
பரங்கிப்பேட்டை: பாரளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று பரங்கிப்பேட்டைக்கு வருகைபுரிந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்.
அப்போது அவர் பேசியதாவது:
நாடாளுமன்ற அவையில் பேசுவதற்கான அனுமதி பெறுவதற்கே மனு கொடுத்து, மன்றாட வேண்டியிருக்கிறது. பிரதமர் இல்லாத அவையில் என்னைப் பேசச் சொன்னபோது, நான் மறுத்தேன். 'நாளை பேசுகிறேன்' என்றேன். ஆனால், 'இன்று நீங்கள் பேசவில்லை என்றால், இந்த அமர்வில் பேசவே முடியாது' என்றார்கள். அதிலும் எனக்கு ஒதுக்கப்பட்டது வெறும் ஐந்து நிமிடங்கள். என்னைப் போல் 'கடமைக்கு'ப் பேசக் காத்திருந்த 20 உறுப்பினர்கள் இருந்த அவையில் முடிந்த அளவுக்கு என் கருத்துக்களைப் பதிவு செய்தேன்.
அந்த முதல் பதிவின்போதுகூட பாபர் மஸ்ஜித் பிரச்சினை வ pரைந்து முடிக்கபட வேண்டும் என்று குரல் எழுப்பினேன்ற. நேற்றுகூட லிபரான் அறிக்கை குறித்து லாலு பிரசாத் தெரிவித்த கருத்தை தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஆதரவாக நடுநிலையான எனது கருத்தை நான் அங்கு வைத்தேன். இன்னும் தொடர்ந்து 5 ஆண்டுகள் முழுவதும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பேன் என உறுதிபட தெரிவித்தார்.