஸ் வேகஸ் சான்ட்ஸின் ஆசியப் பதிப்பு.  இரண்டாவது காசினோ, ரிசாட்ஸ் வேர்ல்ட் சிங்கப்பூர். இது மலேசிய முதலீடு.

சாட் மோல்மன் கூறியதுபோல, இவை இரண்டுமே மிக தெளிவான வியாபார முயற்சிகள்தான். இரண்டும், ஒன்றுடன் ஒன்று போட்டியிடவில்லை. மிக எளிமையாக, கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

அது எப்படி?

மிகச் சுலபம். இரு நிறுவனங்களும் இலக்கு வைக்கும் கஸ்டமர்கள் வெவ்வேறு. மரீனா பே சான்ட்ஸ் இலக்கு வைப்பது, கன்வென்ஷன் ரக கஸ்டமர்களை. பிசினெஸ் மீட்டிங்களுக்கான இடவசதி, ஹெ-என்ட் ரெஸ்ட்டாரென்ட் என்று இவர்களது உலகம் தனியானது.

எல்லாமே குரூப் கஸ்டமர்கள்தான் இவர்களது இலக்கு. காட்டில் தொலைந்துபோன ஆட்டுக்குட்டிபோல, எப்போதாவதுதான் ஒரு தனிநபரைக் காணமுடியும்.

ஆனால், ரிசாட்ஸ் வேர்ல்ட் இலக்கு வைப்பது குடும்பங்களை. இங்கு கன்வென்ஷன் குரூப்களைக் காண முடியாது. தீம் பார்க், அந்த விளையாட்டு. இந்த விளையாட்டு என்று குடும்பம் குடும்பமாகக் கவர்வதுதான் இவர்களது பாணி.

இப்படி தம்மிடையே போட்டியில்லாமல் கஸ்டமர்களைத் தமக்கிடையே பங்கி்ட்டுக் கொள்ளும் வர்த்தகங்கள், மிக அபூர்வம். அதனால்தான் சிங்கப்பூரின் காசினோ மாடலைப் பின்பற்ற மற்றைய ஆசிய நாடுகள் விரும்புகின்றன.

இரு நிறுவனங்களின் குறிக்கோளும் ஒன்றே. சிங்கப்பூர் என்ற நாட்டின் குறிக்கோளும் அதுவே. அது என்ன குறிக்கோள்? உல்லாசப் பயணிகளிடமிருந்து சைட்-ட்டராக்காகப் பணம் சம்பாதிப்பது. இதில் ‘சைட்-ட்ராக்காக’ என்பது முக்கியம். காரணம், அது மாறினால், வேறு சாயம் பூசப்பட்டுவிடும்.

உதாரணமாக, அமெரிக்காவின் லாஸ் வேகஸை, அல்லது ஹாங்காங்கின் மக்காவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இரு இடங்களிலும் சூதாட்டம் சைட்-ட்ராக்காக இல்லை. பிரதான வர்த்தகமே அதுதான். அப்படியான தோற்றம், காலப்போக்கில் பல கஸ்டமர்களை அங்கிருந்து ஒதுங்க வைத்துவிடும்.

வேறு ஒரு நகரம் காசினோவுக்குப் புகழ்பெறத் தொடங்கினால், கஸ்டமர்களின் ஒருபகுதி அங்கே போய்விடுவார்கள். வேறு ஒரு பகுதியினருக்கு, இந்த செட்டப்பே அலுத்துப்போய், வேறு இடங்களை நாடத் தொடங்கிவிடுவார்கள். (கடந்த வருடம் லாஸ் வேகஸின் கசீனோ வருமானம், 2009ம் ஆண்டு வருமானத்தில் 74 சதவீதம்தான்!)

ஆனால், சிங்கப்பூருக்கு வருபவர்கள் சூதாட மாத்திரம் வருவதில்லை என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றது சிங்கப்பூர் அரசு. வருபவர்களுக்கு மற்றைய ஆப்ஷன்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு டிப்பிக்கல் உல்லாசப் பயணியின் ‘பார்க்க வேண்டிய பட்டியலில்’ காசினோவும் ஒன்று.

பட்டியலில், இதைவிட வேறு விடயங்களே அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படுகின்றது.

இந்த இரு காசினோக்களுக்கும் வருட டேர்ன்ஓவர், 3 பில்லியன் டாலர். வருமானத்தை விடுங்கள். இரு காசினோக்களும் சிங்கப்பூரில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டபின், உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை 20% அதிகரித்திருக்கின்றது.

மொத்தத்தில், நிறுவனங்களுக்கும் சந்தோஷம்! அரசுக்கும் ஆனந்தம்!!

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெரு, மர்ஹும் முஹம்மது அப்துல் காதர் மரைக்காயர் அவர்களின் மகளாரும், பீர்கான் அவர்களின் மனைவியும், முஹம்மது முராது, நகுதா மரைக்காயர், ஜாபர் அலி ஆகியோரின் சகோதரியும் ஆகிய ரோஜா (எ) கவுஸ் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை பகல் 12 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுவூன்.

ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பின்னர் தமிழக அரசின் கொள்கை முடிவிற்கு எதிரான முதல் தீர்ப்பு ஒன்றினை சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது. சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்ட சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திமுகவினரைப் பற்றிய பிரசாரத்துக்கு பயன்படும் வகையில் சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்திட்டத்தைத் தள்ளிப்போடும் வகையில் சட்டப் பேரவையில் சமச்சீர் கல்வி முறை (திருத்தச்) சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை மற்றும் பூந்தமல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மனோன்மணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதல் பெஞ்ச் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன், ஆர். கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், சமச்சீர் கல்விச் சட்டம் தொடர்பாக தமிழக அரசு கொண்டுவந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

அவருடைய உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர், சமச்சீர் கல்வி தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக மே மாதம் 22-ம் தேதிதான் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. பின்னர் மே 23-ம் தேதி நடத்தப்பட்ட கூட்டத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களுக்குப் பதிலாக, பழைய பாடத் திட்டத்தின்படி புத்தகங்களை அச்சடிக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

ஒரே நாளில் அமைச்சரவை இந்த முடிவை எடுத்தது எப்படி? இதுபோல் நிபுணர்கள் குழு ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் அனைத்துக்குமான பாடத் திட்டங்களை ஒரே நாளில் ஆய்வு செய்து சமர்ப்பிப்பது என்பதும் இயலாத காரியம்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் அவசரத்தில் எடுக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

மேலும், சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதா கொண்டுவருவதற்கான காரணம், உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

தமிழக அரசின் இந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படுமானால் 9 கோடி சமச்சீர் பாட புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவிடப்பட்ட ரூ. 200 கோடிக்கும் மேலான மக்களின் பணம் என்ன ஆவது?

பழைய பாடத்திட்டத்தின் கீழ் புதிதாக புத்தகங்களை அச்சடித்து, தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் அரசு பள்ளிகளுக்கும், 11 ஆயிரம் மெட்ரிக் பள்ளிகளுக்கும், 50 ஆங்கிலோ-இந்தியன் பள்ளிகளுக்கும், 25 ஓரியன்ட்டல் பள்ளிகளுக்கும் விநியோகிப்பது என்பது இயலாத காரியமாகும்.

ஏற்கெனவே 2010-11-ம் கல்வியாண்டில் பள்ளிகளில் 1-ம் வகுப்பு மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை நடமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இதை நீக்கிவிட்டு பழைய கல்வி முறையை கொண்டுவருவது என்பது, சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதுதான் என கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கே எதிரானதாக அமைந்துவிடும்.

எனவே, மாணவர் சமுதாயத்தின் நலனையும் கருத்தில் கொண்டு, பழைய கல்வி முறையை அமல்படுத்துவதற்கு இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது. தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி முறை (திருத்த) சட்ட மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.

இதன்படி, 2011-12 கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையையே அமல்படுத்த வேண்டும்.அதே நேரம், சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ அல்லது சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இந்த நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த பாட புத்தகங்களில் குறிப்பிட்ட அரசியல் கட்சியையோ அல்லது தனி நபரையோ முன்னிருத்தும் வகையிலான பகுதிகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான முக்கிய வழக்கில், அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவில் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

நன்றி: தினமணி

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...