தனது ஊரின் ஹிஸ்டரியோட first line கூட தெரியாமல் '' நோவியண்டா'' என்று கெத்து காட்டும் சராசரி பரங்கிப்பேட்டைகாரர் பற்றிய casual update இது.
லேசா ஏத்திகட்டின பாயேடு கைலி.. SEIKO (JAPAN) வாட்ச்,.. எகத்தாளமா ஒரு பார்வைன்னு ரவுஸா திரிஞ்ச நம்ம பழைய பரங்கியன், அதிரிபுதிரியாக மாறி வரும் கார்பொரேட் சூழலுக்கேற்ப இப்ப '' Technology Bro..!'' வாகி வரலாறு படைக்கிறான்.
என்னதான் உலகம் மாறினாலும், நம்மாளுகிட்ட மாறாத பண்புகள் ஏராளம் தாராளம்! Hash Tag போட்டு ஒன்னு ஒன்னா பார்ப்போமா ...
# சீனி சோறு, சானாக்கு சோறு வாங்கி, சீனி முடிச்சை நைஞ்சி போற அளவுக்கு சப்பி உறுஞ்சி தின்ற காலத்திலும் சரி, ''ரவாஹுல் புஹாரி 1432ஆவது ஹதீஸை பாருங்க '' என்று எல்லாத்துக்கும் ஆதாரம் கேட்கும் இந்த காலத்திலும் சரி .. மார்க்க விஷயத்துல sprite தெளிவு நம்ம ஆளு! எத்தனை கும்பலா வந்து குழப்பியடிச்சாலும் லைக் / டிஸ்லைக் போடாமல் தனக்கான ஸ்டேடஸ் ஐ அப்டேட் பண்ணி தானொரு individual மார்க்க மேதை ன்னு காட்டுறதுல நம்மாளை அடிச்சிக்க தமிழகத்துல ஏன், உலகத்துலேயே ஆள் இல்லை. குறிப்பாக, நாங்கதான் சமுதாயத்துக்கு விடிவு, விமோசனம் என்று கொடிபிடித்து வருபவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வொண்டர்புல்லாக வைக்கும் இவனை பார்த்து மத்த ஊர்கள் தெறி-யா பாக்கறது இவனுக்கே தெரியாது.
16 வயசிலேயே அடர் தாடி, கெண்டைக்கால் தெரிய கைலி, முகம் நிறைய புன்னகை, வாய் நிறைய சலாம், மொபைலில் லேட்டஸ்ட் இஸ்லாமிய Appகள் என்று ஒரு செம மார்க்கமாக போகிறது இன்றைய இளம் நோவியங்களின் டிரெண்ட்! அவர்களிடம் போய், இன்னும் விரலை ஆட்டுவது, தொப்பி போடுவது பற்றியெல்லாம் பற்றி பேசினீர்கள் என்றால்..... சாரி பாஸ் நீங்க ரொம்ப ஓல்ட்!! அவ்யிங்க அதுக்கும் மேல!!
# தாவதுக்கு நேரில் சொல்லாகட்டி அடுத்த ஜும்ஆ வரைக்கும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு ஆங்ரி பேர்டாக உலவும் நம்ம ஆள், யாராவது கஷ்டப்படுராயிங்கன்னு தெரிஞ்சா வேலை வெட்டிய விட்டுட்டு எப்டியாவது உதவி செஞ்சாத்தான் தூக்கம் வரும்ங்கற அளவுக்கு ரொம்ப ''இரக்கமுள்ள மனசுக்காரன்''. சுனாமியின் போது சுனாமியைவிட பாஸ்டாக செயல்பட்டு உதவி செய்து விட்டு ''சுனாமிக்கே சூப் கொடுத்தோமுல்ல... '' என்று ரணகளத்திலும் ரைமிங் போட்டுத்தாக்கியது முதல், தானே புயல், தற்போதைய மழை வெள்ளம் வரை - அரசாங்கமே சபாஷ் சொல்லும் அளவுக்கு - வஞ்சமில்லாமல் உழைப்பையும் பொருளையும் கொட்டுவது இவனது ஸ்பெசாலிட்டி. இதை இவன் இயல்புன்னே சொல்லலாம்..எல்லாத்தையும் செஞ்சிட்டு '' அல்லாஹ்வுக்காக..." என்று முனகிவிட்டு போட்டோவுக்கு கூட போஸ் கொடுக்காமல் அடுத்த வேலையை பார்க்க போயிடுவான் நம்ம ஆள்!!
# எத்தனை கலர் கலரா உணவு வகைகள் வந்தாலும், தால்ச்சா, பிரியாணி, பரோட்டா என்ற மூண்டு புள்ளிகளுக்கு நடுவில் பொசபொசவென்று பொறுமையா அமர்ந்து முறையாக கட்டுவதில் கிடைக்கும் ஆனந்தம் இவனுக்கு வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் எக்ஸ்ரா கொட்றா, / கோழி என்று நண்பனிடம் கேட்டு வாங்கி, ஒன்றுக்கு மேல் ஒன்றாக குறைந்தது மூன்று சஹன்களை அடுக்கி தாவத்தில் சாப்பிட்டு எழுந்தால்தான் ஒரு '' மீ ஹாப்பி இஹலே !'' உணர்வு வரும் இவனுக்கு!! ஆனால் இதல்லாம் இவன் பக்க்கதுல பிரண்ட்ஸ் இருக்கும் போது மட்டும்தான் ... தனியா தாவதுக்கு வந்தால் வச்ச சோறுக்கு மறுசோறு வாங்கிடாது நாம் புள்ளை ! அப்பப்ப, சவுதி/ துபாய் ரூமில் சாப்பிடும் '' சுய சமையல் சாப்பாட்டை'' இதனுடன் கம்பேர் பண்ணி பெருமூச்சு விட்டு செண்டிமெண்டாகியும் விடுவார்.
# கைலி மாதிரி Comfort எதிலேயும் வராது என்பது நம்மாளின் தீர்மானமான..மான.. நம்பிக்கை. மலையாளி மாதிரி தொடை தெரிய மடிச்சி கட்டும் பழக்கம் ரீஜண்டாக ( தற்போது ) மாறியுள்ளது. மெல்லிசான மார்டின் சட்டை போய், பீட்டர் இங்க்லாந்து, நேவிகேட்டர், பேசிக்ஸ் என்று வரிசையாக இவனது டேஸ்ட் மாறிக்கொண்டே இருக்கும். அப்ரசண்டிகள் போடும் அன்ப்ராண்டட் கூட போட்டு திரிய நம்மால் ரெடி ..அதுவும் அழகா அம்சமா பொருந்தும்ங்கிறது ஒரு Manufacturing Miracle.
# பரங்கிபேட்டையை நீட்டு வாக்காக க்ராஸ் பண்ண (கலிமாநகர் - பெரியகடை) பேசிகிட்டே நடந்தா மொத்தமா 13 நிமிஷம் 25 செகண்ட் கூட ஆவாது. TVS - 50 ல போனாக்கா ஒன்னேகால் நிமிஷம் அதிகம். ''பாத்ரூம் போக எதுக்குடா SUV காரு...? '' ன்னு வடிவேல் வாய்ஸ்ல கேட்கற மாதிரி நமாளுகிட்ட Splendor, முதலிய Low End பைக்கே இருக்கிறது இல்லை. Apache, Pulsar, FZ, BEAST என்று அதிவேக தேர்களை பைக்குன்ற பேருல அதிரி புதிரி வேகத்துல ஓட்டுவது நம்மாளின் அலாதி பொழுது போக்கு.. அதிலும், யமஹா வில் சைலன்சர் மப்ளரை கட்பண்ணிட்டு வேகமா ரைஸ் கொடுத்து அனைவரையும் அலறி எழ வைப்பதில் நம்மாளுகுக்கு ஒரு மீம்ஸ் போட்ட சுகம். " அதெல்லாம் தெரியாது அவன் கேக்குறதை வாங்கித்தாங்க ..தொல்லை தாங்க முடியல ..." என்று போனில் உத்திரவிடும் உம்மாமார்கள் அவர்களை கொஞ்சம் வாட்ச் பண்றது பின் விளைவுகளை தவிர்க்கும்ன்னு '' நம்ம ஆளே அப்புறம் அட்வைஸ் பன்னுவாப்ள!
# லேசா, மெண்ட்டல் சாடையில் இருக்கும் ஒருவனை முழுசா கிறுக்காக்கி அலைய விட்டு பார்ப்பதில் நம்மாளு ஒரு சோஷியல் க்ரூப்பாகவே செயல்பட்டார் முற்காலங்களில்.. 70, 80 களில் '' அப்புச்சி'' '' இன்னைக்கி செவ்வாகிழமை'' என்று கூவி கூவி கதறடிச்ச கொடுமை இன்று இல்லை என்பது ஒரு ஆறுதல்.
# ''ச்மிஷா'' ''அஷ்யிஸ்'' ''வஸ்ஷா'' என்று google ஐயே குழப்பி தேடிஎடுத்து தன பிள்ளைக்கு பெயர் சூட்டுவதில் வர வர நம்மால் கில்லாடியாகி வருகிறார். சுருக்கமாகவும் இருக்க வேண்டும் "ஸ், ஹ, ஷா, fa'' போன்ற எழுத்துக்களை கொண்டதாக இருக்கவேண்டும் என்று ரொம்ப பிரயத்தனப்பட்டு ஒரு பெயர் வைத்து விட்டு அர்த்தம் கேட்டால் சொல்ல ரெடியாக் இருக்கும் smaart city இவன்.!
# நம்மாளின் மிக சமீபத்திய பொழுதுபோக்கு வாட்ஸ் அப், டெலெக்ராம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 2 சுய கருத்துக்கள், 235 பார்வேர்ட் மெசேஜ்கள் என்று சகட்டு மேனிக்கு அடித்து விடாகட்டி அன்றைய பொழுது பொழுதாக இருக்காது. தான் பார்வேர்ட் பண்ணுவது, தானே பல க்ரூப்களில் 1148 முறை படித்த '' யுசுபுள்'' மெசேஜ் தானே என்றெல்லாம் அலட்டிகொள்ளாதாது நம்மாள் ஸ்பெஷாலிடி. கண்டிப்பா ஷேர் பண்ணுங்க என்பதை மெசேஜின் முன்னாலும் பின்னாலும் போட்டுவிடுவது அட்ராசிட்டி டச்.
அதே போல் ஊரில் ஒரு பிரச்சனை என்றால் பரபரப்பு ''to the power of ''n'' ஆகிவிடுவார். யார் என்ன கருத்து சொல்கிறார் என்று பார்த்து '' - தால்ச்சாவையும் இறைச்சி ஆனத்தையும் mixingaa கலந்து அடிக்கும்'' ஒரு நாசூக்கான blend - மாதிரி ஒரு சாடையில் - அதோடு தனது கருத்தையும் சாமர்த்தியமாக இணைத்து பதிவிட்டுவிட்டு எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் என்று 25 மைக்ரோ நொடிகளுக்கு ஒருமுறை செக் செய்து கொள்ளும் சுவாரசியன் நம்ம ஆள்.
# ஆசையா '' வாழைபழம் போட்டு பால்' குடிக்கலாம்னு கனவுல இருக்குற மாப்பிள்ளையை ''வாடா மச்சான் டீ குடிக்க..'' ன்னு முட்லூர் வரை கூட்டி செல்வான். போற வழியில சந்து பொந்துல்லாம் சுத்தி, கத்தி, ஹாரன் அடிச்சி, ஊளையிட்டு பயங்கர அலப்பறை பண்ணுவாப்ல .. '' ஏன்..ஏன் இப்டி? ன்னு கொலைவெறியில பொதுஜனம் முறைச்சு பாக்குறதை 'நாட்டமை படத்துல சாரட்டு வண்டியில வர்ற சரத்குமார்-விஜயகுமாரை 'கும்புடறேங்க எசமான்' சொல்லி மக்கள் பாக்குற மாதிரியே ஒரு எப்பெக்ட் பீலிங் இவயிங்களே self ஆ கொடுத்துப்பாயிங்க...
இவங்க மைண்ட் வாயிஸ் "தெறிக்க விட்றோமுள்ள..."ன்னு சத்தமா ஓடும். பொதுஜனம் மைண்ட் வாயிஸ் .. '' செஞ்சுருவோமா?'' ன்னு பல்ல கடிச்சிகிட்டு ஓடும். கொஞ்சம் பதமா பாத்து செய்ங்க ட்யூட்ஸ்!!
# நாலரை மணி கனகராஜ் பஸ்ஸை பிடித்து 10.30 க்குள் மண்ணடியை அடைந்து அங்கு வேலைகளை முடித்துக்கொண்டு மாலை நான்கு மணிக்கு கோயம்பேட்டில் எக்ஸ்பிரஸ் (எனும் பெரும்பொய்) எழுதப்பட்ட பேருந்தை பிடித்து பாண்டியில் 7.30 மணிக்குள் NT யை பிடித்து ஊரு வந்து சேர்வது இவனது பெரும் சாதனைகளில் ஒன்றாக இதுவரை தொடர்கிறது. காலேஜ் செல்லும் பசங்களுக்கு இப்பவும் அப்பாவும் 10 மணி துர்கா தான். ஞாயிறு இரவு.
# google க்ரூப்ஸ் yahoo க்ரூப்ஸ்க்குலாம் முன்னமே க்ரூப் கான்சப்ட் க்கு start-up கொடுத்தது நம்மாள்தான். குறைந்தபட்சம் ஒரு விஷயம் ஒத்துபோனாலே க்ரூப்ல வாலண்டியரா sink ஆகிடுவான். அதே போல, குறைந்தபட்சம் ஒரு விஷயம் பிடிக்கலன்னா விளக்கமா லெட்டர் எழுதிவச்சிட்டு எஸ்கேப் ஆகறதுல பெஸ்ட் நம்மாளு.
அதே மாதிரி, நீங்க எந்த க்ரூப் / சார்பு என்று உங்க கிட்ட பேச்சு கொடுத்து கண்டுபிடிப்பதிலும் நம்மாளு டபுள் கில்லி. நீங்க அவன்கிட்ட பேச ஆரம்பிச்ச 15ஆவது செகண்டுலையே கரீட்டா சொல்லிடுவான் நீங்க எந்த கொள்கை கொத்தமல்லின்னு..!!நீங்க அவனை விட smartஆ பேசி tough கொடுத்திங்கன்னா மெர்ஸலாகி போயி, ''இவன் நடுநிலையாளண்டா டோய் '' என்று எல்லாத்தையும் விட படு டேஞ்சரான க்ரூப் ஸ்லேட்டை உங்க கழுத்துல மாட்டி விட்டுட்டு போயிட்டே இருப்பான்.ஆக மொத்ததுல கருப்பு வெள்ளைன்னு ஆளுக்கு ஏதாவது ஒரு கலர் பெயிண்ட் அடிச்சி வகைபடுத்தி identity crisis நோய் தனக்கு வந்துடாமல் பத்திரமா பார்த்துப்பான் நம்ம ஆளு!! .
# முன்னாடில்லாம் கல்யாணம் காட்சி போன்ற விசேஷங்களில் மட்டுமே ' அந்த புள்ள' கிட்ட, 'கண்கள் இரண்டால் ...' நடந்த பேச்சுவார்த்தை, 80 களில் துவங்கிய இருபாலர் பள்ளிகளின் அதிரிபுதிரி வெ(ற்)றிக்கு பிறகு ' அஹளுக்கு இஹ' என்று இனிஷியல்லாம் போட்டு கீ-செயின், TDK-90 கேசட் என்று கொடுப்பதில் தொடர்ந்து, செல்போன் வரவுக்கு பின் டெக்னாலஜி டச்சில் காலநேரமின்றி கடலையோ கடலை போடும் தொழில் ஓஹ்ஹோ என்று வளர்ந்து வருகிறது. நம்மாள் ஒருத்தனுக்கு Basic Ringtone கால் வந்து ''சொல்லுடா மச்சான்'' என்று அழுத்தி சொல்லி நம்மை விட்டு விலகி போய் பேசினால் 82.5% அது ''டா'' இல்லை ''டீ'' தான் என்பது கன்பர்ம் ஆகிவிடும். முடுக்குகள், காடு, குளக்கரை என்று பலமணிநேரம் தொடரும் இந்த ஜில்பான்ஸ் அட்ராசிட்டி இளம் நோவியன்களுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்ப்பதாக இல்லை பரோஸ். "என்னப்பா இதல்லாம்? '' என்று கேட்டு பாருங்கள். உடனே தெய்வதிருமகன் விக்ரம் மோடுக்கு போயிடுவாயிங்க. வெவரமானவயிங்க .... !
என்ன நடந்தாலும் தான் உண்டு தன செல்பீ உண்டுன்னு க்ளிக்கி அதை ''போட்டோஷாப்பி'' முகநூலையே மெர்சல் பண்ணுவது தனி கதை. இந்த விஷயத்துல ஒரு க்ரூப்பாவே செயல்படுராயிங்க !!!
# இன்னும் நிறைய விஷயம் இருக்கு. ஆனா சத்தியமா தெரியும் இத படிக்கறதுக்குள்ள நம்மாளுக்கு பாதி நாக்கு தள்ளி போயிடும்...~!~!
ஆக மொத்தம் நன்மையும் தீமையும் கலந்து செய்த கலவையா நம்மாளு. அடுத்து வர வருஷங்கள்ல பவர் பிளான்ட், சைமா சாயப்பட்டறை என்று பல வித சவால்களை எப்படி சமாளிக்க போறாங்கிறதுதான் அவனுக்கே பதில் தெரியாத கேள்வி.!!!
-அபூ பிரின்சஸ்
புகைப்படங்கள்: அனைவரும் பரங்கிப்பேட்டை மண்ணின் மைந்தர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கபட்டவை. அனைவருக்கும் MYPNOன் நன்றிகள்.