பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

திங்கள், 29 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

கவுஸ் பள்ளி தெருவில், மர்ஹூம் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், உஸ்மான் , ஹாஜா கமால், முஸ்தபா கமால், பஷீர் அஹமது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹும் சையத் தாஜுதீன் சாஹிப், இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மைத்துனருமான ஜியாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

ஞாயிறு, 28 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகிய இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டு விடவேண்டாம். இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

எங்கு விண்ணப்பிப்பது?

மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்

பிற பகுதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் படிவம் 18 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்

கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.

1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )

2. மதிப்பெண் சான்றிதழ்,

3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்

3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.ஆனால்
(மூல சான்றிதழை உடன் கொண்டுச்செல்லவேண்டும்)
சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.

மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.htmlதெரிந்துகொள்ளலாம்.
மேலும் வாசிக்க>>>> "தமிழக மேல் சபை தேர்தல்..(M.L.C)"

சனி, 27 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை நகரில் இடியோசை - மின்னல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை மட்டும் பெய்து வந்த சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது. இன்று காலை முதல் பழுது நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தும், நகரில் மின்வினியோகம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க>>>> "இடியோசை"

0 கருத்துரைகள்!

வட்டா தைக்காவில் முஹம்மது ஷரீப் அவர்களின் மனைவியும், ஹபீபுல்லாஹ் கான் அவர்களின் மாமியாரும் , பாஷா அவர்களின் சகோதரியும், ரஹ்மான் ஷரீப், இஸ்மாயில் ஷரீப், தெளலத் சரீப், அன்வர் ஷரீப், ஷாஜஹான் இவர்களின் தாயாருமான சக்கீனா பீவி அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் வட்ட தைக்காவில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

0 கருத்துரைகள்!

காஜியார் சந்தில் மர்ஹூம் M.A.கவுஸ் மியான் அவர்களின் மகனும், மர்ஹூம் அலி கவுஸ் அப்துல்லாஹ் அவர்களின் மருமகனுமான அப்பாஸ் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். நேற்று (26-04-2010) மாலை 4 மணியளவில் வாத்தியாப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

வெள்ளி, 26 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

"பொய்த்து மெய்க்கும்
மெய்த்து பொய்க்கும்
பொய்யா மெய்யா மழை"

என்று தமிழ் கூறும் நல்லுலகின் கிராமங்களில் வழக்கில் இருக்கும் மழை குறித்தான சொலவடைகளில் இதுவும் ஒன்று. நேற்று நண்பகல் சுமார் 12 மணிக்கு தொடங்கிய மழை, தூறலாக தொடங்கி பலத்த மழையாக இப்போது வரை நீடித்து வருகிறது. மழையினையொட்டி மாவட்ட நிர்வாகம் இன்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. நகரினை வலம் வந்த நமது நிருபர், தனது கேமரா கண்ணால் "க்ளிக்" செய்த மழைக்கால படங்கள் நமது வாசக அன்பர்களின் பார்வைக்கு.மேலும் வாசிக்க>>>> "தொடர்கிறது பலத்த மழை"

0 கருத்துரைகள்!

பி.முட்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை சனிக்கிழமை பரங்கிப்பேட்டை உட்பட சிதம்பரம் தாலுக்காவில் உள்ள புவனகிரி, கிள்ளை, பிச்சாவரம், சாத்தபாடி, சாமியார்பேட்டை, புதுச்சத்திரம், பெரியப்பட்டு, கீரப்பாளையம் பு.முட்லூர், தீர்த்தாம் பாளையம், பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் செல்வசேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க>>>> "மின்சாரம் நிறுத்தம்"

புதன், 24 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

வண்டிக்கார தெருவில்,மர்ஹீம் ஹாஜி.கபீர்கான் சாஹிப் அவர்களின் மகளாரும்,
மர்ஹீம் முஹம்மது ஹுசைன் அவர்களின் மனைவியும், மர்ஹும் கவுஸ் ஹமீத் அவர்களின் தாயாரும், மர்ஹும் பாஷா என்கிற அப்துர் ரஹிம் அவர்களின் மாமியாரும், முஹம்மது அன்சாரி, தமிஜுதீன் அவர்களின் பாட்டியாருமாகிய சபியா பீவி அவர்கள் மர்ஹீம் ஆகிவிட்டார்கள் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

0 கருத்துரைகள்!

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மழையின் ஆதிக்கத்திற்குட்பட்டு வந்த நிலையில் வட மாவட்டங்களில் மட்டும் அதிகளவில் மழை இல்லாமலே இருந்து வந்தது, இந்நிலையில் அவ்வப்போது பெய்து வந்த மழை மீண்டும் நள்ளிரவு முதல் தொடங்கியது தொடர்ந்து இன்று காலையிலும் பெய்து வருகின்றது.

மழையின் காரணமாக பரங்கிப்பேட்டையிலுள்ள கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன. மேலும் காஜியார் தெருவில் சாலை அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் இம்மழையின் வருகை அப்பணியினை பின்னுக்கு தள்ளி இருக்கின்றது.

இதற்கிடையில் தமிழக அரசு நமது கடலூர் மாவட்டம் உட்பட ஐந்து மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வாசிக்க>>>> "மீண்டும் மழை"

செவ்வாய், 23 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

கருணாநிதி சாலையில் மர்ஹும் காதர் சுல்தான் அவர்களின் மகனாரும், மர்ஹும் முஹம்மது காசீம் அவர்களின் மருமகனுமாகிய பாபு என்கிற அப்துல் ரஹீம் மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவல்: sky News
மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

ஞாயிறு, 21 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்ததில் நீடிப்பதாக சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த மழை நிலவரப்படி மாநிலத்திலேயே அதிகபட்சமாக நமதூர் பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பு, அவினாசி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. எனினும் நேற்று காலை முதல் லேசான தூறலை தவிர அதிகளவில் மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் வாசிக்க>>>> "தொடரும் மழை..!"

சனி, 20 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!தமிழக அரசின் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை 9.00 மணி முதல் கும்மத்பள்ளி தெரு பள்ளிக்கூடத்தில் நடந்தது. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவர்கள், கிள்ளை மற்றும் புதுச்சத்திரம் மருத்துவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மாலை வரை நடைப்பெற்ற இம்மருத்துவ முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மேலும் வாசிக்க>>>> "சிறப்பு மருத்துவ முகாம்"

0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.


நன்றி: தினமணி

மேலும் வாசிக்க>>>> "கண் தானம்"

வெள்ளி, 19 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மேலும் வாசிக்க>>>> "இறப்புச் செய்தி"

புதன், 17 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!
0 கருத்துரைகள்!
0 கருத்துரைகள்!அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் தொடங்கியது இந்த வருடத் தியாகத் திருநாள் தொழுகை.

காலை 7:30 மணிக்கு மவ்லவி ஷேக் ஆதம் மஹ்ழரி ஆற்றிய பேருரையில் ஹஜ்ஜின் சிறப்புகளையும், நபி இப்ராஹீம் அவர்களின் வாழ்க்கையையும் அழகிய முறையில் கூறினார்.

மவ்லவி அப்துஸ் ஸமது ரஷாதி முதல் ரக்அத்தில் "ஷப்பிஹிஸ்மா...என தொடங்கும் "சூரத்துல் அஃலா"-வும், இரண்டாவது ரக்அத்தில் "ஹல்லத்தாக்கா...என தொடங்கும் "சூரத்துல் காஷியா" ஓதி பெருநாள் தொழுகையை நடத்தினார். மீராப்பள்ளி இமாம் முஜிபுர் ரஹ்மான் உமரி அரபி உரையும், துஆ-வும் செய்தார்.

நேற்று-இன்று-நாளை (?) என்று பரங்கிப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டங்கள் இருந்திட்ட போதிலும், இன்றைய தினம் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்ற தொழுகைக்கு பின்னர் பாரம்பரிய உற்சாகத்துடனும் அளவிலா சந்தோஷத்துடனும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமனுடன் வாழ்த்துக்களுடன் அன்பை வெளிப்படுத்தி கொண்ட நிகழ்வு, வெளிநாட்டு வாழ் சகோதரர்களுக்கு கிட்டாத ஒரு பாக்கியம் தான் எனலாம்.

தியாகத் திருநாள் தொழுகையினையொட்டி மீராப்பள்ளி நிர்வாகம் வழக்கம் போல் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது. மின்சாரம் தடைப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக மின்சார வினியோகம் ஜெனரேட்டர் மூலமே நடைப்பெற்றது.

வாசக அன்பர்கள் அனைவர்களுக்கும் mypno.com சார்பில் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்.

படம்: novian, pnojamaath group
மேலும் வாசிக்க>>>> "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்...!"

சனி, 13 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!
கடந்த சில நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் இருந்த மீன் பிடி விசைப்படகுகள் நேற்று முதல் கடலுக்குள் சென்றன வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்களை மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் எனமாவட்ட நிர்வாகம் அறிவுறித்திருந்தது. இதனால் கடந்த வாரம்முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடந்த 7ம் தேதி இரவு''ஜல்'' புயல் சென்னை - நெல்லூருக்குமிடையே கரையை கடந்தது நேற்று முதல் மீன் பிடிக்க விடுக்கபட்டிருந்த எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் விலக்கிக் கொள் ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து மீனவர்கள் விசைப் படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
மேலும் வாசிக்க>>>> "மீன் பிடிக்க......"

வெள்ளி, 12 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!பரங்கிப்பேட்டை கலிமா நகரில் விஷதேனீக்கள் தாக்கியதில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையறிந்த பரங்கிப்பேட்டை தீயனைப்புதுறையினர் விரைந்துவந்து விஷதேனீக்களை அழித்தனர்.

தேனீக்கள் கொட்டியதில் இரண்டுக்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க>>>> "தேனீக்கள் கொட்டியது..."

வியாழன், 11 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!


கடலூரில்லிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ள பெரியகுமட்டி கிராமம் அருகே வயல்வழியில் இருக்கும் பனைமரத்தில் சில இடங்களில் விஷவண்டுக்கள் கூடுக்கட்டி இருந்தன இவை அந்தவழியாக செல்பவர்களுக்கு தொந்தரவுக்கொடுத்து வந்தன இதனைஅறிந்த பரங்கிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்துச்சென்று விஷ வண்டுக்களை அழித்து பொதுமக்களை வண்டுக்களின் கடியில்யிருந்து காப்பாற்றினர்.
மேலும் வாசிக்க>>>> "விஷ வண்டு"

திங்கள், 8 நவம்பர், 2010 1 கருத்துரைகள்!

கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய வட கிழக்குப் பருவ மழை புயலாக மாறி ''ஜல்'' என்றபெயரில் ஊர் உலா வந்தது நாம் அறிந்ததே, காலம் கடந்து தொடங்கிய பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்தாலும், சில இடங்களில் மழையின் சுவ்டே தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது.மழையை எதிர்பார்த்திருந்த விவசாயிகளுக்கு சமீபத்திய மழை மகிழ்சியை கொடுத்தாலும்,வரும்காலங்களில் விவசாயத்திற்க்கு தண்ணிர் தேவை அதிகமாகவே இருக்கும் எனநம்பலாம்.கடந்தகாலத்தில் புயலாக ஊருக்குவந்த ''நிஷா-லைலா''க்களால் பாதிப்பு அதிகமிருந்தாலும், விவசாயத்திற்க்கு தேவையான தண்ணீர் கிடைத்தது ஆனால் இந்தவருடம் தண்ணீரின் தேவை விவசாயிகளுக்கு கண்ணீரைதான் வரவைக்கும்.


பரங்கிப்பேட்டையை பொருத்தவரையில் நேற்று விடாமல் தூறிய மழை 10 மி.மீட்டரோடு தன் பணியை நிறுத்திக்கொண்டு வெயிலுக்கு வெள்ளைக் கொடி காட்டியது. இந்நிலையில் கடலூர் உட்பட 11 மாவட்டங்களின் கல்வி நிறுவனங்களுக்கு மழைக்காரணமாக தமிழகரசு விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க>>>> "ஜகா வாங்கியது ஜல்...!"

ஞாயிறு, 7 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள (ஜல் புயல்) காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் சென்னை அருகே இன்றிரவு கரையை கடக்கும் என எதிப்பார்க்கப்படுகின்றது...

இதன்காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது , நேற்றிரவிலிருந்து நமதூர் பரங்கிப்பேட்டையில் ஆங்காங்கே மழை பெய்ந்து வருகிறது. இதனால் கடலோரகிராமங்களில் மீனவர்கள் மீன்பிடிக்கசெல்லவில்லை.மாவட்டநிர்வாகமும்,முனெச்சரிக்கையாக ''புயல்-வெள்ள பாதுகாப்புக்காக தயார் நிலையில் தீயணைப்பு வீரர்களை வைத்துள்ளது.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்க்காக இன்றிரவு விமானநிலையம் செல்லயிருந்த ஹஜ் பயணிகள் புயல்-மழைக்காரணமாக முன்கூட்டியே செல்லயிருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க>>>> "மழை துளிகள்..."

வெள்ளி, 5 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்துவருகிறது.

இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக்கடலிலுருந்து மத்திய மேற்குவங்க கடலை நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு குறைந்ததோடு ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

தற்போது வங்கக்கடலில் புதிய புயல்சின்னம் உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரத்தில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன்காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு தினங்களுக்கு சூறைக் காற்றுடன், பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆந்திராவில் நாளை முதல் கண மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த குறைந்தக்காற்றழுத்த தாழ்வு நிலைக்கு ஜல்... என்று பெயரிடப்பட்டுள்ளது
மேலும் வாசிக்க>>>> "புதிய புயல் ஜல்....!"

புதன், 3 நவம்பர், 2010 0 கருத்துரைகள்!

மேலே உள்ள புகைப்படத்தை பார்க்கும்போது தங்களூக்கு புரிந்திருக்கும் இது ஏதோ ஒரு மருத்துவமனை என்று. ஆம் இது நீங்கள் நினைப்பதுப்போல நமது மாவட்டத்தின் தலைநகரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைதான்.

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளூக்கு சரிவர கவனிப்பு இல்லை என்கிற காரணத்தால் தான் தனியார் மருத்துவமனையை நோக்கி மக்கள் அதிகளவில் செல்கிறார்கள் , இவர்களின் ஓரே நோக்கம் நல்ல முறையில் நோய் குணமாகவேண்டும், எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை நோய் சரியானால் போதும் என்பதுதான்.

ஆனால் நோயாளிகளுக்கு சேவை செய்ய வேண்டிய மருத்துவமனைகளோ தங்களின் தேவையை (வேறென்ன பணத்தை தான்...) பூர்த்திசெய்வதில் தான் குறியாக உள்ளனர்.

நோயாளி படுக்கும் கட்டில் கால் உடைந்துப்போய்யிருக்கும் நிலையில், நோயாளியியை பற்றி சிறிதும் கவலைப்படாமல் , கட்டிலை மாற்றாமல்''கல்லையும்-கயிற்றையும் சேர்த்து கட்டிலை கட்டிருக்கிறார்கள்.

ஓ.....இவர்கள்தான் நோயாளியை வைத்து ''கல்லா'' கட்டுவதில் சிறந்தவர்களாயிற்றே?!

இந்நிலை என்று மாறும்?

மேலும் வாசிக்க>>>> "இந்நிலை என்று மாறும்?"

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234