புதன், 1 அக்டோபர், 2008

பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை

பரங்கிப்பேட்டையில் பெருநாள் தொழுகை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் காலை 8 மணிக்கு நடைபெற்றது. சரியான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இட வசதியால் இந்த ஆண்டு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. வழக்கத்தைவிட இவ்வாண்டில் பெண்கள் மிக அதிகமானோர் பங்குப்பெற்றனர். பெண்கள் தொழுகைக்காக ஷாதி மஹாலில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. தொழுகைக்குப் பிறகு அனைவரும் ஆரத்தழுவி தங்களுக்கிடையே மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

மின்(வெட்டு) வாரியத்தின் பெருநாள் பரிசு

வழக்கமாக மின்(வெட்டு) வாரியத்தின் மின்வெட்டு தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை இருக்கின்ற நிலையில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு சிறப்பு மின் வெட்டாக காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணிவரை வழக்கத்தை விட கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.

பெருநாள் சிறப்பு பக்கம் - பித்ரா வினியோகம்


பரங்கிப்பேட்டை பைத்துல்மால் கமிட்டியின் ஒருங்கிணைந்த ஃபித்ரா வினியோகம் (9-ஆம் ஆண்டு) மீராப்பள்ளி எதிரில் உள்ள மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடைபெற்றது. நேற்று இரவு பிறை புலப்படாததினால் பெருநாள் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டு இரவு 9 மணிக்கே அறிவிக்கப்பட்டது. இதனால் ஃபித்ரா வினியோகத்திற்காக இறைச்சி 11 மணிக்கு பிறகே தயாரானதால் அதன் பிறகே வினியோகம் செய்யப்பட்டது.

அதேபோன்று பரங்கிப்பேட்டை TNTJ சார்பில் நடைபெற்ற ஃபித்ரா வினியோகம் பெரியத்தெருவில் நடைபெற்றது. இங்கும் மேற்கண்ட தாமதம் ஏற்பட்டது. இதற்காக பெரியத் தெரு எங்கும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...