தேர்தல் சின்னம்தான் கட்சியின் ராஜ முத்திரை. சிதம்பரம் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி, அவரை எதிர்த்து, எதிர்க்கட்சி ஒரு வன்னியர் வேட்பாளரை நிறுத்தினால் திமுகவில் உள்ள வன்னியர்கள் திமுக சின்னத்துக்குத்தான் வாக்களிப்பர்.
அதே மாதிரி தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை வெற்றி பெறச் செய்வது திமுக ஆட்சியை கைப்பற்றி கருணாநிதி கரத்தை வலுப்படுத்துவதாக கருத வேண்டும்.
சிதம்பரம் தொகுதியை திமுகவில் வன்னியரை வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பது உண்மைதான். அதனால் வன்னியர்களுக்கு வருத்தம் ஏற்படுவதும் உண்மைதான். ஆனால் திமுக, வன்னியர்களுக்கு மட்டும் சொந்தமல்ல. முதல் முதலாக இப்போதுதான் வன்னியருக்கு சிதம்பரம் தொகுதி கொடுக்கப்படவில்லை என செல்ல முடியாது. ஏற்கெனவே பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த பொன்.சொக்கலிங்கத்துக்கு 2 தடவை திமுகவில் சீட் கொடுக்கப்பட்டு ஒரு முறை வெற்றியும் பெற்றுள்ளார்.
கட்சி கட்டுபாடுதான் முக்கியம். ஸ்ரீதர் வாண்டையாருக்கு, சிதம்பரம் தொகுதியை ஒதுக்குவது என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது என்றால் மூமுகவுக்கும், திமுகவுக்கும் ஏற்பட்ட அரசியல் ஒப்பந்தமாகும்.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதர் வாண்டையாரை உறுப்பினரல்லாத திமுககாரராக திமுகவினர் ஏற்று பணியாற்ற வேண்டும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Source: Dinamani