பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 29 ஏப்ரல், 2013 0 கருத்துரைகள்!

தலைவர்தாம் தலைவர்தாம் தக்கோர் சொல்ல
  தகுமான பண்புடனே 'தோழர்' வேண்டும்
நிலைமாறா நியதிகளைப் புரிய வேண்டும்
  ஞாயங்கள் நேர்த்திகளும் தெரிய வேண்டும்
விலைபோகா வித்தகராய் விளங்க வேண்டும்
  வேந்தராகச் சத்தியம்தான் இலங்க வேண்டும்
அலைமேவும் கடல்போன்ற ஆர்ப்பு மின்றி
  அமைதியிலே ஆழியாக ஆள வேண்டும்

தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
  தக்கபடி பணிசெய்ய தேரும் ஆட்கள்
நிலைமறந்து போகாத நல்ல புத்தி
  நிதானத்தை மறவாமல் கொள்ளும் உத்தி
வலையெதிலும் சிக்காமல் வாழ்க்கைப் போக்கில்
  'வலை'ஞானம் கொண்டாலும் வலிமை என்பேன்.
கலைந்திடுமே இப்பதவி ஒற்றை நாளில்
  கருத்தான பதில்கூற மறுநாள் உண்டே!பணத்திற்குக் குனியாத உயரம் கேட்போம்
  பதவிக்கு வளையாத முதுகைக் கேட்போம்
இனங்காணும் உயர்வுக்காய் உழைக்க வந்து
   எப்படியும் நல்வழிக்கே அழைக்கக் கேட்போம்
சினமேற்றி தன்பணியை சாதிக் கின்ற
   சிறுமதியோர் துதிபாட்டுச் சேர்க்கைப் போக்கி
குணக்குன்றாய் எழுந்தபடி குழப்பம் நீக்கி
   கருத்தாலே ஈர்க்கின்ற கனிவு கொள்க!

பதவிகளை நாடாத பண்பு உள்ளம்
  படைத்தவனை மறவாத பான்மை கொண்டு
உதவிகளைச் செய்வதுவே உயர்த்தும் என்றே
   உரைக்கின்ற தோழமைகள் பேண வேண்டும்
எதுவரினும் தயங்காமல் எதிர்கொள் வீரம்
  எங்கேதான் தவறென்று ஆய்ந்தே ஏற்று
மதவெறியை இனவெறியை மாய்த்துக் காட்டி
  மடைமா(ற்)றும் சிறியோரை மீட்க வேண்டும்

கதியிங்கே தானேயென்ற கர்வம் இன்றி
  கடுகளவே நாமென்ற கல்வி பெற்று
சதிசெய்யும் சிறுமதியோர் சிந்தை வென்று
  சமுதாய நலம்பேணச் செய்தால் வெற்றி
புதிதாக குழப்பத்தைப் புனையும் தீயோர்
  பக்கத்தில் வாராமல் பார்த்துக் கொள்க
விதியாக வாய்ப்பதுவே பதவி யெல்லாம்
   விளையாட்டுப் பொருள்தானே இறையின் கையில்!
மேலும் வாசிக்க>>>> "யார் தலைவர்?"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234